கனவுப் படத்தில் இருந்து வெளியேறினார் சுந்தர் சி
காரணம் தெரியாது தவிக்கும் திரை உலகம்
உலகநாயகன் கமலும், சூப்பர் ஸ்டார் ரஜினியும் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் அந்தக் காலத்தில் சூப்பரான வெற்ரிப் படங்கள் 1957 ஆம் ஆண்டு வெளியான அபூரவராகங்கள் படத்தில் சிறிய வேடத்தில் ரஜினி அறிமுகமானார்.
ஒரு சில காட்சிகளில் மட்டும் நடித்த ரஜினி பின்னர் கமலுக்கு இணையாகவும் போட்டியாளராகவும் மாறினார். கமல், ரஜினி இருவரும் உச்சத்தித் தொட்ட நேரம் 13 படங்களில் மட்டும் நடித்து விட்டு இனிமேல் இணைந்து நடிப்பதில்லை என அறிவித்தனர். இவர்களின் பிரிவு ரசிகர்களை வருத்தப்பட வைத்தது. பின்னர் ரசிகர்கள் மெளனமாக அதனி ஏற்றுக்கொண்டனர்.
கமல், ரஜினி இருவரும் சேர்ந்து நடிக்க வில்லை என்றாலும். அவர்களின் நட்பு பலமாக நீடித்தது. ஆனாலும், இருவரும் மீண்டும் இணைந்து நடிப்பதையே ரசிகர்கள் விரும்பினார்கள். சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் முயற்சி செய்தார்கள். நட்பு வேறு நடிப்பு வேறு என் பதில் இருவரும் உறுதியாக இருந்தார்கள்.
கடந்த நவம்பர் 5 ஆம் திகதி கமலஹாஸனின் ராஜ்கமல் இன்டர்நஷனல் நிறுவனம் வெறியிட்டச் அரிவிப்பு இந்தியத் திரை உலகை திரும்பிப் பார்க்க வைத்தது. ரஜினியின் 173 ஆவது படத்தை ராஜ்கமல் இன்ரர் நஷனல் நிறுவனம் தயாரிக்க சுந்தர் சி இயக்குவார் என்ற அறிவிப்பு திரை உலகை ஆச்சரியத்தில் மூழ்கடித்தது.
2027 ஆம் ஆண்டு பொங்கலுக்கு ரஜினியி 173 ஆவது படம் வெளியாகும். அந்தப் படத்தில் படத்தில் கமல் நடிக்கவில்லை. தக்லைவ் படத்தின் மூலம் கமலுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனை நிவர்த்தி செய்வதற்காகவே கமலுக்கு உதவி செய்ய ரஜினி நடிப்பதாக தகவல்கள் வெளியாகின.
எதிர் பார்க்காத இன்ப அதிர்ச்சியில் திரை உலகம் மூழ்கியது. இரண்டு நாட்களாக இந்தச் செய்தி தீயாக வலம் வந்தது.
பழைய இயக்குநர்களைக் கைவிட்டு, புதிய இயக்குநர்களை நாடிச் செல்லும் ரஜினி சுந்தர் சியின் இயக்கத்தில் நடிக்க இருப்பது பேசு பொருளானது. நடிகரைப் ப் அற்றிக் கவலைப் படாமல் திரைக்கதையை நம்பிப் படம் எடுப்பவர்களில் சுந்தர் சியும் ஒருவர். சிரிப்பு, சென்ரிமென்ற் போன்ரவற்றால் நசிகர்களைக் கட்டி வைக்கும் சூட்சுமம் தெரிந்தவர் சுந்தர் சி
அருணசலம் என்ற பிரமாண்டமான வெற்றிப் படத்தை ரஜினிக்குக் கொடுத்தவர் சுந்தர் சி. ரஜினியும் சுந்தர் சி யும் ஏற்கெனவே இணைந்து வெற்றிப் படத்தைக் கொடுத்தவர்கள்.
அன்பே சிவம் என்ற காவியத்தை கமலுகுக் கொடுத்தவர் சுந்தர் சி. கமலுடன் மாதவனும் அன்பே சிவம் படத்தில் நடித்தார்.
கமல், ரஜினி, சுந்தர் சி ஆகிய மூவரும் இணைந்து பலமுறை பேச்சு வார்த்தை நடத்திய பின்னரே இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கும். ஆகையால் 2026 ஆம் ஆண்டு பொங்கலை சினிமா ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர் பார்த்தார்கள்.
சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்புப்பு பேரிடியாக வந்தது சுந்தர் சியின் அறிவிப்பு.
தவிர்க்க முடியாத காரணங்காளைனால் ரஜினியின் 173 ஆவது படத்தில் இருந்து கனத்த இதயத்துடன் வெளியேறுவதாக சுந்தர் சி அறிவித்தார்.
கமலின் தயாரிப்பில் ரஜினியை இயக்குவது தனது வாழ்வில் மிகப்பெரிய கனவு என வும் சுந்தர் சி தெரிவித்தார்.
நாம் எதிர்பார்த்த எல்லாம் சில நேரங்களில் நடப்பதில்லை. நாம் மூவரும் பேசிக்கொண்டது என் வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம் எனவும் சுந்தர் சி தெரிவித்தார்.
மூன்று நாட்களுக்குள் என்ன நடந்தது என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் எழுந்தது.
சுந்தர் சி இயக்குவதை ரஜினி ஆரம்பத்திலேயே விரும்பவில்லை. கமலின் கட்டாயத்தினால்தான் ரஜினி ஒப்புக்கொண்டார் என சிலர் சொன்னார்கள். ஊகங்களும் யூகங்களும் இந்தப் பிரச்சனையை பூதாகரமாக்கின.
ஒதுக்கிய பட்ஜெட்டில், திட்டமிட்ட நாளில் படத்தி வெளியிடும் திறமை சுந்தர் சி யிடம் இருக்கிறாது. அதனால்தான் கலம் அவரைத் தேர்வு செய்தார்.
கனவுப் படத்தில் இருந்து சுந்தர் சி வெளியேறக் காரணம் சம்பளப்ப் இரச்சனை என சிலர் சொல்கிரார்கள். ரஜினிய இயக்கும் இன்ரைய இயக்குநர்களுக்கு 50 கோடி ரூபா கொடுக்கப்படுகிறதாம். சுந்தர் சிக்கு 10 கோடி ஒதுக்கப்பட்டதாம். அவர் அதிகமாகக் கேட்டதைக் கொடுக்க கமல் மறுத்துவிட்டாராம்.
கமலுடன் இணைந்து உதயநிதியின் ரெட் ஜெயுண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. கமலும், திமுகவும் இணையும் படத்தில் சுந்தர் சி இருக்கக்கூடாது என பாரதீய ஜனதா குட்டையைக் குழப்பியதாகவும் சில பதிவுகள் வெளியாகின. சுந்தர் சியின் மனைவி குஷ்பு பாரதீய ஜனதாவின் தலைவர்களில் இருவராக இருக்கிறார். ஆகையினால் சிலர் இதனை அரசியலாக்குகின்றனர்.
அரசியல் பதிவுகளால் ஆத்திரமடந்த குஷ்பு டுவிட்டரிஒல் காரசாரமான பதிவுகளை போட்டபின்னர் அதனை நீக்கினார்.
சுந்தர் சி சொன்ன இரண்டு கதைகளும் ரஜினிக்குப் பிடிக்கவில்லை. ரஜினிக்குக் கதை பிடிக்கும் வரை கதை கேட்போம் என சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கமல் தெரிவித்தார்.
ரஜினியிடம் சுந்தர் சி இரண்டு கதைகளைச் சொன்னாராம். இரண்டு கதைகளும் ரஜினிக்குப் ப்டிக்க வில்லையாம். அதனால்தான் சுந்தர் சி விலகினார் என சாரப்பட கமல் தெரிவித்துள்ளார்.
சந்திரமுகி போன்ற மாஸ் படத்தை ரஜினி விரும்புவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.
அப்படியான கதைகள் சுந்தர் சியிடம் கட்டாயம் இருக்கும். ஆனால், ரஜினிக்கு ஏன் பிடிக்கவில்லை என்பது கேள்விக்குறியாக உள்ளது.
10 வருடங்களுக்கு முன்னர் சுந்தர் சி இயக்கிய படம் பெட்டிக்குள் முடங்கி இருந்து இந்த ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வெற்றி பெற்றது. மூக்குத்தி அம்மன் 2 பட வேலையில் சுந்தர் சி மும்முரமாக இருக்கிறார். அடுத்ததாக விஷாலின் படத்தை இயக்க்ப் போகிறார்.அரண்மனை 5 கைவசம் உள்ளது.
ரஜினி நிராகரித்த கதைகளை சுந்தர் சி கட்டாயமாக வெளியிடுவார்.

No comments:
Post a Comment