Sunday, April 8, 2018

மிரட்டியது மும்பை தெறிக்கவிட்ட பிராவோ  
11 ஆவது .பி.எல். 20 ஓவர் கிறிக்கெற் போட்டி நேற்று தொடங்கியதுமே 27-ஆம்திகதி  வரை நடைபெறும் இந்த தொடரில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்சென்னை சூப்பர் கிங்ஸ்ராஜஸ்தான் ராயல்ஸ்பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்கொல்கத்தா நைட் ரைடர்ஸ்கிங்ஸ் லெவன் பஞ்சாப்ஐதராபாத் சன் ரைசர்ஸ்டெல்லி டேர்டெவில்ஸ் ஆகிய 8 அணிகள் பங்கேற்றுள்ளனஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்லீக் முடிவில் டாப்-4 இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும்.

மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்றிரவு அரங்கேறிய தொடக்க லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தினமுதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 20 ஓவர்களில் நான்கு விக்கெற்களை இழந்து 165 ஓட்டங்கள் எடுத்தது. சென்னையின் முக்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தப்போதும் தனி ஒருவனாக பதிலளித்தபிராவோ சின்னையின் வெற்ரிக்கு கால்கோளிட்டார். இரண்டு வருடங்களின் பின்னர் களமிறங்கிய சென்னை வெற்றியுடன் தனது வருகையை வெளிப்படுத்தியது.


 நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற   சென்னை கப்டன் டோனி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய  மும்பை அணிக்குசென்னை வேகப்பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹரும்ஷேன் வாட்சனும் நன்கு நெருக்கடி கொடுத்தனர். மும்பை தொடக்க ஆட்டக்காரரான இவின் லீவிஸ் (0) தீபக் சாஹரின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூஆனார்டி.ஆர்.எஸ்முறைப்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை.பி.எல்வரலாற்றில் டி.ஆர்.எஸ்தொழில்நுட்பத்தை முதல்முறையாக பயன்படுத்தியவர் இவின் லீவிஸ் தான்.பி.எல்.-ல் இது தான் அவருக்கு முதல் ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு தொடக்க வீரர்  கப்டன் ரோகித் சர்மா  ஓட்டம் எடுக்கத் தடுமாறினார்.15 ஓட்டங்களில்  வெளியேறினார்.  இதன் பின்னர் இஷான் கிஷனும்சூர்யகுமார் யாதவும் கூட்டணி போட்டு அணியை சரிவில் இருந்து மீட்டனர்முதல் 10 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெற்றுக்கு 65 ஓடங்கள் மட்டுமே எடுத்திருந்ததுபிற்பாதியில் மும்பை வீரர்கள் அதிரடி காட்டினர்சூர்யகுமார் யாதவ் 43 ஓட்டங்களும் (6 பவுண்டரிஒரு சிக்சர்), இஷான் கிஷன் 40 ஓட்டங்களும் (4 பவுண்டரிஒரு சிக்சர்தங்களது பங்குக்கு எடுத்தனர்.

இறுதிகட்டத்தில் சகோதரர்கள் ஹர்திக் பாண்ட்யாவும்குணால் பாண்டயாவும் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர்குறிப்பாக குணால் பாண்ட்யாவேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட்டின் பவுலிங்கில் 2 சிக்சரை பறக்க விட்டு  மிரட்டினார். 
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் மும்பை அணி 4 விக்கெற்களை  இழந்து  165 ஓட்டங்கள் சேர்த்ததுகுணால் பாண்ட்யா 41 ஓட்டங்களுடனும் (22 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ஹர்திக் பாண்ட்யா 22 ஓட்டங்களுடனும் (20 பந்து, 2 பவுண்டரிகளத்தில் இருந்தனர்ஹர்திக் பாண்ட்யா இன்னிங்சில் கடைசி பந்தில்   ஓடுகையில்சென்னை வீரர்  வெய்ன் பிராவோவுடன் மோதி கீழே விழுந்தார்காயத்துடன் அவர் வெளியேறினார்சென்னை அணி தரப்பில் வாட்சன் 2 விக்கெட்ற்களும்இம்ரான் தாஹிர்சாஹர் தலா ஒரு விக்கெற்றையும்  வீழ்த்தினர்.

பின்னர் 166 ரஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்குமும்பை பவுலர்கள் குடைச்சல் கொடுத்தனர்ஷேன் வாட்சன் (16), துணை கப்டன் சுரேஷ் ரெய்னா (4  ), அம்பத்தி ராயுடு (22  ), கப்டன் டோனி (5  ), ஜடேஜா (12  ஆகியோர் அதிக நேரம் தாக்குப்பிடிக்கவில்லைசென்னை அணி 75 ரன்களுக்குள் 5 விக்கெற்களை (12 ஓவர்இழந்து தத்தளித்தது.

இந்த சூழலில் களம் கண்ட ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ தனிநபராக ஆட்டத்தின் போக்கை மாற்றி பிரமிக்க வைத்தார்மும்பை பந்து வீச்சை வெளுத்து வாங்கிய அவர்சென்னை அணிக்கு நம்பிக்கைவூட்டினார்ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் அவரது ‘சரவெடி’ மட்டும் தணியவில்லைகடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு 27 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வீசிய பும்ராவின் பந்து வீச்சில் பிராவோ 3 சிக்சர் உள்பட 20 ரன்கள் சேகரித்ததுடன் கடைசி பந்தில்  ஆட்டமிழந்தார்.    


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 வது ஓவர் முடிவில் 8 விக்கெற்களை இழந்து 119 ஓட்டங்கள்  எடுத்து  தோல்வியின் விளிம்பில் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தது. அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இருந்த ஒரே நம்பிக்கை 19 பந்துகளில் 29 ஓட்டங்களுடன் ஆடி வந்த டிவைன் பிராவோதான்.
18 பந்துகளில் 47 ஓட்டங்கள் தேவை. வெற்றிக்குத் தேவைப்படும்ஓட்ட  விகிதம் 15.66. அப்போதுதான் ரோஹித் சர்மா முஸ்தபிசுரிடம் கொடுக்காமல் அதிக ஓட்டங்கலை தொடக்கத்திலிருந்தே கொடுத்து வந்த மெக்லினாகனிடம் கொடுத்தார். அந்த ஓவரின் முதல் பந்தை இம்ரான் தாஹிர் எதிர்கொள்ள 1 ஓட்டம் எடுத்துக் கொடுத்தார். ஸ்ட்ரைக் பிராவோவிடம் வந்தது.
முதல் பந்து மோசமான பந்து என்று கூற முடியாது தரையிலிருந்து பெயர்த்து பவுலர் தலைக்கு மேல் நேராக மிகப்பெரிய சிக்ஸ் அடித்தார் பிராவோ. அடுத்த பந்து பேடில் விழுந்தது. ஆனாலும் அடிப்பதற்கு போதிய இடமோ காலமோ இல்லாத நிலையிலும் ஒரே தூக்குத் தூக்கினார் மிட்விக்கெட்டில் மீண்டுமொரு அதிர்ச்சி சிக்ஸ். அடுத்த பந்து லாங் ஆனில் தட்டிவிட்டு  வேகமாக இரண்டு ஓட்டங்களை எடுத்தார். அடுத்த பந்தை மேலேறி வந்து மிட்விக்கெட்டில் ஒரே இழுப்பு இழுக்க பவுண்டரிக்குப் பறந்தது. 18வது ஓவரின் கடைசி பந்தை சிங்கிளுக்குத் தட்டி விட்டு 19வது ஓவரில் பேட்டிங்குக்கு வந்தார் பிராவோ. மெக்லினாகன் ஓவரில் 20 ஓட்டங்கள் இரண்டு அணி ரசிகர்களும் பதற்றப்பட்டர்கள்.  


18 ஆவது ஒவர்வரை மும்பையின் வெற்றி பிரகாசமாக இருந்தது. 19வது ஓவரை டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ரா வீச முதல் பந்து யார்க்கர் மிஸ் ஆக சற்றே ஒதுங்கிக் கொண்டு   மிகப்பிரமாதமான ஒரு சிக்சரை அடித்தார் பிராவோ,  அடுத்த பந்தும் யார்க்கர் மிஸ் ஆகி புல்டாஸ் ஆக மிட்விக்கெட் மேல் மிகப்பெரிய சிக்ஸர். அடுத்த பந்தில் ஒரு ஓட்டம்  எடுத்தபோது மும்பை வீரர்களின் பதற்றத்தால் மேலும் ஒரு ஓட்டம் எடுக்கப்பட்டது.   அடுத்ததாக பும்ராவின் ஸ்லோ யார்க்கர் சரியாக விழ மட்டையை பிராவோ கீழே இறக்க பந்து ஸ்டம்பில் பட்டது,  ஆனால் பைல்கள் விழவில்லை. மும்பையின் துரதிர்ஷ்டம். சென்னையின் அதிர்ஷ்டம். அடுத்த பந்து தாழ்வான புல்டாஸாக அமைய மிட்விக்கெட்டில் மீண்டும் பந்து சிக்சருக்குப் பறந்தது. அடுத்த பந்து ரவுண்ட் த விக்கெட்டில் பும்ரா வீச ஷார்ட்டாக வைடாக வீசினார் பிராவோ அடிக்க ரோஹித்திடம் கேட்ச் ஆனது.  பிராவோ 30 பந்துகளில் 3 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 68 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தார்.
கடைசி ஓவர் முஸ்தபிசுர் ரஹ்மான் வீச வந்தார். 13வது ஓவரில் இடது காலில் காயம் ஏற்பட்டு பெவிலியன் சென்ற கேதார் ஜாதவ் மீண்டும் களமிறங்கினார். 7 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில் முஸ்தபிசுர் வீசிய முதல் 3 பந்துகளில் ஓட்டம் எடுக்கவில்லை. மும்பைக்கு நம்பிக்கை பிறந்தது. ஆனால் தேவையான பந்துக்கு யாதவ் காத்திருந்ததை யாரும் கவனத்தில்  எடுக்கவில்லை. அப்போதுதான் ஒரு ஏ.பி.டிவில்லியர்ஸ் ஷாட் ஒன்று ஜாதவ்வுக்குக் கைகொடுத்தது. முஸ்தபிசுர் வீச லேசாக ஆஃப் திசையில் நகர்ந்து மண்டியிட்டு மட்டையை பந்திற்கு கொடுத்து பைன் லெக் மேல் ஒரு தூக்குத் தூக்கினார் அது சிக்ஸ் ஆனது ஆச்சரியம்தான்.
2 பந்து 1 ஓட்டம்  எடுத்தால் வெற்றி. ரோஹித் சர்மா அனைவரையும் முன்னால் கொண்டு வந்தார். ஆனால் ஜாதவ் கவர் திசையில் அருமையான பவுண்டரி அடிக்க சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஐபிஎல்-க்கு வந்து முதல் போட்டியிலேயே. அதுவும் தோல்வியின் வாயிலிருந்து ஆட்டத்தைப் பிராவோ பிடுங்கி வர அபாரமான வெற்றி பெற்றது


ஆட்ட நாயகன் பிராவோ. மெக்லினாகன் 4 ஓவர்கள் 44  ஓட்டங்கள், பும்ரா 4 ஓவர்கள் 37 ஓட்டங்கள் முதல் 2 ஓவர்களில் 8 ஒட்டங்கள்தான். பாண்டியா 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், மார்க்கண்டே 23 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சென்னை சூப்பர் கிங்ஸுக்கு நம்ப முடியாத வெற்றி. 


No comments: