சத்தியமாகச் சொல்கிறேன்
இவர்கள்
எனது நண்பர்கள்
நீங்கள்
நம்பினாலும்
நம்பாவிட்டாலும்
இவர்கள்
எனது நண்பர்கள்
வகை
வகையான நண்பர்கள்
வித
விதமான நண்பர்கள்
தினிசு
தினிசான நண்பர்கள்
புதிசு
புதிசான நண்பர்கள்
எனக்குத்
தெரிந்த நண்பர்கள்
என்னைத்
தெரிந்த நண்பர்கள்
ஒத்த
கருத்துடைய நண்பர்கள்
மாற்றுக்
கருத்துடைய நண்பர்கள்
கெளரவ
நண்பர்கள்
அகமறியும்
நண்பர்கள்
புகழ்
விரும்பும் நண்பர்கள்
பெருமை
பேசும் நண்பர்கள்
எல்லை
தாண்டும் நண்பர்கள்
கல்லை
எறியும் நண்பர்கள்
தொல்லை
தரும் நண்பர்கள்
பல்லைக்
காட்டும் நண்பர்கள்
முகம்
காட்டும் நண்பர்கள்
முகத்தை
மறைகும் நண்பர்கள்
அகம்பாவ
நண்பர்கள்
மதம் பிடித்த நண்பர்கள்
புரளி
பேசும் நண்பர்கள்
பரணி
பாடும் நண்பர்கள்
அரட்டை
அடிக்கும் நண்பர்கள்
குறட்டை
விடும் நண்பர்கள்
பாங்கான
படங்களுடன்
பவனி
வரும் நண்பர்கள்
சிங்காரச்
சிறுக்கிகளால்
சீரழியும்
நண்பர்கள்
தற்பெருமை
பேசும் நண்பர்கள்
தம்பட்டம்
அடிக்கும் நண்பர்கள்
பொய்பரப்பும்
நண்பர்கள்
புகழ்
பாடும் நண்பர்கள்
லைக்
போடாத நண்பர்கள்
வாழ்த்து
சொல்லாத நண்பர்கள்
அனுதாபம்
சொல்லாத நண்பர்கள்
பின்னூட்டம் போடாத நண்பர்கள்
எட்டாம்
வகுப்பை எட்டாதவனும்
பத்தாம்
வகுப்பை தாண்டாதவனும்
பல்கலைக்
கழக பட்டதாரி என
பந்தா
காட்டும் நண்பர்கள்
சத்தியமாகச்
சொல்கிறேன்
இவர்கள்
எனது நண்பர்கள்
நீங்கள்
நம்பினாலும்
நம்பாவிட்டாலும்
இவர்கள்
எனது நண்பர்கள்
சூரன்.ஏ.ரவிவர்மா
ஜீவநதி
ஆடி
2025

No comments:
Post a Comment