Thursday, August 14, 2025

தேர்தல் களத்தில் சூர்யா திமுகவின் புதிய வியூகம்


 

 தேர்தல் களத்தில்  சூர்யா

திமுகவின்  புதிய  வியூகம் 

தமிழக தேர்தல் களம் என்றும் இல்லாதவாறு சூடு பிடித்துள்ளது.  முதல்வர் ஸ்டாலினும், எதிர்க் கட்சித்தலைவர் எடப்பாடியாரும்  தேர்தல்   பரப்புரையை ஆரம்பித்துவிட்டனர்.

ஸ்டாலினுக்கு ஆதரவாக அமைச்சர் படை துணைநிற்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தனி ஒருவனாக வலம் வருகிறார. அதிமுகவின் முக்கியச்தர்களான அன்வர் ராஜா, மைத்திரேயன்  போன்றவர்கள் அதிமுகவில் இருந்து வெளியேறி திமுகவில் இணைகிறார்கள். அவர்கள் கட்சி மாறி ஸ்டாலினுடன்  போஸ் கொடுக்கும் வரை எடப்பாடிக்கு எதுவுமே தெரியாது. அதன்  பின்னர் அவர்களைக் கட்சியில் இருந்து  எடப்பாடி நீக்குகிறார்.

அதிமுக பாரதீய ஜனதா கூட்டனியால் நொந்துபோய் இருக்கும்  இன்னும் சிலர்  வெளியேறலாம் என்ற கருத்து பரவலாக அடிபடுகிறது.

ஏற்கெனவே பலவீனமான அதிமுக  மேலும் பலவீனமடைகிறது.

கட்டுக்கோப்பாகவும், பலமானதகவும் இருக்கும் திமுக மேலும் வலுவடைகிறது.

அதிமுகவின் கோட்டையான கோவையில்  திமுக காலூன்றிவிட்டது.  கோவையை முழுமையாகக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் திமுக இறங்க உள்ளது. தேர்தல் காலத்தில் நடிகர்களின் பங்கு அளப்பரியது. எல்லாக் கட்சிகலிலும் நடிகர்களும் சினிமாத்துறையைச் சேர்ந்தவர்க்களும் உள்ளனர்.  அரசியல் க்ட்சியை  உருவாக்கி தமிழகத்தில் வெற்றி பெற்ற ஒரே நடிகர் எம்.ஜி.ஆர். முதல்வர் ஆசையால் அரசியல் கட்சியை ஆரம்பித்த விஜய் சுறுசுறுப்பாக இயங்குகிறார்.

விஜய்க்கு எதிராக நடிகர் சூர்யாவைக் களம் இறக்க திமுக ஆலோசித்து வருகிறதாம். சூர்யாவின் அகரம் அறக் கட்டளையில் விழா அண்மையில் நடைபெற போது தமிழகமே வியந்து பார்த்தது. அகரம் அறக்கட்டளையினால்  உயர்ந்திருக்கும் மாணவர்களும், நல்ல பதவியில் இருப்பவர்களும் ஆற்றிய உரைகள் பலரையும் கலங்க வைத்தன.

கொங்கு மண்டலத்தில் .தி.மு.., -- பா.., கூட்டணியை வீழ்த்த, வரும் சட்டசபை தேர்தலில், கோவையில் நடிகர் சூர்யாவை களமிறக்க, தி.மு.., முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 1967, 1971, 1989, 1996, 2006, 2021 ஆகிய ஆறு சட்டசபை தேர்தல்களில் வென்று, தி.மு.., ஆட்சி அமைத்தது.   1967, 1971 ஆகிய இரு தேர்தல்களில் மட்டுமே  திமுக தொடர்  வெற்றியைப் பெற்றது.

அதற்கு முற்றூப்புள்ளை வைக்க வேண்டும் என்பதில்  ஸ்டாலின் குறியாக  இருக்கிறார். அப்போது கருணாநிதிக்கு எதிராக ஜெயலலிதா அரசியலில் பலமாக இருந்தார். இன்று ஸ்டாலினுக்கு எதிராக நிற்கும் எப்பாடி ஜெயலலிதாவைப் போல பலமானவர் அல்ல.

ஸ்டாலினின் ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் இருந்தாலும், பிரதான எதிர்க்கட்சியான .தி.மு.., பிளவுபட்டு, பலமிழந்து இருப்பதும், வலுவான கூட்டணி அமையாததும், தி.மு..,வுக்கு சாதகமாக உள்ளது.

ஆனால், கொங்கு மண்டலத்தில் .தி.மு.., -- பா.., கூட்டணி வலுவாக இருப்பதையும், விஜயின் கட்சியின் வாக்கு  10 சதவீதத்தை தாண்டும் என, பல கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

ஆனால், குறைந்தது 200 இடங்களில் வெல்ல இலக்கு வைத்துள்ள ஸ்டாலின், அதற்கு தடையாக வடக்கு, மேற்கு மாவட்டங்கள் இருக்கும் என நினைக்கிறார்.

டாக்டர் ராமதாஸ், மகன் அன்புமணி மோதல்   ஸ்டாலினுக்குச் சாதகமாக இருக்கிறது.

கொங்கு மண்டலத்தைப் பலப்படுத்துவதற்காகவே   நடிகர் சத்யராஜின் மகள் திவ்யாவை, தி.மு..,வில் சேர்த்தனர்.

அதை தொடர்ந்து, வரும் சட்டசபை தேர்தலில், கோவையில் ஏதாவது ஒரு தொகுதியில், நடிகர் சூர்யாவை களமிறக்க, தி.மு.., முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் சம்மதிக்காவிட்டால், நடிகர் சிவகுமார் குடும்பத்தில் ஒருவரை களமிறக்கும் திட்டத்தில் தி.மு.., இருப்பதாகவும் கூறப்படுகிறது.

 சிவகுமார், சூர்யா, ஜோதிகா, கார்த்தி என, நான்கு பிரபல நடிகர்கள் உள்ள குடும்பம் அது.

எனவே, இவர்களில் ஒருவர் கோவையில் போட்டியிட்டால், கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில், .தி.மு.., -- பா.., கூட்டணியை வீழ்த்தலாம் என ஸ்டாலின் நினைக்கிறார்.

நடிகர் விஜயால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கவும் சூர்யா உதவுவார் என தி.மு.., நினைக்கிறது. கொங்கு மண்டலத்தில் பிரதானமாக இருக்கும் கவுண்டர் இனத்தைச் சேர்ந்தவர் சிவகுமார் என்பதால், ஜாதி பின்புலமும், தி.மு..,வுக்கு கைகொடுக்கும் என கணக்கு போட்டு, இவ்விஷயத்தில் தி.மு.., காய் நகர்த்துகிறது.

  

No comments: