Wednesday, February 20, 2013

தடம் மாறியதமிழ்ப்படங்கள் 49



விவகரத்துச்செய்த தனது மனைவி முன்னாள் காதலனைத்திருமணம் செய்வதைத்தடுக்கும் கொடுமைக்காரக்கணவனின் கதைதான் 1977ஆம் ஆண்டு வெளியான அவர்கள் படத்தின் கதை. ரசிகர்களின் பாராட்டையும் பெண் ரசிகைகளின் அனுதாபத்தையும் பெற்று வெற்றிக்கொடி நாட்டியது.

  டில்லியில் பெரிய நிறுவனத்தில் பெரிய அதிகாரியாகப்பணீபுரிகிறார் ரஜினிகாந்த். அவரின் மனைவி சுஜாதா. சுஜாதாவைப்பாராட்டுவதுபோன்று சிலேடையாக அவரது கடந்தகால் வாழ்க்கையைச்சுட்டிக்காட்டுவார்ரஜினிசுஜாதாஇன்னொருவனைக்காதலிப்பதைத்தெரிந்துகொண்டே அவரை ரஜினி திருமணம் செய்தார்.
     நோயாளியான சுஜாதாவின் தகப்பன் தனது மகளின் எதிர்காலம் பற்றித்துன்பப்படுகிறார். சுஜாதாவைத்தான் திருமணம்செய்வதாக உறுதியளிக்கிறார் ரஜினி.தனது முடிவைக்கூற பதினைந்து நாள் அவகாசம் கேட்கிறார் சுஜாதா. சென்னையில் உள்ள தனது காதலனுக்குக் கடிதம் அனுப்புகிறார் சுஜாதா. வழமை போன்று பதில் வராததனால் ரஜினியைத்திருமணம் செய்வதற்குச்சம்மதம் தெரிவிக்கிறார் சுஜாதா.

 ரஜினியை சுஜாதா திருமணம் செய்தபின்னர் சுஜாதாவின் தகப்பன் இறந்துவிடுகிறார். சுஜாதாவின் கடந்தகால காதலைச்சுட்டிக்காட்டி சித்திரவதை செய்கிறார் ரஜினி.கைக்குழந்தையுடன் அல்லல்படும் சுஜாதா சிரித்தபடியே எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறார்.கொடுமையின் உச்சக்கட்டமாக விவாகரத்துச்செய்யப்போவதாக ரஜினி கூறியபோதும் சிரித்தபடியே ஒப்புதலளிக்கிறார் சுஜாதா.

   ரஜினியிடமிருந்து விவாகரத்துப்பெற்ற சுஜாதா கைக்குழந்தையுடன் சென்னைக்கு மாற்றம் பெற்றுச்செல்கிறார்.முதல்நாள் கைக்குழந்தையுடன் அலுவலகத்துக்குச்செல்லும் சுஜாதாவுக்கு அங்கு பணிபுரியும் கமல் உதவி செய்கிறார்.தான்தங்கி  இருக்கும் வீட்டில் சுஜாதாவைக்குடியேற்றுகிறார் கமல்.

    ரஜினியின் திருவிளையாடலைப்பற்றித்தெரியாத தாய் அவருக்கு மணப்பெண் தேடுகிறார்.ரஜினியைத்திருமணம் செய்யப்போகும் பெண் வீட்டுக்கு வந்தபோது அவருக்கு ஹிந்தி தெரியும் என்பதை அறிந்து டில்லியிலிருந்து வந்த ஹிந்தியில் எழுதப்பட்ட கடிதத்தைக்கொடுத்தார்.ஹிந்தியில் எழுதப்பட்ட அக்கடிதத்தின் மூலம் ரஜினிக்குத்திருமனம் நடந்தது,விவாகரத்துப்பெற்றது,கைக்குழந்தையுடன் ரஜினியின் மனைவி வீட்டைவிட்டு வெளியேறியது வேலைக்காரன் விபரமாக எழுதியிருந்தான்.மனின் சுயரூபம் தெரிந்ததாய் அதிர்ச்சியடைகிறார்.
    கமலின் வீட்டில் குடியேறிய சுஜாதா காலையில் சுப்ரபாதம்  பாடலை ஒலிக்கவிட்டு சாம்பிராணிப்புகை காட்டுகிறார். எதிர் வீட்டிலிருக்கும் ரவிக்குமார் எட்டிப்பார்க்கிறார். சுஜாதாவின் வீட்டுச்சுவரிலே தூங்கும் மோனாலிசாவின்படம் தான் காதலிக்குக்கொடுத்த மோனாலிசாவை நினைவூட்டையது. எதிர் வீட்டுக்குச்சென்ற ரவிக்குமார் தன்து பழைய காதலி சுஜாதாவைக்கண்டு அதிர்ச்சியடைகிறார்.இருவரும் மனம் விட்டுப்பேசுகின்றனர். தான் அனுப்பிய கடிதங்களுக்கு ஏன் பதில் அனுப்பவில்லை எனக்கேட்கிறார் சுஜாதா.மன நோயளியான தனதுசகோதரி   அக்கடிதங்களை ஒளித்துவைத்ததையும் சகோதரி இறந்தபின்பேஅக்கடிதங்களைத்தான் கண்டதாகவும் கூறுகிறார் ரவிக்குமார்.
  நிம்மதி இன்றி சலனப்படும் சுஜாதாவுக்கு  அலுவலகத்தில் பணி புரியும் நண்பி சாமியார் ஒருவரை அறிமுகப்படுத்துகிறார் .சாமியாரிடம் சென்ற சுஜாதா தனது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத் தையும் கூறுகிறார்.நிம்மதி தேடி சாமியாரிடம் சென்ற ரஜினியின் தாய் அதனைக்கேட்டு சுஜாதாதான் தனது மருமகள் என்பதை அறிகிறார்.

  சுஜாதா அலுவலகம் செல்லத்தயாராகும்போது அங்கு சென்ற ரஜினியின் தாய் வீட்டு வேலைகளைச்செய்கிறார்.எதிர் வீட்டிலிருந்து எட்டிப்பார்த்த ரவிக்குமாரை முறைக்கிறார். தனியாகக் குழந்தையுடன் கஷ்ரப்பட வேண்டாம் வீட்டு வேலைக்குத்தன்னை வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறார். வேலைக்காரியாக வந்திருப்பது  தனது மாமி எனத்தெரியாத சுஜாதா அவரை வேலைக்குச்சேர்க்கிறார்.சுஜாதாவின் மனதை நோட்டமிட்ட ரஜினியின் தாய், பழைய காதலன் ரவிக்குமாரைத்திருமணம் செய்யும்படி சுஜதாவுக்கு அறிவுரை கூறுகிறார்.  விவாகரத்தின் பின்னரும் ரஜினி கட்டிய தலி கழுத்தில் இருப்பதனால் இரண்டாவது திருமணம் செய்யமுடியாதென சுஜாதா மறுப்புத்தெரிவிக்கிறார்.காலப்போக்கில் இரண்டாவது திருமணம் செய்வது தப்பில்லை என சுஜாதா உணர்கிறார்.

  சுஜாதா வேலை செய்யும் அலுவலகத்துக்கு மேலதிகாரியாக ரஜினி வருகிறார்.தான் திருந்திவிட்டதாகவும் மீண்டும் இணைந்து வாழவிரும்புவதாகவும் சுஜாதாவிடம் கூறுகிறார்.முதலில் நம்பமறுத்த சுஜாதா ரஜினியின் நடவடிக்கைகளினால் அவர் திருந்திவிட்டதாக நினைக்கிறார்.

     விவாகரத்துச்செய்த கணவனா,பழைய காதலனா என முடிவெடுக்க இயலாது தடுமாறிய சுஜாதா தனது நிலையை கமலிடம் கூறினார். ஜூனியர் என்ற பொம்மைமூலம்  அனைவரையும் சிரிக்க கைக்கும் கமல் ஜூனியர் பொம்மை பாடுவதுபோன்று தனது காதலை வெளிப்படுத்தினார்.

   சுஜாதாவுக்கும் ரவிக்குமாருக்கும் பதிவுத்திருமணம் செய்ய நாள் குறிக்கப்பட்டது.பதிவுத்திருமணம் செய்தால் தாலியை என்ன செய்வது எனத்தெரியாது கிலேசமடிந்தார் சுஜாதா. பதிவுத்திருமணத்துக்காக  சுகமில்லை என்று அலுவலகத்தில் விடுமுறை எடுக்கிறார் சுஜாதா.
     பதிவுத்திருமணத்துக்காகக்காத்திருந்து ஏமற்றமடைந்த‌ ரவிக்குமார் சுஜாதாவின் வீட்டுக்குச்செல்கிறார்.அங்கே சுகயீனம் காரணமாக சுஜாதா படுத்திருப்பதைக்காண்கிறார்.டாக்டரிடம் போகவாம் என்று ரவிக்குமார் கூற டாக்டர் வந்து மருந்து கொடுத்துள்ளார் என்று கூறுகிறார் ரஜினி. ரஜினி ,ரவிக்குமார், கமல் மூவரும் இரவிரவாகக்கண் விழித்து சுஜாதாவைப்பராமரிக்கின்றனர்.

  ஆயாவாகத்தந்து வீட்டில் வேலை செய்பவர் ரஜினியின் தாய் என்ற உணமை சுஜாதாவுக்குத்தெரியவருகிறது. ரஜினி உண்மையிலேயே திருந்திவிட்டார் என நம்பிய சுஜாதா ரஜினியுடன் வாழ முடிவுசெய்கிறார். தன‌து முடிவை ரவிக்குமாரிடம் கூறுகிறார்.புல்லாங்குழல் விற்பன்னரான ரவிக்குமாரை அவரது தீவிர ரசிகை காதலிப்பதை அறிந்த ரஜினி இருவருடனும் கதைத்து திருமண நிச்சயதார்த்தம் செய்கிறார்.


   ர‌ஜினியுட‌ன் வாழ்வ‌த‌ற்காக‌ கைக்குழ‌ந்தையுட‌ன் அவ‌ரின் வீட்டுக்குச்செல்கிறார் சுஜாதா.த‌ன்ம‌க‌ன் இன்ன‌மும் திருந்த‌வில்லை என‌க்கூறுகிறார் ர‌ஜினியின் தாய்.ர‌ஜினி திருந்திவிட்ட‌தாக‌ உறுதிப‌ட‌க்கூறுகிறார் சுஜாதா.அப்போது டில்லியிலிருந்துவ‌ந்த‌ ஹிந்தியில் எழுத‌ப்ப‌ட்ட‌ க‌டித‌த்தை சுஜாதாவிட‌ம் கொடுக்கிறார் ர‌ஜினியின் தாய்.அந்த‌க்க‌டித‌த்தைப்ப‌டித்து சுஜாதா க‌ண்க‌ல‌ந்கி நிற்கையில்  கைக்குழ‌ந்தியுட‌ன் வீட்டுக்கு வந்த‌ ஹிந்திப்பெண் இது ர‌ஜினியின் வீடா என‌க்கேட்கிறார்.

   வேலையை இராஜினாமாச்செய்துவிட்டு ஊருக்குப்போகிறார் சுஜாதா. ர‌ஜினியின்தாயும் அவ‌ருட‌ன் செல்கிறார்.

       ஒரு பெண்ணை மூன்று ஆண்க‌ள் விரும்புவ‌து, விவாக‌ர‌த்துப்பெற்ற‌ பெண் ப‌ழைய‌காத‌ல‌னை திருதும‌ண‌ம் செய்ய‌முய‌ற்சிப்ப‌து,ம‌ன‌ம் மாறி விவாக‌ர‌த்துப்பெற்ற‌ க‌ண‌வ‌னுட‌ன் வாழ‌விரும்புவ‌து என‌ இடிய‌ப்ப‌ச்சிக்க‌ல் போன்ற‌ வித்தியாச‌மான‌ முக்கோண‌க்காத‌லைத்த‌ன‌க்கே உரிய‌ பாணியில் இலாவ‌க‌மாக‌க்கையாண்டு  வெற்றிபெற்றார் கே.பால‌ச‌ந்த‌ர்.

    சுஜாதா,க‌ம‌ல்,ர‌ஜினி,ர‌விக்குமார்,லீலாவ‌தி,குமாரிப‌த்மினி,குட்டி ப‌த்மினி கோகுல்நாத்,வீர‌ராக‌வ‌ன்,குழந்தை ஹ‌ரி ஆகியோர் ந‌டித்த‌ன‌ர்.சுஜ‌ஹ்டாவுக்கு முக்கிய‌த்துவ‌ம் மிக்க‌ இப்ப‌ட‌த்தின் டைட்டிலில் சுஜாதாவின் பெய‌ர் முத‌லில் காட்ட‌ப்ப‌டடுகிற‌து.வில்ல‌னான‌ ர‌ஜினிக்கு அதிக‌ முக்கிய‌த்துவ‌ம் உள்ள‌து. ர‌விக்குமார் அறிமுக‌மான‌ ப‌ட‌ம்.

   சுஜாதா,க‌ம‌ல்,ர‌ஜினி ஆகியோரின் ந‌டிப்பு ப‌ட‌த்துக்கு மெருகூட்டிய‌து.வ‌ச‌ன‌ம் க‌தைக்கு உயிரூட்டிய‌து.க‌ம‌ல்,ர‌குமான் இனைந்து ந‌ட‌த்திய‌ வ‌ச‌ன‌ம் இல்லாத‌ கிரிக்கெற் காட்சி ர‌சிக்கும்ப‌டி இருந்த‌து.க‌ம‌லின்  ஜூனிய‌ர் பொம்மை க‌ல‌க‌ல‌ப்பூட்டிய‌து.பாட‌ல்க‌ள் க‌ண்ண‌தாச‌ன்,இசை எம்.எஸ்.விஸ்வ‌நாத‌ன்.எஸ்.ஜான‌கி,எஸ்.பி.பால‌சுப்ர‌ம‌ணிய‌ம் ஆகியோரின் குரலில்.இப்ப‌டி ஓர் தாலாட்டுப்பாட‌வா,காற்றுக்கென்ன‌வேலி,ஜூனிய‌ர்ஜூனிய‌ர் ஜூனிய‌ர் இரும‌ன‌ கொண்ட‌ திரும‌ண‌ மேடையில்,அங்கும் இங்கும் பாதை உண்டு  ஆகிய‌ பாட‌ல்க‌ள் ர‌சிக‌ர்க‌ளைக்க‌வ‌ர்ந்த‌ன‌.
ஒளிப்ப‌திவு பால‌ச‌ந்த‌ரின் ஆஸ்தான‌ வித்த‌க‌ர் என்.லோக‌நாத‌ன்.க‌தை ,வ‌ச‌ன‌ம் உத‌வி அன‌ந்து. க‌தி வ‌ச‌ன‌ம் இய‌க்‌க‌ம் கே.பால‌ச‌ந்த‌ர்.
ர‌ம‌ணி
மித்திர‌ன்  24/02 13

No comments: