Wednesday, May 8, 2019

சென்னையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது மும்பை


.பி.எல். கிரிக்கெட்டின் முதலாவது பிளே ஃஓவ் சுற்றில் மும்பை   6 விக்கெற் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது மும்பை இந்தியன்ஸ். எட்டு  அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடித்த மும்பை இந்தியன்ஸ் (18 புள்ளிகள்), சென்னை சூப்பர் கிங்ஸ் (18 புள்ளிகள்), டெல்லி கேப்பிட்டல்ஸ் (18 புள்ளிகள்), ஐதராபாத் சன் ரைசர்ஸ் (12 புள்ளிகள்)   ஆகியன பிளே-ஆப்சுற்றுக்கு முன்னேறின.

  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்..சிதம்பரம் ஸ்டேடியத்தில்   நடந்த இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடித்த 3 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதியோர்களின் அணி என கடந்த வருடம் கேலி செய்யப்பட்ட  சென்னை  சம்பியனாகி  சாதித்தது. இந்த வருடத்தொடரொலும் முதல் அணியாக பிளேஃஓவ் சுற்றுக்கு  முன்னேறியது.  


நாணயச் சுழற்சியில் ஜெயித்த சென்னை அணியின் கப்டன் டோனி துடுப்பாட்டத்தித்  தேர்வு செய்தார்.   முதலில்  துடுப்பெடுத்தாடிய சென்னை நான்கு விக்கெற்களை இழந்து 131  ஓட்டங்கள் எடுத்தது.  மும்பை 18.3 ஓவர்கலில் நான்கு விக்கெற்களை இழந்து 132 ஓட்டங்கள் அடித்து  வெற்றி பெற்றது.

  சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பாப் டுபிளிஸ்சிஸ், ஷேன் வாட்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள். சென்னை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரை வீசிய மலிங்கா அந்த ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 2 ஆவது ஓவரில் பவுண்டரி விளாசிய பாப் டுபிளிஸ்சிஸ்,  அடுத்த ஓவரில் ராகுல் சாஹர் பந்து வீச்சில் மாற்று ஆட்டக்காரர் அன்மோல் பிரீத் சிங்கிடம்  பிடி கொடுத்து  ஆறு ஓட்டங்களுடன் வெளியேறினார்.


அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா ஜெயந்த் யாதவ் பந்து வீச்சில் அவரிடமே பொஇடி கொடுத்து  ஐந்து ஓட்டங்களில் வெள்யேறினார். . ஜஸ்பிரித் பும்ரா வீசிய ஒரு ஓவரில் 2 பவுண்டரிகள் அடித்த தொடக்க ஆட்டக்காரர் ஷேன் வாட்சன்,  குருணல் பாண்ட்யா பந்து வீச்சில் ஜெயந்த் யாதவிடம்  பிடி  10 ஓட்டங்களிடன் பெவிலியன் திரும்பினார்.  ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமாக இருந்ததால் சுழற்பந்து வீச்சாளர்கள்   கடும் நெருக்கடி கொடுத்தனர். பவர்பிளேயில் (முதல் 6 ஓவரில்) சென்னை அணி 32  ஓட்டங்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதைத்தொடர்ந்து அம்பத்தி ராயுடு, எம்.விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாகவும், அதேநேரத்தில் தவறான பந்துகளை அடித்தும் ஆடினர்.     12.1 ஓவர்களில் 65 ஓட்டங்களை எட்டிய போது எம்.விஜய் (26 ஓட்டங்கள், 26 பந்து, 3 பவுண்டரி) ராகுல் சாஹர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக்கால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு ஆட்டம் இழந்தார்.



இதனை அடுத்து கப்டன் டோனி, அம்பத்தி ராயுடுவுடன் இணைந்தார். ஜெயந்த் யாதவ் வீசிய ஒரு ஓவரில் டோனி, அம்பத்தி ராயுடு தலா ஒரு சிக்சர் தூக்கினர். 17.1 ஓவர்களில் சென்னை அணி 100 ஓட்டங்களை எட்டியது. மலிங்கா வீசிய ஒரு ஓவரில் டோனி அடுத்தடுத்து 2 சிக்சர்கள் விரட்டியடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். கடைசி ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சில் டோனி, இஷான் கிஷனிடம் கேட்ச் ஆனதும் நடுவர் அவுட் என்று அறிவித்தார். ஆனால் டெலிவிஷன் ரீப்ளேயில் அது நோ-பால் என்று தெரியவந்ததால் டோனி தொடர்ந்து விளையாட அனுமதிக்கப்பட்டார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நடப்பு சாம்பியன் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்கள் எடுத்தது. அம்பத்தி ராயுடு 37 பந்துகளில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ஓட்டங்களும் , கப்டன் டோனி 29 பந்துகளில் 3 சிக்சருடன் 37 ஓட்டங்களும்எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். மும்பை அணி தரப்பில் ராகுல் சாஹர் 2 விக்கெட்டும், குருணல் பாண்ட்யா, ஜெயந்த் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.


 132  ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா (4ஓட்டங்கள் ) தீபக் சாஹர் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையிலும், குயின்டான் டி காக் (8 ஓட்டங்கள்) ஹர்பஜன்சிங் பந்து வீச்சில் பாப் டுபிளிஸ்சிடம் பிடி கொடுத்தும்  ஆட்டமிழந்தனர்.

அடுத்து இஷான் கிஷன், சூர்யகுமாருடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது. 13.2 ஓவர்களில் அந்த அணி 100 ஓட்டங்களை எட்டியது. இஷான் கிஷன் 31 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன் 28 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்து களம் கண்ட குருணல் பாண்ட்யா (0) இம்ரான் தாஹிர் பந்து வீச்சில் அவரிடமே பிடிகொடுத்து வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினார்.

ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமாருடன் இணைந்தார். இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 18.3 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு 5-வது முறையாக முன்னேறியது. சூர்யகுமார் யாதவ் 54 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 71 ஓட்டங்களும் ஹர்திக் பாண்ட்யா 11 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 13 ஓட்டங் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

சென்னை அணியை, மும்பை அணி தொடர்ச்சியாக 4-வது முறையாக (கடந்த ஆண்டு உள்பட) வீழ்த்தி இருக்கிறது. தோல்வி கண்ட சென்னை அணிக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னொரு வாய்ப்பு உள்ளது. இன்று நடைபெறும் வெளியேற்றுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன், வருகிற 10 ஆம் திகதி  சென்னை அணி மோதும். அதில் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும்.

No comments: