Monday, December 8, 2008

பிரிந்தகுடும்பம் இணைந்ததால் எதிர்க்கட்சிகளின் பிரசாரம் பிசுபிசுத்தது


முதல்வர் கருணாநிதியும் டாக்டர் ராமதாஸும் சந்தித்துப் பேசிய பின்னர் காடு வெட்டி
தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தது தமிழக முதல்வர் தலைமையிலான தமிழக அரசியல்கட்சித் தலைவர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தது, முதல்வர் கருணாநிதிக்கும்மாறன் குடும்பத்துக்கும் இடையிலான பகைø
ம முடிவுக்கு வந்தது ஆகியவை தமிழகத்தில்கடந்த வாரம் பரபரப்பான செய்திகளாகபவனி வந்தன.இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக
நடைபெறும் யுத்தம் உடனடியாக முடிவுக்குக்கொண்டு வரப்பட வேண்டும், இலங்கையில்யுத்தநிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டு
ம் என்று தமிழகத்தில் எழுந்த குரலுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை.அண்டை நாட்டில் நடைபெறும் உள்நாட்டுயுத்தத்தில் இந்திய அரசு தலையிடமாட்டாதுஎன்ற நம்பிக்கையில் இலங்கை அரசாங்கம்யுத்தத்தில் தீவிரம் காட்டி வருகிறது.இலங்கையில் நடைபெறும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற தமிழக மக்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கு மத்திய அரசுதயாராக இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங்நம்பிக்கையூட்டியுள்ளார்.
தமிழக முதல்வர் தலைமையிலான அரசியல்கட்சித் தலைவர்கள் பிரதமர் மன்மோகன்சிங்குடன்பேசும்போதும் விடயங்களை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்தித்தபோது கோடிட்டு காட்டியுள்ளனர்.தமிழகத்தில் இருந்து கொண்டு
அறிக்கை வெளியிடுவதாலும் கடிதம் எழுதுவதாலும் எதுவித பிரயோசனமும் இல்லை என்று டாக்டர் ராமதாஸ், தா. பாண்டியன் ஆகியோர்வலியுறுத்தி வந்தனர். இலங்கையில்நடைபெறும் யுத்தத்தை முடிவுக்குக்கொண்டுவர முடியுமா இல்லையாஎன்பதை பிரதமரிடம் நேரடியாகக்கேட்டு விடும் முடிவுடன் தான்தமிழக அரசியல் கட்சித் தலைவர்
கள் பிரதமரைச் சந்தித்துப் பேசினார்கள்.
தமிழக அரசுக்கு சாதகமான முடிவையே பிரதமர் அறிவித்துள்ளார்.வெளியுறவுத்துறை அமைச்சர்பிரணாப்முகர்ஜி இலங்கைக்குச்சென்று யுத்த நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுப்பார் என்ற பிரதமரின் உத்தரவாதத்தைப்பெற்றுக்கொண்ட திருப்தியில் முதல்வர் தலை
மையிலான குழுவினர் தமிழகம் திரும்பினர்.திராவிட முன்னேற்றக் கழகத்தினால் கூட்டணியில் இருந்து வெளியேற்றப்பட்ட பாட்டாளிமக்கள் கட்சி மீண்டும் கூட்டணிக்குள்இணையும் சாத்தியம் தென்பட்டுள்ளது.தமிழக முதல்வர் கூட்டிய சர்வகட்சி மாநாட்டில்டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டபோதுதிராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிமீண்டும் இணைவது உறுதியாகியுள்ளது.பாட்டாளி மக்கள் கட்சியின் பிரமுகரானகாடு வெட்டி குரு மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அவர்பிணையில் வெளிவர முடியாதவகையில் குற்றங்கள் அடுக்கடுக்காக சுமத்தப்பட்டன. . தலைவர்கள் இருவரும்கதைத்ததும் காடு வெட்டி குருமீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் செல்லாக்காசாகிவிட்டன.குருபிணையில் விடுதலை செய்யப்பட்டார்
அரசாங்கம் நினைத்தால் ஒருவரை சிறைக்கு அனுப்பலாம்.அதேவேளை, அவரது குற்றங்களை இல்லாமலும் செய்யலாம்என்பது இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.
தமிழக முதல்வரின் அரசியல்வாரிசு யார் என்ற கருத்துக் கணிப்பு முடிவுதினகரன் பத்திரிகையில் பிரசுரமானதால் முதல்வர், கருணாநிதி குடும்பமும் மாறன் குடும்பமும் பிரிந்தன. முதல்வரின் மகனான மு.க.அழகிரிக்கு அரசியலில் செல்வாக்கு இல்லை
என்று கருத்துக்கணிப்பு கூறியதால் மதுரையில்உள்ள மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள்வெகுண்டெழுந்து மதுரையில் உள்ள தினகரன்அலுவலகத்தை தீக்கிரையாக்கினர். அதையடுத்து கொழுந்து விட்டெறிந்த பகைமைஉணர்வு இப்போது தணிந்துவிட்டது.அரசியலில் சோர்வடையாத முதல்வர் கருணாநிதி குடும்பப் பிரச்சினையால் சோர்வடைந்தார். மாறன் குடும்பத்தின் பிரச்சினைகலைஞரின் அரசியல் வாரிசு ஸ்டாலின் தான்என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் ஸ்டாலினுக்கு எதிராக அரசியலில் அழகிரி
களமிறங்குகிறார் என்று ஊகம் என்பன முதல்வரை பெரிதும் பாதித்தன.முதல்வருடன் சமரசமாவதற்கு மாறன் குடும்பம் பெரு முயற்சி செய்தார். மாறன் குடும்பத்தை ஒதுக்கக்கூடாது என்பதில் ஸ்டாலின்உறுதியாக இருந்தார். மாறன் குடும்பத்தை அர
சியலில் இருந்தும் தொலைக்காட்சி உலகில்இருந்தும் இல்லாமல் செய்வதற்கு மு.கா. அழகிரி பெரு முயற்சி செய்தார்.இப்போது மாறன் குடும்பத்துடன் உறவைபுதுப்பித்ததனால் தனக்கு எதிரான பிரசாரத்தைமுடக்கியுள்ளார் முதல்வர் கருணாநிதி. காங்கிர
ஸுக்குள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கு குறைவடைந்துள்ளது. இழந்த செல்வாக்கை மீண்டும்பெறுவதற்கு பிரதமருடனான சந்திப்பும்மாறன் குடும்ப உறவும் உதவி செய்யும்.நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின்போது
தமிழகத்தின் சக்திமிக்க சன் தொலைக்காட்சியின் சேவைகள், தினகரன், மாலை முரசுஎன்பவற்றின் ஆதரவும் கண்டிப்பாகத் தேவை.
பிரிந்த குடும்பம் ஒன்றானது தமிழக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில்தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டபோது உயிரிழந்த அப்பாவி ஊழியர்கள் மூவரின் குடும்பத்துக்கு தினகரன் நிர்வாகம் என்னபதில் கூறப் போகிறது?
கலைஞர் தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டபோது சன் தொலைக்காட்சியில் இருந்துகலைஞருடன் சங்கமமாகிய சுமார் 250 ஊழியர்களுக்கு கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் என்ன பதில் கூறப் போகிறது என்பன பலரிடம் எழுந்துள்ள கேள்விகள்.
எவ்வாறாயினும் இழந்துபோன செல்வாக்கைமீண்டும் பெறுவதில் தமிழக முதல்வர்பெற்றுவிட்டார்
வர்மா
வீரகேசரி வாரவெளியீடு 07 12 2008

No comments: