அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி
பெற்றுள்ளார். ட்ரம்பின் தேர்தல் வெற்றி உலக நாடுகளின் போக்கை
மாற்ற உள்ளது.
ட்ரம்பின்
வெற்றி இந்தியா - அமெரிக்கா மத்தியிலான உறவில் பெரிய அளவிலான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான் தற்போது முக்கியமான விஷயமாக உள்ளது. 47வது அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள நிலையில் அவருடைய கொள்கை மற்றும் முடிவுகள் பெரிய அளவிலான தாக்கத்தை இந்தியா - அமெரிக்கா மத்தியிலான உறவில் ஏற்படுத்தும். டிரம்ப்பின் சில முடிவுகள் இந்தியாவுக்குப் பெரிய அளவில் சாதகமாக இருந்தாலும், சில விஷயங்கள் கட்டாயம் பாதிப்பை ஏற்படுத்தும். உதாரணமாகச் சர்வதேச பிரச்சனைகளைக் களைவதில் தற்போது இந்தியாவின் கை ஓங்கியுள்ளது. இந்த
நிலையில் சீனா உடனான வர்த்தகம், மத்திய ஆசியாவில் ஈரான்,
இஸ்ரேல், காசா, லெபனான் போர்
பதற்றம், ரஷ்யா - உக்ரைன் போர் ஆகியவற்றில் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் கொள்கை நிலைப்பாடு சர்வதேச அளவில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் இதில் இந்தியாவும் பாதிக்கப்படும்.
டொனால்டு ட்ரம்ப் ஜனாதிபதியாகும்வேளையில்
அமெரிக்கா - இந்தியா மத்தியிலான வெளியுறவுக் கொள்கை, வர்த்தக உறவு, இரு நாடுகளும் இணைந்து செயல்படும் துறைகள், பகுதிகள் என அனைத்திலும் சில
பாதிப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரம்ப்
- நரேந்திர மோடி மத்தியிலான நட்புறவு உலகளவில் பாராட்டப்படுவது மட்டும் அல்லாமல், சமீபத்தில் ஒரு பாட்காஸ்டில் கூட ட்ரம்ப், மோடி சிறந்த நண்பர் என்று கூறினார், ஆனால் அடுத்த சில நாட்களில் நடந்த ஒரு பிரச்சார கூட்டத்தில் இந்தியா மீது வரி விதிப்பது பற்றிப் பேசினார். மொத்தமாக பார்க்கும் போது ட்ரம்ப்-ன் சீனாவுக்கு எதிரான
கொள்கையும், ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாடும் இந்தியாவுக்கு ஆதரவாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொனால்டு ட்ரம்ப்பும், பிரதமர் மோடியும் கடந்த ஆண்டுகளில் நல்ல நண்பர்களாகி விட்டனர். கடந்த முறை நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது
பிரதமர் மோடி, ட்ரம்ப்புக்கு ஆதரவாக பேசியிருந்தார். அதேபோல ட்ரம்ப் ஜனாதிபதியாக
இருந்தபோதும், மோடியுடன் நல்லுறவை பேணி வந்தார். அமெரிக்காவில் உள்ள மோடி ஆதரவாளர்களும் கூட ட்ரம்ப்புக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். அவருக்கு ஆதரவாக வாக்கும் சேகரித்து வந்தனர்.
கனடாவுடனான இந்திய
உறவு சீர்குலைந்து வரும் வேளையில் அமெரிக்காவுடனான
உறவை பலபடுத்த் வேண்டிய கட்டாய நிலையில் இந்தியா உள்ளது.
சீனாவும் மேலாதிக்கத்துக்கு எதிராக இந்தியா போராடும்போது அமெரிக்கா பக்க பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய
பிரதமர் நரேந்திர மோடி ட்ரம்புடனான
உறவை மிக நேர்த்தியாக வைத்திருந்தார். நரேந்திர மோடியை தனது நண்பர் என்று பலமுறை குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அதே நேரத்தில் இந்தியாவின் கொள்கைகளையும் விமர்சித்து வருகிறார்.இந்தத் தேர்தலில் பிரசாரத்தின்போது பிரதமர் இந்தியப்
பிரதாமர் மோடியின் பெயரை ட்ரம்ப் பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த ஆண்டு ட்ரம்ப் ஐரோப்பா மற்றும் ஆசியாவுக்கு செல்லும்போது பலதரப்பட்ட கூட்டங்களில், ஏதாவது ஒன்றில் நேரடி சந்திப்புகள் நடைபெறும். 2025-ல் ட்ரம்ப் இந்தியா செல்வார் அல்லது மோடியை அமெரிக்காவுக்கு வருமாறு அழைப்பு விடுக்கலாம். குடியேற்றம், வர்த்தகப் பற்றாக்குறை அல்லது இந்தியா - கனடா இடையேயான தூதரக உறவுகளில் விரிசல் என சிறு சிறு சிக்கல்கள் இருந்தபோதிலும் இந்திய - அமெரிக்க உறவு தொடர்ந்து இறுக்கமாக இருக்கும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பன்னுனை கொல்லும் சதித் திட்டத்தில் இந்தியாவின் அரசு ஊழியருடன் இணைந்து இந்தியரான நிகில் குப்தா பணியாற்றினார் என்று அமெரிக்க பெடரல் வழங்கறிஞர்கள் குற்றம்சாட்டினர். இந்த விவகாரத்தில் உள்ள குற்றச்சாட்டை சரிசெய்யுமாறு இந்தியாவை அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்தியா, இதுகுறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்
பிரச்சாரத்தின்போது ட்ரம்ப் அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று, குழந்தைகளுக்கான தானியங்கி குடியுரிமையை முடிவுக்கு கொண்டு வருவது ஆகும். ட்ரம்ப் பொறுப்பேற்கும்
முதல் நாளிலேயே இதற்கான நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரம்ப் அமல்படுத்தப்படவுள்ள குடியுரிமையை நன்கு கூர்ந்து கவனித்தால், அவரது அந்த உத்தரவு சட்டவிரோதமாக குடியேறிய குழந்தைகளுக்கு மட்டுமானதாக முடிந்துவிடாது. அது மேலும் பலரை பாதிக்கும்.
குறிப்பாக, இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும் பின்னடைவைஏற்படுத்தும். அத்துடன், 10 லட்சம் இந்தியர்கள் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து அதற்கான அனுமதியை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், ட்ரம்ப்பின் இந்த நிலைப்பாடு அவர்களுக்கு பாதகமாக அமையும். எனினும், ட்ரம்ப்பின் இந்தத் திட்டம் அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தத்தை மீறுவதால் அதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதியாக யாராக இருந்தாலும்.. அமெரிக்காவுடன் இந்தியா ஒரே மாதிரியான உறவையே பேணும். இப்போது ட்ரம்ப் இந்தியாவில் பாஜகவிற்கு நெருக்கம். கமலா ஹரிஸ் இந்தியாவிற்கு உறவு ரீதியாக நெருக்கம் என்றாலும்., ஆளும் பாஜகவின் கொள்கைக்கு எதிரானவர். அந்த வகையில் ட்ரம்ப் வருகை பாஜகவிற்கு சாதகம்.
டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபராவதால் மோடி ட்ரம்ப் உறவு இந்தியாவிற்கு சாதகமாக அமையும். டிரம்பிற்கு 4 வருடங்களுக்கு முன் மோடி பிரச்சாரம் செய்ததை மறக்க வேண்டாம். இரண்டு நாட்டு உறவு இன்னும் வலிமை அடையும்.ஆனால் இறக்குமதி - ஏற்றுமதி வரியில் டிரம்ப் கண்டிப்பானவர். இந்தியா அமெரிக்க பொருட்களின் இறக்குமதி வரியை குறைக்கவில்லை என்றால்.ட்ரம்ப் இந்திய பொருட்களின் இறக்குமதி வரியை ஏற்றுவார். இதனால் இந்தியாவில் பொருட்களின் விலை உயரலாம். அதேபோல் இந்தியா ஏற்றுமதி செய்வதும் சிக்கலாக மாறும். ட்ரம்ப் வரும் போதெல்லாம் டொலர் வலிமை அடைந்து உள்ளது. அப்படி நடந்தால்.. இந்தியாவிற்கு பொருளாதார சிக்கல் ஏற்படும். டொலர் வலிமை அடைந்தால்.. இந்தியாவில் சில பொருட்களின் விலை உயரும். தங்கத்தின் விலை குறையும். அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஆனால் இனி வரும் நாட்களில் டொலரின் மதிப்பு உயர்ந்தால் தங்கத்தின் விலை உயரும்.ட்ரம்ப் இந்தியாவின் அரசியல் நடவடிக்கைகளை எதிர்த்தது இல்லை. இந்தியாவின் உள்நாட்டு நடவடிக்கைகளை எதிர்த்ததே இல்லை.
ஆனால் பாதுகாப்பு ரீதியாக ட்ரம்ப் இந்தியாவிற்கு நெருக்கம். முக்கியமாக ஆயுத ஏற்றுமதி, சீன எதிர்ப்பில் இந்தியாவுடன் ட்ரம்ப் இருப்பார். சர்வதேச
அளவில் போர்களை தடுப்பதில் ட்ரம்ப் பெயர் பெற்றவர். இதனால்.. சர்வதேச அரசியலில் போர்கள் குறையலாம். அதனால் இந்தியாவிற்கு சாதகமாக மாறும் சூழல்கள் உள்ளன.
அமெரிக்காவின்
துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படும் ஜே.டி. வான்ஸ்
இந்தியாவின் மருமகனாவார்.
ஜோ
பைடன் தலைமையிலான அரசின் துணை ஜனாதிபதியான கமலா
ஹரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்த நிலையில் டொனால்டு ட்ரம்ப் இந்த தேர்தலில் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா சிலுக்குரி வான்ஸின் கணவரான ஜே.டி.வான்ஸ்,
துணை ஜனாதிபதியாகிறார்.
ஜேடி வான்ஸ் துணை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணியாக பணியாற்றும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமையை உஷா சிலுக்குரி வான்ஸ் பெறுகிறார்.
சிஐஏ தலைவராக பொறுப்பேற்கவிருக்கும் இந்திய வம்சாவளி காஷ் படேல்.
உயர் பதவிகளில் பணியாற்றிய குடியரசுக் கட்சியின் முன்னாள் பணியாளரான காஷ்யப் படேலின் பெயர் அடுத்த சிஐஏ இயக்குனராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அவர் பாதுகாப்பு செயலர் கிறிஸ்டோபர் மில்லரின் முன்னாள் தலைமை உதவியாளராக பணியாற்றியுள்ளார்.
எப்ப்ரவரி 25, 1980 இல் நியூயார்க்கில் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து குடியேறிய இந்தியப் பெற்றோருக்குப் பிறந்த காஷ்யப் படேல், குஜராத்தின் வதோதராவை பூர்வீகமாக கொண்டவர்.
அவர் ரிச்மண்ட் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் படிப்பை முடித்துள்ளார். லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் சர்வதேச சட்டத்தில் பட்டமும் பெற்றார்.
பட்டேல் ஆரம்பத்தில் சிறந்த சட்ட நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.
வழக்கறிஞரிலிருந்து பொதுப்பணிக்கு மாறிய படேல்
கொலை, போதைப்பொருள் கடத்தல் மற்றும் நிதிக் குற்றங்கள் உள்ளிட்ட சிக்கலான வழக்குகளைக் கையாண்ட அவர் மியாமி நீதிமன்றங்களில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்.
அல்-கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் போன்ற குழுக்களுடன் தொடர்புடைய தனிநபர்களின் விசாரணைகள் மற்றும் வழக்குகளுக்கு தலைமை தாங்கி, பயங்கரவாத வழக்கறிஞராக நீதித்துறையில் சேர்ந்ததன் மூலம் படேல் கூட்டாட்சி அரசாங்கத்திற்கு மாறினார்.
உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைக்கும் கூட்டு சிறப்பு செயல்பாட்டுக் கட்டளைக்கு (JSOC) நீதித்துறையின் தொடர்பு அதிகாரியாகவும் பணியாற்றினார்.
பின்னர், அவர் 17 புலனாய்வு சமூக அமைப்புகளை மேற்பார்வையிட்டு, ஜனாதிபதியின் தினசரி விளக்கத்தை வழங்குவதற்காக, தேசிய புலனாய்வு இயக்குனரின் முதன்மை துணைவராக நியமிக்கப்பட்டார்.
தேசிய பாதுகாப்பு கவுன்சில் மற்றும் பிற பாத்திரங்கள்
நூன்ஸ் மெமோ குறித்த படேலின் பணி டிரம்ப் நிர்வாகத்தில் முக்கிய நிர்வாகியாக பணியாற்ற வழிவகுத்தது.
பெப்ரவரி 2019 இல், அவர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் (NSC) ஒரு பணியாளராக சேர்ந்தார், பின்னர் பயங்கரவாத எதிர்ப்பு இயக்குநரகத்தின் மூத்த இயக்குநரானார்.
இந்த பணியில், ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் அல்-கொய்தா தலைவர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சிரிய அரசாங்கத்தால் பிடிக்கப்பட்ட அமெரிக்க பணயக்கைதிகளை பாதுகாப்பாக திருப்பி அனுப்புதல் உட்பட டிரம்பின் பல முக்கிய முன்னுரிமைகளை
நிறைவேற்றுவதை அவர் மேற்பார்வையிட்டார்.
பிப்ரவரி 2020 இல், படேல் தேசிய புலனாய்வு இயக்குநரின் அலுவலகத்திற்கு (ODNI) செயல் இயக்குநர் ரிச்சர்ட் கிரெனலின் முதன்மை துணைப் பணிக்கு மாறினார். அவர் பின்னர் பாதுகாப்பு செயலர் கிறிஸ்டோபர் மில்லரின் தலைமைப் பணியாளர் ஆனார்.
ஆனால் இது அப்போதைய சிஐஏ இயக்குநர் ஜினா ஹாஸ்பெல் மற்றும் அட்டர்னி ஜெனரல் பில் பார் ஆகியோரால் எதிர்க்கப்பட்டது. அவர்கள் படேலுக்கு தேவையான அனுபவம் இல்லை என்று வாதிட்டனர்.
தற்போது ட்ரம்ப் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றவுடன், படேல் சிஐஏ இயக்குநராக நியமிக்கப்படுவார் என்று பரவலாக ஊகிக்கப்படுகிறது.
அப்படி இருப்பின், படேல் அரசாங்கத்திற்குள் சீர்திருத்தங்கள், எஃப்.பி.ஐ.யின்
அதிகாரத்தைக் குறைத்தல், நீதித்துறையை மாற்றியமைத்தல் மற்றும் அரசாங்கத்தை கசியவிடுபவர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது போன்றவற்றை மேற்கொள்வார் என நம்பப்படுகிறது.
அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் ஆறு இடங்களில் இந்திய
அமெரிக்கர்கள் வெற்றி
அமெரிக்காவில் உள்ள பிரதிநிதிகள் சபைக்கான தேர்தலில் ஆறு இந்திய அமெரிக்கர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
விர்ஜீனியாவில், வழக்கறிஞர் சுஹாஸ் சுப்ரமணியம், இந்திய-அமெரிக்க சமூகத்திலிருந்து, மாநிலம் மற்றும் முழு கிழக்குக் கடற்கரையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு வரலாற்றைப் படைத்தார்.
சுஹாஸ் சுப்ரமணியம் தற்போது விர்ஜீனியா மாநில செனட்டராக உள்ளார். குடியரசுக் கட்சியின் மைக் கிளான்சியை தோற்கடித்தார்
சுஹாஸ் சுப்ரமணியம் முன்பு ஜனாதிபதி பராக் ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஆலோசகராக பணியாற்றினார் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தினரிடையே அறியப்பட்ட முகமாக உள்ளார்.
பிரதிநிதிகள் சபையில் அதிகரிக்கும் இந்திய அமெரிக்கர்களின் எண்ணிக்கைஅமி பெரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, ரோ கண்ணா, பிரமிளா
ஜெயபால் மற்றும் ஸ்ரீ தானேதர் ஆகிய ஐந்து இந்திய அமெரிக்கர்களை உள்ளடக்கிய 'சமோசா காகஸ்' காங்கிரஸில் அவர் சேர்ந்தார்.
தற்போதுள்ள இந்த ஐந்து இந்திய அமெரிக்க உறுப்பினர்களும் பிரதிநிதிகள் சபைக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மிச்சிகனின் 13வது காங்கிரஸ் மாவட்டத்திலிருந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக ஸ்ரீ தானேதர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 2023 இல் முதல் முறையாக வென்றார்.
ராஜா கிருஷ்ணமூர்த்தி இல்லினாய்ஸின் ஏழாவது காங்கிரஸ் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றி பெற்றார்.
கலிபோர்னியாவின் பதினேழாவது காங்கிரஸின் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ரோ கன்னாவும், வாஷிங்டன்
மாநிலத்தின் ஏழாவது காங்கிரஸின் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் காங்கிரஸ் பெண் பிரமிளா ஜெயபால் ஆகியோரும் மற்ற இந்திய-அமெரிக்க பிரதிநிதிகள் ஆவர்.
ரமணி
10/11/24
No comments:
Post a Comment