Friday, February 22, 2013

குஷ்புவைச் சீண்டியசஞ்சிகைகள் கொந்தளித்த தி.மு.க. தொண்டர்கள்சர்ச்சைகள் என்பது குஷ்புக்கு சர்க்கரைப் பொங்கல் போன்றது சர்ச்சைகள் எதிலும் சிக்காது சிவனே  என்றிருந்த குஷ்புவை  தமிழகத்தின் இரண்டு பிரதான  சஞ்சிகைகள் சீண்டியதனா ல் தொண்டர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர்.

தலைவர் மட்டுமே முடிவு செய்தால் அடுத்த தலைவர் தளபதியாக இருக்கவேண்டும் என அவசியமில்லை என்று ஆனந்த விகடனுக்கு குஷ்பு வழங்கிய பேட்டியால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் குஷ்புவின் மீது பாய்ந்தனர். கொந்தளித்த தொண்டர்களை எப்படித்  தணிய வைப்பது எனத் தெரியாது தடுமாறிய கருணாநிதிக்கு ஆபத்பாண்டவன் போல் உதவி செய்தது குமுதம் ரிப்போட்டர்.

கருணாநிதியை பெரியாராகவும்  குஷ்புவை மணியம்மையாகவும் சித்தரித்து "கொந்தளிக்கும்  குடும்ப உறவுகள் இன்னொரு மணியம்மை "என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரை வெளியிட்டது. ஆனந்த விகடனின் பேட்டியில் குஷ்பு மீது தாக்குதல் நடத்திய தொண்டர்களின்  பார்வை குமுதம் அலுவலகம் மீது திரும்பியது.

ஆனந்த விகடனுக்கு குஷ்பு வழங்கிய பேட்டியின் பின்னணியில் பலமிக்க திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர் ஒருவர் இருக்கிறார் போல்  தெரிகிறது. அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சைக்கு கருணாநிதி முடிவு கட்டி ஸ்டாலின் தான் தலைவர் என்ற கூறிய பின்னர் தலைவர் சொல்லிவிட்டால் தளபதி தலைவராக முடியுமா என்று குஷ்பு கேட்பதற்குரிய பலத்தைக் கொடுத்தது யார்?

குஷ்புவின் பேட்டி வெளியானதும் வாகை சந்திரசேகரன் காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். திருச்சியில் நடைபெற்ற திருமண வைபவத்தில் கலந்து கொள்ள சென்ற குஷ்புவை த்தாக்க தொண்டர்கள் முயற்சி செய்தனர். திருமண வைபவத்தில் கலந்து கொண்டு இடையில் சென்னை திரும்பினார். குஷ்பு. குஷ்பு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுகார்க் கண்ணாடி உடைக்கப்பட்டது.

அழகிரியின் மகன் துரை தயாநிதி  குஷ்புவுக்கு ஆதரவாக கருத்துக் கூறியபோது ஸ்டாலினின் ஆதரவாளர்கள் மேலும் கொந்தளித்தனர்.

குஷ்புவைத் தாக்கியவர்கள் அடையாளம் காணப்படவேண்டும்  இப்பிரச்சினை பற்றி  யாரும் தனிப்பட்ட அறிக்கை வெளியிடக் கூடாது என்று கருணாநிதி  அதிரடி உத்தவு பிறப்பித்து  குஷ்புவைக் காப்பாற்றமுயற்சிசெய்தார்.
திராவிட  முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது.  சிறு பதவியானாலும்  உட்கட்சித் தேர்தல் மூலமே தெரிவு நடைபெறும் என்ற குஷ்புவின்  கருத்தைத் திராவிட  முன்னேறறக் கழக ஜனநாயகவாதிகள் கருத்தில் எடுக்கவில்லை. ஸ்டாலினை எதிர்த்து யாரும் எதுவும் பேசக்கூடாது என்பதே அவர்களது குறிக்கோள். தொண்டர்களிடமிருந்து குஷ்புவைக் காப்பாற்றுவதற்கு கருணாநிதி வழிதேடிக் கொண்டிருக்கையில் குமுதம் ரிப்போர்ட்டர் கை கொடுத்தது.

கருணாநிதியையும் குஷ்புவையும் கேவலப்படுத்துவதற்காக  இன்னொரு மணியம்மை என்ற அட்டைப்படக் கட்டுரையை வெளியிட்ட குமுதம் ரிப்போட்டர் பெரியாரையும் மணியம்மையும் அவமானப்படுத்தியுள்ளது.

கணவன், மனைவியான பெரியாரையும் மணியம்மையும் பற்றிய தவறான கண்ணோட்டத்தை விதைத்துள்ளது குமுதம் ரிப்போர்ட்டர். குமுதம் ரிப்போட்டருக்குப் பதிலளிக்கும் வகையில்  கருணாநிதி  வெளியிட்ட அறிக்கையில் கழகத்திலிருந்து குஷ்புவை  வெளியேற்றச் சதி நடைபெறுகிறது எனக் குறிப்பிட்டார்.

திராவிட  முன்னேற்றக் கழகத்தில் பிரசாரப் பீரங்கிகளாக ஆண்கள் பலர் உள்ளனர். பெயர்கூறும்படியான பெண் பேச்சாளர்கள் இல்லை. அந்த இடத்தை குஷ்பு நிரப்புகிறார் என கருணாநிதி கருதுகிறார். குஷ்புவின்  மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டபோதும் அவை எல்லாம் புஸ்வாணமாகின. திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரதான பெண் பேச்சாளராக கனிமொழி இருந்தபோதும் அவரின் பேச்சு  சகல தரப்பினரையும் கவருவதில்லை. குஷ்புவின் பேச்சு மேல் தட்டு மக்களையும் கீழ்த் தட்டு மக்களையும்  கவர்கிறது. இதனால் குஷ்புவின் மீது கருணாநிதி  தனிக் கவனம் செலுத்துகிறார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் திராவிட கழகத் தொண்டர்களும் குமுதம் அலுவலகத்தின் முன்னால் இரண்டு நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் ஊழல் செய்தால் தவறு செய்தால்      அவற்றைப் பகிரங்கப்படுத்துவதில்  எந்தத் தவறும் இல்லை. குடும்பத்தையும் பெண்களையும் இழிவுபடுத்தும் வகையில் செய்திகள், புகைப்படங்கள், கட்டுரைகள் வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

தமிழ் சினிமாவில் மிக உயரத்தில் குஷ்பு இருந்தவேளையில்  அவர் மீது அளவு கடந்த அன்புள்ள  ரசிகர்கள் கோயில் கட்டினார்கள். அப்போது இச் சம்பவம் பலத்த சர்ச்சையை  ஏற்படுத்தியது. ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த வேளையில்  ஜெயா ரி.வி.யில் குஷ்பு தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி தமிழகத்தின் பெண்களின் மனதில் பதிந்தது. அப்போது  கற்பு பற்றி குஷ்பு பேசியது பலத்த  சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பை அகற்ற ஜெயா ரி.வி. யில் கண்ணீர் மல்க மன்னிப்புக் கேட்டார்.

சினிமா ,தொலைக்காட்சி என்பனவற்றிலிருந்து விலகி குஷ்பு அரசியலில் சேரப் போகிறார் என்ற செய்தி பரவியது. ராகுல் காந்தியைச் சந்தித்தது தனது அரசியல் பிரவேசத்தை குஷ்பு அறிவிப்பார் என்ற கிசு கிசு வேகமாகப் பரவியது. குஷ்புவை வரவேற்க காங்கிரஸ் கட்சி தயாராகியது.  வழி தவறிச் சென்றுகொண்டிருக்கும் தமிழக காங்கிரஸை குஷ்பு என்ற துருவ நட்சத்தித்தின் மூலம்  கரை சேர்க்கலாம் என்று  காங்கிரஸ் கட்சி நம்பி இருந்தது.
காங்கிரஸ் கட்சியில் எதிர்பார்ப்பைத் தவிடு பொடியாக்கிய  குஷ்பு  யாரும்  எதிர்பார்க்காத  நிலையில் திராவிடமுன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.
கற்பு பற்றி குஷ்பு வெளியிட்ட கருத்தினால் அவருக்கு  எதிராக தமிழகமெங்கும் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. திரைப்பட  வைபவம் ஒன்றில் சுவாமி படத்துக்கு  அருகே கால் மேல்  கால் போட்டு அமர்ந்திருந்தனால் குஷ்புவுக்கு எதிராக சிலர் கருத்து வெளியிட்டனர்.

 அனுமன் படம் பொறித்த சேலை அணிந்ததனால் அதை எதிர்த்து சிலர் கருத்து வெளியிட்டனர்.
சென்னையில் நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழக வைபவத்தில் கலந்து கொண்ட குஷ்புவின்  இடுப்பை சிலர்   கிள்ளியதால் சலசலப்பு ஏற்பட்டது.
 திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் குஷ்புவைத் தாக்கியபோதும்  கருணாநிதி  குஷ்புக்கு ஆதரவாக இருப்பதனால் குஷ்பு நிம்மதியடைந்துள்ளார்.
மெட்ரோநியூஸ் 22/02/13   

4 comments:

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (23.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 23.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

வர்மா said...


நான் எழுதியவையும் படித்து ரசித்தவையும் என்று, இந்தவலைத்தளத்தில் சினிமா, அரசியல் என்று தனது பார்வையைவீசுகிறார் வர்மா அவர்கள். திரைக்கு வராத செய்தி, தடம் மாறிய தமிழ்ப் படங்கள் என்று பழைய தமிழ் திரைப்படங்கள், கமல் ரஜினி கால சினிமா செய்திகளை காணலாம்.

நடிகை விஜயகுமாரி பற்றிய செய்திகள் கொண்ட இரண்டு பதிவுகள்:
தடம் மாறிய தமிழ்ப்படங்கள் 11http://varmah.blogspot.in/2011/11/11.html
திரை உலகில் பறிக்கப்பட்ட கதைகள் http://varmah.blogspot.in/2011/12/blog-post_21.html

வலைச்சரத்தில் எனது வலைப்பதிவு வெளியானது எதிர்பாரத இன்ப அதிர்ச்சி. பிரபல்யமானவர்களின் வலிப்பூக்களுடன் என்னையும் இணைத்தது ம் இக்க மகிழ்ச்சியாக உள்ளது.வலிச்சரத்தை பார்வையிடுவேன்.புதிய வலைச்சரங்களை அறிமுகப்படுத்தும் தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
அன்புடன்
வர்மா

Anonymous said...

வணக்கம்
திரு,வர்மா(ஐயா)

உங்களின் வலைப்பக்கம் வருவது இதுதான் முதல்முறை உங்களின் வலைப்பக்கம் பார்க்ககிடைத்தது வலைச்சரம் ஊடாகத்தான் நல்ல படைப்புக்களை அழகாக எழுதியுள்ளீர்கள் ஐயா வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வர்மா said...

2008rupan said...
ம‌திப்புக்குரிய சகோதரன் ரூபனுக்கு
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.வலைச்சரம்மூலம்தான் தங்களுடைய வலைப்பக்கத்தியும் நான் பார்த்தேன் தங்கள் பணி சிறப்புர வாழ்த்துக்கள்
அன்புடன்
வர்மா