Tuesday, December 9, 2008

வரலாற்றில் இந்தவாரம் நவம்பர்30 டிசம்பர்7





நவம்பர்30: மும்பைகுண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று இந்திய உள்துறை
அமைச்சர் சிவராஜ் பட்டீல் ராஜினாமா.புதிய உள்துறை
அமைச்சராக ப.சிதம்பரம் நியமனம்.

இலங்கை ஜனாதிபதி இத்தாலிசென்றார்.

டிசம்பர் 01 : இலங்கை ஜனாதிபதி துருக்கிசென்றார்.

இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபன தலைவராக மேஜர்
ஜெனரல் அசோகதெல்தெனியவின் நியமனத்துக்கு நீதிமன்றம்
அனுமதி வழங்கியது
கொக்காவில் கைப்பற்றாப்பட்டதாக அரசங்கம் அறிவித்தது.
தமிழகமுதல்வரின் கும்பமும்,மாறனின் குடும்பமும் சமரசமாகின.
டிசம்பர் 02: தமிழகநாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை
சந்தித்துஇலங்கையில் யுத்தநிறுத்தம் செய்யவேண்டுமென
வலியுறுத்தினர்.

அமெரிக்காவின் வெளியுறவுச்செயலராக ஹிலரியை புதியஜனாதி
பதி ஒபாமா நியமித்தார்

தாய்லாந்தில் எதிர்க்கட்சிகளின்போராட்டம்
தீவிரமடைந்ததனால் பிரதமர்கேரம் வை வாங்
சாவத் பதவிவிலக முடிவுசெய்தார்.

அமெரிக்கவெளியுறவிச்செயலர் கொண்டலீசா றைஸ் இந்தியாவு
க்குச்சென்றார்.

கனடாவின் சிறுபான்மை அரசைக்கலைப்பதற்கு எதிர்க்கட்சிகள்
ஒப்புதலளித்தன.

டிசம்பர் 03:கோவாவில் நடைபெற்ற 39 ஆவது இந்திய சர்வதேசதிரைப்பட
விழாவில் இலங்கை நடிகை மாலினி பொன்சேகவுக்குதங்கமயில்
விருது வழங்கப்பட்டது.

இலங்கையில் சிறையில் இருக்கும் ஊடகவியலாளர் திசநாய
கத்துக்கு எலலைகளற்ற ஊடக அமைப்பினால் ஊடகசுதந்திர
விருது வழங்கப்பட்டது.

அமெரிக்க ஜனாதிபதித்தேர்தலில்போட்டியிட்டு தோல்வியடைந்த
ஜோன் மக்கெய்ன் இந்தியாவுக்குச்சென்றார்.

பிரதமர் பதவியில் இருந்து விலகப்போவதாக தாய்லாந்துப்பிரதமர்
அறிவித்ததும் விமான நிலையத்தை முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்ட
க்காரர்கள் வெளியேறினர்.

டிசம்பர் 04:தமிழகமுதல்வர் தலைமையிலான தமிழக அரசியல் கட்சித்
தலைவர்கள் பிரதமர்மன்மோகசிங்கைச் சந்தித்து இலங்கையில்
யுத்தம் நிறுத்தப்படவேண்டும் என வேண்டுகோள்விடுத்தனர்.
வெளியுறவு அமைச்சர் பிரணாப்முகர்ஜி இலங்கை வருவதாக
தகவல் வெளியானது.
கொண்டலிசா ரைஸ் பாகிஸ்தான் சென்று பிரதமரையும் ஜனாதி
பதியையும் சந்தித்தார்.
இலங்கையில்மேல் நீதிமன்றத்துக்கு முதன்முதலாகபெண் நீதிபதியாக
எம்.நூருல்மைமூன் நியமனம்.
அண்ணாதிராவிடமுன்னாற்றக் கழகமும் மார்க்சிஸ்ட் கட்சியும் இணை
யப்போவதாக அறிவுப்பு வெளியானது.
ரஷ்யஜனாதிபதி மெத்வதே இந்தியா விஜயம்.
டிசம்பர் 05;பெற்றோல்விலை20ரூபாவால் குறைக்கப்பட்டாது.
கனாகராயான்குளம் கைப்பற்றப் பட்டது.
டிசம்பர் 07:வெளிநாட்டுக்குச் செல்ல அரியநேந்திரன் எம்.பிக்கு விமானநிலயத்
தில் அனுமதி மறுப்பு.

No comments: