Saturday, April 11, 2026

கடைசிப்பந்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது லக்னோ


  ஐபிஎல் சீசனின் 15-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி ‘த்ரில் வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்ட்னஸ் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற லன்கோ முதலில் பந்து வீசியது.கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 4 க்கெட்டுகளை இழந்து  181  ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா கப்டன் ரஹானே 41, ரகுவன்ஷி 45, கிரீன் 32, பவெல் 39  ஓட்டங்கள் எடுத்தனர்.

182  ஓட்டங்கள் என்ற இலக்கை   விரட்டிய லக்னோ 15.5 ஓவர்களில்  7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்கள்  எடுத்து தடுமாறியது   மார்க்ரம் 22, மார்ஷ் 15, கப்டன் ரிஷப் பந்த் 10, நிக்கோலஸ் பூரன் 13, அப்துல் சமாத் 2, ஆயுஷ் படோனி 54, ஷமி 1 ஓட்டம்  எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி நான்கு ஓவரில் லக்னோ வெற்றிக்கு 54 ஓட்டங்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கானுடன்  இணைந்த   முகுல் சவுத்ரி அதிரடி காட்டினார். . கடைசி ஓவரில் லக்னோவுக்கு 14 ஓட்டங்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரின் முதல் பந்தில்  ஒரு ஓட்டம் எடுத்தார் ஆவேஷ். அடுத்த பந்தில் சிக்ஸர் விளாசினார் முகுல். 3, 4-வது பந்துகளில் ஓட்டம் எடுக்கபடவில்லி. 5-வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி பந்தில் பை  ஓட்டத்தின்  மூலம் தனது அணியை வெற்றி பெற செய்தார்.

27 பந்துகளில் 54 ஓட்டங்கள்  எடுத்திருந்தார் முகுல். இதில் 7 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளை அவர் அடித்தார்.. இந்த சீசனில் இது லக்னோ அணிக்கு 2-வது வெற்றியாக அமைந்துள்ளது. ஆட்ட நாயகன் விருதை முகுல் வென்றார். கொல்கத்தா அணி 4 ஆட்டங்களில் விளையாடி மூன்றில் தோல்வி அடைந்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் உடன் அந்த அணி விளையாடிய லீக் ஆட்டம் மழை காரணமாக இரத்தானது.

அதிகம் அறியப்படாத முகுல் சௌத்ரியின் கடைசி நேர அதிரடி ஆட்டமான, 27 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 54  ஓட்டங்கள், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிராக நம்பமுடியாத மூன்று விக்கெட் வெற்றியைப் பெற்றுத் கொடுத்தது. தந்தது .

   

No comments: