Sunday, November 16, 2025

வாக்காளரைக் கவரும் சின்னத்தைத் தேடும் விஜய்

தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்குத் தயாரான விஜய்  தனது கட்சிக்குப் பொதுச் சின்னத்தை ஒதுக்கும் படி  தேர்தல் ஆணையத்திடம்  கோரிக்கை வைத்துள்ளார். தான் விரும்பிய 10 சின்னங்களை தேர்தல் ஆணையத்திடம் விஜய் சமர்ப்பித்துள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் கட்சிக்கு சின்னம்  மிக முகியமானது.  சகல தொகுதிகளிலும் ஒரே சின்னத்தில்தான் வேட்பாளர்கள்  போட்டியிட வேண்டும். இல்லை என்றால் மக்கள் குழம்பி விடுவார்கள்.

2026ம் ஆண்டின் துவக்கத்தில் நடக்க உள்ள தமிழக சட்டச  தமிழக சட்ட மன்றத் தேர்தலுக்கு சுமார்  ஆறு மாதங்கள்  இருக்கின்றன.  பெரிய கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம், அண்னா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன  ஏற்கெனவே பிரசாரத்தைத் தொடங்கி விட்டன. 2026 தேர்தல் அனைத்து கட்சிகளின் அரசியல் எதிர்காலத்தை  நிர்ணயிக்க போகும் தேர்தல் என்பதால்  தமிழக அரசியல் களமும் பரபரப்பாக மாறி உள்ளது.

தேசிய ,மாநில கட்சிகளுக்கு மாற்று நாங்கள் தான் என புதிதாக களமிறங்கி உள்ள விஜய்யின் தமிழக வெற்றுக் கழகத்துக்கு  இது தான் முதல் தேர்தல்., விஜய்யின் சினிமா செல்வாக்கு தமிழக அரசியலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அந்தக் கட்சியின் மீது  அரசியல் கட்சிகளும், மக்களும் கவனமாக தங்களின் பார்வையை பதித்துள்ளனர். திமுகவுக்கும் தவெகவும்மும் தான்  போட்டி என விஜய்  உசுப்பேத்தியுள்ளார். இதனை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏற்றுக்கொள்ளவில்லை.

தேர்தலை பொறுத்தவரை கட்சியின் சின்னம் என்பது மிக மிக முக்கியம் என்பதால் பொதுவான 10 சின்னங்களை குறிப்பிட்டு, அவற்றில் ஏதாவது ஒரு சின்னத்தை தரும் படி தேர்தல் கமிஷனிடம் தமிழக வெற்ரிக் கழகத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. கிறிக்கெற்  துடுப்பு, விசில், ஆட்டோ  உள்ளிட்ட 10 சின்னங்கள்  உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சின்னங்கள் தவிர்த்து, தேர்தல் கமிஷனால் பட்டியலிடப்பட்ட சின்னங்களில் ஏதாவது ஒன்றை தான் புதிய கட்சிககும், சுட்சைகளும்  கேட்க முடியும். அந்த குறிப்பிட்ட கட்சி அல்லது வேட்பாளர்கள் கேட்ட சின்னத்தை வேறும் யாரும் கேட்கவில்லை என்றால், முதலில் கேட்டவர்களுக்கு அந்த சின்னம் ஒதுக்கப்படும் என்பது தான் தேர்தல் கமிஷனின் விதி. ஆனால்  அரசியல் கட்சிகளை பொறுத்த வரை, மற்ற யாரும் கேட்காத சின்னமாக இருக்க வேண்டும் என்பதை தாண்டி, தேர்தலின் போது மக்கள் மனதில் எளிதில் பதியக் கூடியதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பார்த்ததும் தெளிவாக தெரியும் படி இருக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம். அப்போது தான் வாக்காளர்களின் கவனத்தை எளிதில் ஈர்த்து, வாக்குகளை பெற முடியும்.

விஜய் நடித்த பிகில் படம் தெலுங்கில் விசில் என்ற பெயரிலேயே வெளியானது. இந்த படம் அனைத்து மொழிகளிலும் ஹிட் ஆன படம். ஏற்கனவே "வி" என்ற எழுத்தில் துவங்கும் தொகுதியில் தான் விஜய் போட்டியிட போவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருவதால் விஜய்யின் "வி" சென்டிமென்ட் படி விசில் சின்னத்தை தவெக முன்னிலைப்படுத்தி கேட்க அதிக வாய்ப்புள்ளது. விசில் கிடைத்தால் அதை வைத்து ஈஸியாக பிரச்சாரம் செய்ய முடியும் என்று விஜய் தொண்டர்கள் விரும்புகிறார்கள். போக்கிரி படத்தில் ஆசினுக்கு விஜய் விசில் அடிக்கச் சொல்லித் தருவதையே கூட விளம்பரமாக்கி விட முடியும் என்பதும் ஒரு சுவாரஸ்ய எதிர்பார்ப்பு. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்   விசில் சத்தமும் விஜய்க்கு  உதவும் என்கிறார்கள்.

 கிகிக்கெற் துடுப்பும் மக்களிடம்  இலகுவில்  சேரக்கூடியவை. இந்த இரண்டு சின்னங்களுமே விஜய்யின் சினிமா ரசிகர்களை எளிதில் கவரும். மக்களின் மனதிலும் பதியும். அதேசமயம், ஆட்டோரிஷா சின்னத்தை ரசிகர்கள் விரும்பவில்லை. காரணம், ரஜினியின் பாட்ஷா ஆட்டோ என எதிர்த் தரப்பு கையில் எடுக்கும் என்பதால் ரசிகர்களுக்கு அதில் உடன்பாடு இல்லையாம்.

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்ரி பெற்று  விஜய் முதல்வராக வேண்டும் என்றால் தமிழகத்தில் வாக்கு வங்கி உள்ள கட்சியுடன்  சேர்ந்து தேர்தலில் போட்டியிட வேண்டும். விஜயுடன் சேர்வதற்கு பல கட்சிகள்  முயற்சி செய்தன. எல்லாம் தோல்வியில் முடிந்து விட்டன. பாரதீய ஜனதாவுடன்  கூட்டிணைந்திருக்கும் எடப்பாடியும் விஜய்க்குத் தூண்டில் போட்டார். அந்தத் தூண்டிலில் விஜய் சிக்க வில்லை.

தமிழக வெற்ரிக் கழகத்துக்கு 25 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக விஜய்க்குச் சொல்லப்பட்டிருக்கிறது.  இந்த 25 சதவீத வாக்கு வங்கியால்  முதல்வராகி விட முடியாது.

விஜயின் கட்சியில் விஜயைத் தவிர வேறு எவரும்  பிரபலமானவராக  இல்லை.  இன்றைய நிலையில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதீய ஜனதா ஆகியன ஒன்றிணைந்து  விஜயைத் தோற்கடிக்க  முயற்சி செய்யும் என்பது நிதர்சனம்.

விஜய் எந்த ,ஏடையில் ஏறினாலும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஸ்டாலினையும் , உதயநிதியையும் கேலியாகவும், கிண் டலாகவும், கோபத்துடனும் விமர்சிப்பார்.  விஜயின் அடுத்த படமான ஜனநாயகன் படத்தின்  ஒளிபரப்பு உரிமையை சன் நிறுவனம் வாங்கி உள்ளது. இது என்ன கூத்து என  வ்மர்ச்கர்கள்  கேட்கிறார்கள்.

ஜனநாயகன் படத்தின் தமிழக உரிமை வியாபாரத்தில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜனநாயகன். இப்படம் ஜனவரி 9‍ம் திக‌தி வெளியாகவுள்ளது. இதற்கான விளம்பரப்படுத்தும் பணிகளை படக்குழு தொடங்கி இருக்கிறது. இதன் தமிழக உரிமை யாருக்கு என்பதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. முதலில் இப்படத்தின் உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் கைப்பற்றி இருந்தார். தற்போது, அவர் கூறிய மாதிரி பணத்தைக் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் அவர் தவிர்த்து தமிழக உரிமையினை யாருக்கு வழங்கலாம் என்ற பேச்சுவார்த்தையில் படக்குழு இறங்கியிருக்கிறது. ‘காந்தாரா: சாப்டர் 1’ பாணியில் ஒவ்வொரு ஏரியா உரிமையினையும் தனித்தனியாக வாங்கிவிடலாம் என்று விநியோகஸ்தர்கள் விரும்புகிறார்கள். ஆனால், தமிழக உரிமையினை ஒட்டுமொத்தமாக ஒருவரிடம் தான் வழங்க வேண்டும் என்ற முடிவில் தயாரிப்பு நிறுவனம் இருக்கிறது.

ஏனென்றால், ஒட்டுமொத்த தமிழக உரிமை விற்பனையின் மூலம் சுமார் ரூ.100 கோடி வரை எதிர்பார்க்கிறது தயாரிப்பு நிறுவனம். தனித்தனியாக விற்பனை செய்தால் இந்தப் பணம் வருமா என்பது கேள்விக்குறியாக இருக்கும் என்பதால் ஒட்டுமொத்த உரிமையும் ஒருவருக்கே என்ற நிலையில் இருக்கிறார்கள். இதனால் ’ஜனநாயகன் உரிமை யாருக்கு என்பது விரைவில் தெரியவரும். 

ரமணி

16/11/25 

  

No comments: