Monday, January 21, 2013

ஜெயலலிதாவின் தனி வழி அ.தி.மு.க. வுக்கு தலைவலி


இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவை ஆகியவற்றில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிடப்போவதாக ஜெயலலிதா அறிவித்ததனால் அவரது கூட்டணிக் கட்சியினர் கதிகலங்கிப் போயுள்னர். ஜெயலலிதாவின் திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸ் ஆகியன மிகுந்த உற்சாகமடைந்துள்ளன.
  தமிழகச‌ட்டமன்றத் தேர்தலின்போது ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்த், ச‌ரத்குமார்,,இஸ்லாமியக் கட்சி இடதுசாரிகள் ஆகிய இணைந்துபோட்டியிட்டன. ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்ட திராவிட முன்னேற்றக் கழக காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியடைந்தது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி பீடத்தில் இருந்தபோது புதிய ஆட்சி அமைப்பதற்காக ஜெயலலிதாவும் விஜயகாந்தும் இணைந்தார்கள். தான் எதிர்பார்த்த முதலமைச் ச‌ர் பதவி கிடைத்ததும் விஜயகாந்தை ஓரம் கட்டினார். ஜெயலலிதா தன்னை ஓரம் கட்டுவது தெரிந்தும் ஜெயலலிதாவை எதிர்க்காது  பொறுமையாக இருந்தார் விஜயகாந்த். ஜெயலலிதாவின் சுயரூபம் தெரியாத விஜயகாந்த் இலவுகாத்த கிளிபோல் காத்திருந்து ஏமாந்துவிட்டார்.

இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் மாநிலத் தேர்தலிலும் தனிக் கட்சி ஆட்சியைப் பிடிக்க முடியாத நிலை உள்ளது. மாநிலத்தில் பலமான கட்சிகளுடன் கூட்டு அமைத்து மத்தியில் ஆட்சியைப் பிடிப்பதற்கு காங்கிரஸும் பாரதிய ஜனதாக் கட்சியும் முயற்சிசெய்கின்றன. இந்த நிலையில் கூட்டணி இல்லாது 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப்போபாவதாக ஜெயலலிதா அறிவித்ததை  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சில தலைவர்கள் வியப்புடன்  நோக்குகின்றனர். ச‌ட்டச‌பைத்தேதர்தலின் போது கட்சியின் செல்வாக்கும் வேட்பாளரின் செல்வாக்கும் வெற்றியைத் தீர்மானித்துவிடும். நாடாளுமன்றத் தேர்தல் அப்படி அல்ல பல ச‌ட்ட ச‌பைத் தொகுதிகள் அடங்கியதே ஒரு நாடாளுமன்றத் தொகுதி. பல தொகுதிகள் இருப்பதனால் கட்சியின்செல்வாக்கும் வேட்பாளரின்செல்வாக்கும் வெற்றி பெறப்போதுமானதல்ல. கூட்டணி இல்லாது வெற்றி பெற முடியாது என்பது அடிமட்டத் தொண்டனுக்கும் கொடுத்த உண்மை.

இந்தியப் பிரதமர் கனவை மனதில் வைத்@த 40 தொகுதிகளிலும் தனித்துப் @பாட்டி என்ற அஸ்திரத்தை ஏவியுள்ளார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் இந்த அஸ்திரம் எதிர்பார்த்த இலக்கை அடைய முன்ன@ர புஸ்வாணம் ஆகிவிடும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. மத்திய அரசில் ஆட்சி அமைக்கும் Œந்தர்ப்பம் உள்ள கூட்டணியை மாநில மக்கள் விரும்புவர். தமிழகத்தில் தனித்துப் @பாட்டியிட்டு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று காங்கிரஸ் பாரதி ஜனதாக் கட்சி அல்லாத மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும் ச ந்தர்ப்பம் ஏற்பட்டால்  சழற்சி முறையில் முதல்வராகலாம் என்ற ஆசை ஜெயலலிதாவிடம் உள்ளது.

பாரதீய ஜனதாக் கட்சியுடன் அல்லது மூன்றாவது அணியுடன் இணைந்து போ ட்டியிட்டால் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு ஓரளவு நிறைவேறும். தனித்துப்போ ட்டியிட்டால் ஜெயலலிதாவின் எதிர்பார்ப்பு அனைத்தும் பொ ய்யாகிவிடும். பலமான கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டபோதே 40 தொகுதிகளிலும் தோல்வியடைந்த ஜெயலலிதாவால் கூட்டணி இல்லா து40 தொகுதிக‌ளிலும் வெற்றி பெறுவது இயலாத காரியம்.

சட்ட சபைத்தேர்தலில் விஜயகாந்த், இடதுசாரிகள், சரத்துகுமார், தொ லுங்கு   வேளாளர் கட்சி, இஸ்லாமியக் கட்சிகள் ஜெயலலிதாவின் தலைமையில் கீழ்போட்டியிட்டன. கூட்டணியிலிருந்து விஜயகாந்த் வெளியேற்றப்பட்டு விட்டார். நாடாளுமன்றத் தேர்தலின்போ து பேரம் பேச லாம் என்று நினைத்திருந்த கூட்டணித் தலைவர்கள் ஜெயலலிதாவின் அறிவிப்பினால் அதிர்ந்து போ யுள்ளன.

ஜெயலலிதா ஒரு பக்கம் திராவிட முன் னே ற்றக் கழகம், காங்கிரஸ் கட்சிகள் ஒருபுறம் என்பது உறுதியாகியுள்ளது. திராவிட முன்னே ற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்தக் கூட்டணியில் விஜயகாந்தையும் இணைக்கும்  ஆர்வம் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சிலரிடம் உள்ளது. ஜெயலலிதாவுக்குப் பாடம் படிப்பிப்பதற்காக இந்தக் கூட்டணியில் விஜயகாந்தும் இணையும்ச ந்தர்ப்பம் அதிகமாகவுள்ளது.

ஜெயலிதாவுடன் கூட்டணி அமைத்து ஏற்பட்ட அவமானத்தினால் யாருடனும் கூட்டணி இல்லை என்ற பல்லவியை மீண்டும் பாடத் தொடங்கிவிட்டார்  விஜயகாந்த். ஜெயலலிதாவைத் தாக்கியும் கருணாநிதியைப் பாராட்டியும் அண்மைக் காலமாக கருத்துத் தெரிவித்து வருகிறார் விஜயகாந்த். விஜயகாந்துக்கு எதிரான அவதூறு வழக்குகள் வரிசையில் வந்து கொண்டிக்கின்றன. எப்படித்தான் அவதூறாகப்பே சினாலும் கருணாநிதி வழக்குப் போடமாட்டார் என்று நற்சான்றிதழ் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்தைத் தமது கட்டணிக்குள் கொண்டு வருவதற்கான சாதக சமிக்ஞைகளை திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் வெளியிட்டு வரும் வேளையில் நான்கு வழக்குகளுக்கு முகம் கொடுக்க முடியாதவர் என்று அவரைக் கடுப் பேத்தியுள்ளார் அழகிரி. திராவிட முன்  னேற்றக் கழக வாரிசு போட்டியில் அழகிரி வெளி யேற்றப்பட்டு விட்டதால் அழகிரியின் இப்பே   ச் சு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தப்போ வதில்லை.

தமிழக அரசியலில் அசைக்க முடியாத ச‌க்தியாக விளங்கிய வைகோகாவும் டாக்டர் ராமதாஸும் இப் போதேடுவாரற்ற‌ நிலையில் உள்ளனர். வைகோவும் டாக்டர் ராமதாஸும் கூட்டணியில் இருந்தால் வெற்றி பெறலாம் என்ற நிலைமாறி அவர்கள் இல்லாம லேயே வெற்றி பெறலாம் என்ற உண்மை வெளிச்ச‌த்துக்கு வந்துள்ளது. வைகோவின் நெருங்கியச‌காவும் பிரசாரப் பீரங்கியுமாக இருந்த நாஞ்சில்  ச ம்பத் அண்மையில் அண்ணா திராவிட முன் னேனற்றக் கழகத்தில் சரணடைந்துவிட்டார். வைகோவுடன் இருப்பவர்கள் தொடர்ந்து அவருடன் இருப்பார்களா என்ற  ச ந்தேகம் எழுந்துள்ளது. ஜெயலலிதாவால் வஞ்சிக்கப்பட்டு தமிழகசட்டசபைத் சேதர்தலில்போட்டியிடாது ஒதுங்கினார் வைகோ. இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராது தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பதனால் இடதுசா ரிகளும் வைகோவும் இணைந்து போட்டியிடும் சா த்தியம் உள்ளது.

டாக்டர் ராமதாஸின் நிலை மிகமோச மாகமாக உள்ளது. தமிழ்நாட்டில் சாதிப் பிரச்சினையைத் தூண்டி குளிர் காய் வதாக ராமதாஸ் மீது குற்றம் சும த்தப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் டாக்டர் ராமதாஸ் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பல‌ இடங்களில் நடைபெறும் சா திச்சண்டைகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி யே காரணம் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மகன் அன்புமணிக்காக ஏதாவது ஒரு கூட்டணியில் இணைவதற்கு துடிக்கிறார் ராமதாஸ். ஆனால் ராமதாஸைத் தமது கூட்டணியில்  சேர்ப்பதற்கு சில தலைவர்கள் தயங்கும் நிலை உள்ளது.
 தமிழகம், புதுவை ஆகிய 40 தொகுதிகளிலும் ஜெயலலிதா தனித்துப் போ ட்டியிட்டால் திராவிட முன்  னேற்றக் கழகம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு சாதகமாக அமையும் இந்தியப் பிரதமரைத் தே தர்வு  செ ய்யும் ஆறு மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. உத்தரப் பிர  தேச‌ த்தில் 80, மகாராஷ்டிராவில் 48, ஆந்திராவில் 42, மே ற்கு வங்காளத்தில் 42, பீகாரில் 40 தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலங்களில் 292 தொகுதிகள் உள்ளன. தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் மட்டும் வெற்றி பெற்றால் போதாதது ஏனைய மாநிலங்களிலும் கணி  ச மான வெற்றியைப் பெற்றால்தான் இந்தியா பிரதமராகும் வா#ப்பு ஏற்படும். ஆகையினால் தனி வழி என்ற அறிவிப்பை ஜெயலலிதா, வாபஸ் பெறவேண்டிய நிலை ஏற்படும். அடிக்கடி முடிவை மாற்றும் ஜெயலலிதா நாடாளுமன்றப் பொதுத்தே ர்தல் அறிவிப்பின் பின்னர் புதிய கூட்டணிக்குத் தலைமை ஏற்படும் நிலை உள்ளது.
 

6 comments:

சேக்காளி said...

கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுத்தது போக மிச்சமிருப்பதில் வென்றால் வரும் தொகுதிகளுக்கு சமமாக மொத்தமாக அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டு தோல்வியடைந்தது போக மிச்சம் கிடைப்பது இருந்தால் நட்டமில்லை.அதே அதிக இடங்களை வென்றால் சந்தோசம் தானே.அதே நேரம் அதிக உறுப்பினர்களை திருப்தி படுத்தும் வாய்ப்பும் கிடைக்குமே.

வர்மா said...

தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
அன்புடன்
வர்மா

DiaryAtoZ.com said...

ஜெயலலிதா நிச்சயம் தன் முடிவை மாற்றுவார்.ஏனேனில் நிலைமை அவருக்கு சாதகமாக இல்லை.

Cinema News said...

She is planning to get 40 seats.
later she might share around 10 and aim to win 30 at least.

We wait and see.

வர்மா said...

DiaryAtoZ.com said...
ஜெயலலிதா நிச்சயம் தன் முடிவை மாற்றுவார்.ஏனேனில் நிலைமை அவருக்கு சாதகமாக இல்லை.
உண்மைதான் முடிவை மாற்ற வேண்டிய நிலை ஏற்படும்.
தங்கள் வருகைக்கும்கருத்துக்கும்நன்றி
அன்புடன் வர்மா

வர்மா said...

Cinema News said...
She is planning to get 40 seats.
later she might share around 10 and aim to win 30 at least.

We wait and see.

கூட்டணி இல்லாது வெல்ல முடியாதென்பதை ஜெயலலலிதா உணருவார்.
தங்கள் வருகைக்கும்கருத்துக்கும்நன்றி
அன்புடன் வர்மா