Sunday, December 21, 2008

அடிவாங்கிய அவுஸ்திரேலியா

தென் ஆபிரிக்க அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையே பேர்த் மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் தென் ஆபிரிக்க அணி ஆறு விக்öகட்டுகளினால் வெற் றி பெற்று சாதனை படைத்துள்ளது.
அவுஸ்திரேலிய அணி நிர்ணயித்த 414 ஓட்டங்களை நான்கு விக்கெட்டுகளை இழந்து தென் ஆபிரிக்க அணி வெற்றி பெற்றது. தென் ஆபிரிக்க அணித் தலைவர் ஸ்மித் அடித்த 103 ஓட்டங்கள் சரித்திர வெற்றிக்கு உதவியது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதலாவது இன்னிங்ஸில் 375 ஓட்டங்கள் எடுத்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஒன்பது விக்öகட்டுகளை இழந்து 319 ஓட்டங்கள் எடுத்தபோது ஆட்டத்தை நிறுத்தி தென் ஆபிரிக்க அணியை துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
414 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவின் போது மூன்று விக்கெட்டுகளை இழந்து 227 ஓட்டங்கள் எடுத்தது.
கலிஸ் 32 ஓட்டங்களுடனும் டிவில்லியர்ஸ் 11 ஓட்டங்களுடனும் ஐந்தாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தனர்.
அவுஸ்திரேலிய மண்ணில் அதனை வீழ்த்த வேண்டும் என்ற வெறியுடன் விளையாடிய தென் ஆபிரிக்க வீரர்கள் தாம் நினைத்ததை முடித்து அவுஸ்திரேலிய அணியை மண் கௌவச் செய்தனர்.
கலிஸ் 57 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டி. வில்லியர்ஸ் டும்மினி ஜோடி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தேடிக் கொடுத்தனர்.
அவுஸ்திரேலிய வீரர்களின் வேகங்களும் சுழல்களும் தென் ஆபிரிக்க வீரர்களை ஒன்றும் செய்யவில்லை.
டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களும் டும்மினி ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்ட நாயகனாக டிவிலியர்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

No comments: