Sunday, March 2, 2014

இப்படியும் சிலர்

அலுவலகத்தில் சாப்பிட்டு முடிந்து அவர் கையைக்கழுவினார். அருகே இரண்டு பெண் ஊழியர்களும் கையைக்கழுவியபடி கதைத்தனர்.

"அடியே அசோக்குக்கு என்னாச்சு?"

அவர் கைகைக்கழுவியபடி இரண்டு ஊழியர்களையும் நோட்டமிட்டார்.

"அக்ஸிடன்டாகி ஹொஸ்பிட்டலிலை அட்மிட்டாகியிருக்கு..சி.யுவிலை விட்டிருக்கு  ஒருதரும் பாக்கேலாது"

கையைக்கழுவிக்கொண்டிருந்த அவர் அதிர்ச்சியடைந்தார்.
நான் சாப்பிடவரும்போதுதானே அசோக் மோட்டார் சைக்கிளில் வெளியே போனவன். அசோக்குடன் அவர் சிலவேளை மோட்ட்டார் சைக்கிளில் பஸ் லையம் வரை செல்வதுண்டு. மிகவும் ஆறுதலாகத்தான் மோட்டார் சைக்கிளைச் செலுத்துவான்.இளைஞர்களுக்குரிய அவசரம் இல்லை. சிக்னல் விழுந்தால் நிற்பாட்டிவிடுவான். மஞ்சள் லைற் எரி
ந்ததும் ற்றவர்கள் பறப்பார்கள்.பச்சை லைற் எரியும் வரை காத்திருப்பான்.

"அய்யய்யோ இப்ப நான் வரேக்கைதானே வெளியிலை போனவன்.
எங்கை அக்ஸிடென்டானவன்?" கையைக்கழுவிய குறையில்படபடப்புடன் கேட்டார்.

அந்த இரன்டு பெண் ஊழியர்களும் சிரித்தனர். அவருக்கு கோபம் அதிகமாகியது.

" இது மெகா சீரியல் கதை. இவள் ராத்திரி பாக்கேல்லை. அதுதான் கதை சொன்னனான்" என்றாள் ஒருத்தி

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சில பெண்களின் உலகம் இன்றைக்கு சீரியல் உலகமாகி விட்டது...

வர்மா said...

வாருங்கள் திண்டுக்கல்லாரே தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா

kethees said...

unmai