
மேற்கு இந்தியத் தீவுகள், நியூஸிலாந்து அணிகளுக்கிடையில் நைபரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற மே. இந்தியதீவு அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. மேற்கு இந்தியதீவுகள்அணி முதலாவது இன்னிங்ஸில் 307 ஓட்டங்கள் எடுத்தது. சந்தர்போல் ஆட்டம் இழக்காது 126 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூஸிலாந்து அணி வீரர் ஓ பிரைன் 76 ஓட்டங்களை கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார். வெட்டோரி இரண்டு விக்கெட்டுகளையும் பிரங்களின் படல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். நியூஸிலாந்து அணி முதலாவது இன்னிங்ஸில் 371 ஓட்டங்கள் எடுத்து ஆரம் பத் துடுப்பாட்ட வீரரான ரிம் மக்கின் ரொஸ் 136 ஓட்டங்கள் எடுத்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய மக்கின் ரொஸ் முதலாவது சதம் இதுவாகும்.
மேற்கு இந்தியதீவுகள் அணியின் பந்து வீச்சாளர் எட்வேட் 87 ஓட்டங்கள் கொடுத்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தினார் தவ்லர் இரண்டு விக்கெட்டுகளையும் பவல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
மே. இந்தியத்தீவுகள் அணி 375 ஓட்டங்கள் எடுத்தது. அணித்தலைவர் கிரிஸ் கெய்ல் 197 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததால் இரட்டைச் சதத்தை தவற விட்டார். பட்டேல் ஐந்து 28 விக்கெட்டுகளையும் வெட்டோரி, பிராங்கின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், பிரெய்ன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
312 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 220 ஓட்டங்கள் எடுத்தது. ஆட்ட நாயகனாக கிறிஸ்கெய்ல் தெரிவு செய்யப்பட்டார். இரண்டு டெஸ்ட் போட்டிகளும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தன.
No comments:
Post a Comment