Sunday, August 10, 2025

ஸ்டாலின் பன்னீர் சந்திப்பு அதிர்ச்சியில் பாஜக‌

தமிழக அரசியலில் தனக்கென்று ஒரு பாணியில்  அமைதியாக அரசியல் செய்யும் பன்னீர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பால் டில்லி அதிர்ந்தது. மோடியும் அமித்ஷாவும் சொல்வதற்கெல்லாம் தலையாட்டிய . பன்னீர்ச்செல்வம் பாஜக தலைமையிலான கூட்டணியில் இருந்து வெளியேறினார்.

 இந்திய அரசியலை உன்னிப்பாக அவதானித்து வருபவர்கள்  எதிர்பார்க்காத முடிவை .ன்னீர்ச்செல்வம் எடுத்துள்ளார். பாஜக  கூட்டணியில் இருந்து வெளியேறிய  .பன்னீர்ச்செல்வம் ,தமிழக  முதல்வர் ஸ்டாலினைச் ந்தித்து தனது  வெறுப்பை வெளிக் காட்டியுள்ளார்.உடல் நலம் குன்றிய ஸ்டாலின்  வைத்தியசாலையில் ஒரு வாரம் சிகிச்சை பெற்றார்.  அவரின்  உடல் நலனை விசாரிப்பதற்காகவும் , அவருடைய சகோதரர் மு.. முத்துவின் மறவுக்கு அனுதாபம் தெரிவிக்கவும் ஸ்டாலினைச் சந்தித்ததாக  .பன்னீர்ச்செல்வம்  கூறினார். இந்தக் காரணங்கள் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

  .பன்னீர்செல்வம் தலைமையில் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் போது பா.. கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று ஒரு தரப்பினர் வலியுறுத்த, அதற்கு எதிராக மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில், பா.. கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் . பன்னீர்செல்வம் விலகுவதாக அறிவித்துள்ளார். . பன்னீர்செல்வம், பண்ருட்டி ராமச்சந்திரன் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பண்ருட்டி ராமச்சந்திரன் பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றபட்டுள்ளது.மேலும், இனி  தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இடம் பெறாது என்றார்.

திமுகவை வீழ்த்தும் குறிக்கொள் என்னவாயிற்று என  ஊடகவியலாளர்கள்  கேள்வி எழுப்பியதற்ற்கு

யாரையும் வீத்துவது நமது நோக்கமல்ல எல்லோரையும்

  வாழ்த்த வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள்  என பன்டிருட்டி கூறினார்.. தமிழ்நாடு முழுவதும் .பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். எந்தக் கட்சியுடனும் தற்போது கூட்டணி இல்லை. யாருடன் கூட்டணி என்பது குறித்து ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். கூட்டணியில் இருந்து விலகிய காரணம் அனைவருக்கும் தெரிந்ததுதான். பாஜக எங்களுக்கு என்ன செய்தது என்பதை நாடறியும் என்று    பண்ருட்டி ராமச்சந்திரன் தெரிவித்தார்.

பாஜக கூட்டனியில் இருந்துவெளியேறிய .பன்னீர்ச்செல்வம் திமுகவின் கொள்கைகளை ஆதரித்துப் பேசினார். 

பாரதீய ஜனதாவின்  கொள்கைகளை  மெளனமாக ஆதரித்து வந்த  .பன்னீர்ச்செல்வம் ஓர் இரவில்  மாறிவிட்டார்.

பாஜகவுடன் நெருக்கமாக இருந்து வருபவர் .பன்னீர் செல்வம். அண்ணாமலையின் முழு ஆதரவும் இவருக்குத்தான் இருந்து வந்தது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமியுடனான மோதலில் கடைசி வரை வெல்ல முடியாமல் போய் விட்டது ஓபிஎஸ்ஸால். காரணம், மத்திய பாஜக தலைமை கடைசியில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதால், ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டு விட்டார்.

 பாஜக அரசை விமர்சித்து அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார் .பி.எஸ். அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியதும்  திமுக அரசுக்குக் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

பன்னீரின் அந்த அறிக்கை வெளியான கையுடன் ஸ்டாலினைச் சந்தித்து அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.

எடப்பாடியை தமது வழிக்குக் கொண்டு வருவதற்காக பன்னீரை பகடைக் காயாகப் பயன் படுதிய மோடியும், அமித்ஷாவும் காரியம் கைகூடியதும்  அவரைக் கண்டுகொள்ளவில்லை. பொறுத்துப் பார்த்த பன்னீர் எரிமலையாக வெடித்து அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளார்.

 பன்னீருக்கு  அவரது சமூகத்தில்  தனி மரியாதை உள்ளது. வாக்கு வங்கியைப் பிரிக்கும் வல்லமை அவருக்கு உள்ளது.    கடந்த பாராளுமன்றத்  தேர்தலில் பன்னீர் தோல்வியடைந்தாலும் தனது செல்வாக்கை வெளிப்படுத்தினார்.இரண்டாவது  இடத்தைப் பிடித்து அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளினார்.

பன்னீரின் வெளியேற்றம் பாரதீய ஜனதாவுக்குப் பெரும் பாதிப்புத்தான். மோடியையும், அமித்ஷாவையும்  எது வித தங்கு தடையும் இன்றிச் சந்திக்கும் செல்வாக்கு பன்னீருக்கு உள்ளது. ஆகையால் அவர் வெளியெஏற மாட்டார் என பாரதீய ஜனதா தப்புக் கணக்குப் போட்டது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட பன்னீர்ச்செல்வம் உரிமை மீட்புக்குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

 மதுரையில் செப்டம்பர் 4-ஆம் திகதி நடைபெறும் மாநாட்டில் பல முக்கிய கொள்கை முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இந்த மாநாடு அதிமுக தொண்டர்கள் அனைவரும் இணையும் மாநாடாக அமையும். சில முடிவுகளை வெளியே சொல்ல முடியாது. அதிமுகவில் இணைவதற்கு நான் எந்த வித நிபந்தனையும் விதிக்கவில்லை. எனக்கு எந்த பதவியும் தேவையில்லை என்று ஏற்கெனவே கூறி இருக்கிறேன். மதுரையில் நடைபெறும் மாநாட்டுக்கு சசிகலாவுக்கும்,  டிடிவி திதேர்தக் நெருங்குகிற சமயத்தில் எதுவும் நடக்கலாம் என பன்னீர்ச்செல்வம் சொல்லியிருப்பதால் இப்போதைக்குப் பெரிய மாற்றம் எதுவும்  நடக்க சாத்தியம்  இல்லை.

ரமணி

2/8/25

  

No comments: