தமிழக சட்ட சபைக்கான தேர்தல் பரப்புரையை முதலமைச்சர் ஸ்டாலினும், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடியும் ஆரம்பித்து விட்டனர். பலமான கூட்டணியுடன் ஸ்டாலின் வலம் வருகிறார். கூட்டனிக் கட்சிகள் எவஏஏஇனதுன் ஆதரவு இல்லாமல் தனி ஆளாக எடப்பாடி பரப்புரையைத் தொடங்கிவிட்டார்.
சீமான்,
பிரேமலதா, ஓ.பன்னீர்ச்செல்வம் ஆகிய மூன்று
தலைவர்களும் ஸ்டாலினைச் சந்தித்தது தமிழக அரசியலில் பேசு
பொருளாகி உள்ளது. ராமதாஸ் உடல்
நலம் விசாரித்துள்ளார். யாருடனும் கூட்டணி இல்லை என்பதில் சீமான் உறுதியாக இருக்கிறார். ஆகியால் சீமானின் சந்திப்பு பேசப்படவில்லை.
பாரதீய
ஜனதாவால் ஓரம் கட்டப்பட்ட பன்னீரும் எடப்பாடியின் கூட்டனியில்
இருக்கும் பிரேமலதாவும்
ஸ்டாலினைச் சந்தித்ததால் பல விதமான யூகங்கள்
உருவெடுத்துள்ளன.
சீமான்,
ஒபிஎஸ், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் நேரில் சந்தித்துள்ளனர். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் போனில் பேசி உள்ளார். ஆனால் இவர்கள் அனைவருமே, மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து திரும்பி இருக்கும் முதல்வரிடம் நலம் விசாரித்தோம் என ஒரே மாதிரி
சொல்லி வருகிறார்கள்.
தமிழக
அரசியல் கட்சிகள் அனைத்தும் திமுக பக்கம் செல்வது திமுக.,விற்கும், திமுக கூட்டணிக்கும் மிகப் பெரிய பலமாக இருப்பதாக தோன்றும். இப்போது தமிழக அரசியல் களத்தில் அதிமுக, பாஜக தனித்து விடப்பட்டது. இவர்கள் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் மட்டும் உள்ளது.
பிரேமலதாவும்
பன்னீரும் திமுகவின் பக்கம்
சென்றுவிட்டால் வெற்றி
இப்போத்த்ர்ர் உறுதியாகி
விடும்.
திமுக
கூட்டணிக்கு அனைத்து கட்சிகளும் சென்றால் அது நிச்சயம் திமுக.,வை ஒரு ஆபத்தான,
நெருக்கடியான நிலையில் தான் கொண்டு போய் நிறுத்தும். காரணம், கூட்டணி சேர்ப்பது பெரிய விஷயம் அல்ல. கூட்டணியில் இருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் தேர்தலில் தொகுதிகல் ஒதுக்கப்பட வேண்டும்.
திமுக
தனிப் பெரும்பான்மையும் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் 234 தொகுதிகளில் திமுக மட்டுமே 180 முதல் 190 வரையிலான தொகுதிகளில் போட்டியிட வேண்டும். மீதமுள்ள 44 தொகுதிகளை தான் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுக்க முடியும். 2016 தேர்தலில் திமுக சின்னத்தில் போட்டியிட சம்மதித்த மதிமுக, விசிக போன்ற கட்சிகள் 2024ஆம் ஆண்டு நடைபெற்ற் நாடாலுமன்றத் தேர்தலில் திமுக
சின்னத்தில் போட்டியிட மறுத்து விட்டன.
இதனால்
திருமாவலவனுன் கட்சியும், வைகோவின் கட்சியும் சொந்த சின்னத்தில் போட்டியிடும்
வாய்ப்பு உள்ளது. கட்சியின் சின்னமும் அங்கீகாரமும் உறுதிப்படுத்தப்பட
வேண்டிய நிலை அவர்களுக்கு உள்ளது.
அவர்கள் இருவருகே குறைந்த பட்சம் தலா 10 தொகுதிகளை எதிர் பார்க்கிறார்கள். கொம்யூனிஸ்ட் கட்சிகளும் அதிக தொகுதிகளை எதிர் பார்க்கிறார்கள். மீதமுள்ள தொகுதிகளை தான் பாமக, தேமுதிக, ஓபிஎஸ் ஆகியோருக்கு கொடுக்க முடியும். அவர்கள் கேட்கும் தொகுதிகளை ஒதுக்க திமுக தலைமை மறுத்தால் கூட்டணியில் சேர மாட்டார்கள் அல்லது தொகுதிகள் குறைக்கப்படும் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறும்.
திமுகவில்
இருந்து வெளியேறும் கட்சிகள் அதிமுகவில் சேர வாய்ப்பு இல்லை. அவர்கள் விஜயின் கட்சியையே
தேர்ந்தெடுப்பார்கள்.
தொகுதி பங்கீடு உள்ளிட்ட அனைத்தும் சுமூகமாக முடிந்து, தேர்தலில் போட்டியிட்டாலும் திமுக மட்டும் 150 இடங்களுக்கும் மேலான இடங்களில் வெற்றி பெற வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும். இது நடக்கா விட்டால், ஆட்சியை காப்பாற்ற கூட்டணி கட்சிகள் சொல்லும் எந்த ஒரு நிபந்தனைக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய இக்கட்டான நிலைக்கு திமுக தள்ளப்படும்.
இதற்கிடையில்
ஜய்யின் தவெக கட்சி மதுரையில் ஆகஸ்ட் 25ம் திகதி
நடத்த திட்டமிட்டுள்ள மாநாட்டிற்கு பொலிஸ்
அனுமதி இதுவரை
அனுமதி வழங்கப்படாததால் அடுத்த கட்டமாகநீதிமன்ரம் செல்ல விஜய் தரப்பு தீர்மானித்துள்ளது.
மாநாடு
தொடர்பாக 20க்கும் மேற்பட்ட கேள்விகளை பொலிஸ்
எழுப்பியிருப்பதாக தெரிகிறது. மேலும் விநாயகர் சதுர்த்தி ஓகஸ்ட் 27ம் திகதி
வருவதால் பாதுகாப்புக்கு போதுமான கா பொலிஸார்
தேவை என்பதால் மாநாட்டுத் திகதியை மாற்றியமைக்க முடியுமா என்று கோரிக்கை
வைத்திருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த
ஆண்டு விக்கிரவாண்டியில் முதல் மாநில மாநாட்டை பிரம்மாண்டமாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடித்து விட்டது தவெக. அந்த மாநாட்டில் விஜய் பேசிய பேச்சும், மாநாட்டிற்கு திரண்ட இளைஞர்கள் கூட்டமும் பல மாதங்களாக தமிழக
அரசியலில் பேசு பொருளாக இருந்து வந்தது. இப்போது அடுத்த கட்டமாக தனது 2வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த விஜய் திட்டமிட்டுள்ளார். மாநாட்டிற்கான வேலைகள் படுதீவிரமாக கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது.
விக்கிரவாண்டி
மாநாட்டின் போது பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி முதலில் மாநாட்டிற்கு
அனுமதி மறுத்தனர். இதனால் விஜய் கட்சி மாநாட்டு தேதியை கடைசி நேரத்தில் மாற்றி, பொலிஸார்
விதித்த நிபந்தனைகளின் படி ஏற்பாடு செய்து, ஒரு வழியாக மாநாட்டை நடத்தினார்கள். அதனால் இந்த முறையும் அப்படி எந்த சிக்கலும் வந்து விடக் கூடாது என்பதில் விஜய் மிக தெளிவாகவும், உறுதியாகவும் இருப்பதால் மாநாட்டில் ஒவ்வொரு ஏற்பாடும் மிக கவனமுடன் செய்யப்பட்டு வருகிறது.
மாநாட்டிற்கு
12 முதல் 15 லட்சம் பேர் வரை வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் அது திமுக.,விற்கு நெருக்கடியாக இருக்கும். இதனால் மாநாட்டை நடத்த விடாமல் செய்வதற்காக தான் அனுமதி வழங்க போலீசார் இழுத்தடிப்பதாக தவெக தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. ஆனால் மாநாட்டிற்கு அனுமதி அளிக்க மறுப்பு தெரிவித்தாலும், தொடர்ந்து அனுமதி தர தாமதப்படுத்தினாலும், கோர்ட் உத்தரவுடன்
மாநாடு நடந்தாலும் அது பொலிஸார் மீதான மக்களுக்கு அதிருப்தி ஏற்படும். கெட்ட பெயரும் வந்து விடும். பொலிஸார் மீதான அதிருப்தியும், கோபமும் திமுக மீது திரும்பவும் வாய்ப்புள்ளது.விஜய்க்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கை தடுக்கவும் வேண்டும், அதே சமயம் மக்களின் அதிருப்தி தங்கள் பக்கம் திரும்பாமலும் இருக்க வேண்டும். அதோடு சமீப காலமாக தமிழகத்தில் நடக்கும் அடுத்தடுத்த மரண சம்பவங்களால் மக்களுக்கு போலீசார் மீது இருக்கும் அதிருப்தியும் அதிகமாகி விடக் கூடாது. இதற்கு திமுக., கட்சியும், தமிழக அரசும் அடுத்து என்ன செய்ய போகிறது? இந்த
நெருக்கடியான சூழலை திமுக எப்படி கையாள போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
ரமணி.
10/8/25
No comments:
Post a Comment