டென்னிஸ்
ஜாம்பவான் ரஃபேல் நடால் தனது தனித்துவம் மற்றும் திறமையால் கடந்து வந்த டென்னிஸ் பயணத்தை தோல்வியுடன் முடித்துக் கொண்டார், ஸ்பெயின் அணி
டேவிஸ் கோப்பையில் நெதர்லாந்து அணியிடம்
2-1 என தோற்று வெளியேறியது. இதன் மூலம் தனது டென்னிஸ் பயணத்தை முடித்துக்கொண்டார்
ரஃபெல் நடால்.
22
முறை கிராண்ட்ஸ்லாம் வென்றவரான நடால், நெதர்லாந்தின் போடிக் வான் டி சாண்ட்சுல்ப்பிடம்
6-4 என்ற கணக்கில் தோற்றார்; ஸ்பெயினுக்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான கால் இறுதிப்
போட்டியின் முதல் ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற் செட் கணக்கில் முன்னிலை வகித்தார். ஆனால்
அவரது இந்த ஆட்டம் மலகாவில் கூடியிருந்த ஸ்பெயின்
ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது, ஏனெனில் ஸ்பெயினின் அதிர்ச்சிகரமான தோல்வியால்
உள்நாட்டுக் ரசிகர்கள் திகைத்துப் போனார்கள்.
தற்போதைய
விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் சம்பியனான கார்லோஸ் அல்கராஸ், தனது போட்டியை வென்றம்
போதிலும், ஆனால் அந்த வெற்றி ரஃபேல் நடால் தனது வாழ்க்கையில் மேலும் ஒரு போட்டியை விளையாட
போதுமானதாக இல்லை, ஏனெனில் அவர் இப்போது டென்னில் உலகின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக
ஓய்வு பெற்றுள்ளார்.
டேவிஸ் கோப்பை 2024 இன் அரைஇறுதியில் நெதர்லாந்தை எதிர்கொள்வதற்கு முன்பு ஸ்பெயினின் தேசிய கீதத்தின் போது அவர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்த ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
No comments:
Post a Comment