Monday, April 9, 2018

பெங்களூருவை வீழ்த்தியது கொல்கத்தா



ஐபிஎல் 11-வது சீசனின் 3-வது ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு  நடந்த போட்டியில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  அணியை எதிர்த்து விளையாடிய  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோல்வியடைந்தது.

கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக்   நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்று பந்து வீச்சைத் தேர்வு செய்தார். பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குயின்டான் டி காக், மெக்கல்லம் ஆகியோர் களமிறங்கினர். டி காக் 4 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் கப்டன் விராட் கோஹ்லி, மெக்கலமுடன் இணைந்து நிதானமாக ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தார்.. 27 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்த மெக்கல்லம், நரேன் பந்தில் போல்டாகி வேளியேறினார்.

அடுத்து களமிறங்கிய டி வில்லியர்ஸ் அதிரடியாக ஆடி 23 பந்தில் 5 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 44 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.. விராட் கோஹ்லி 31 ஓட்டங்களில் வெளியேறினார். இறுதியில், மந்தீப் சிங் அதிரடியாக விளையாடி 18 பந்தில் 37 ஒட்டங்கள் எடுத்தார். பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 176ஓட்டங்கள் எடுத்தது..கொல்கத்தா அணி சார்பில் வினய் குமார், நிதிஷ் ராணா ஆகியோர் தலா இரண்டு விக்கெற்களை வீழ்த்தினர்
இதையடுத்து, 177 ஓட்டங்களை இலக்காக கொண்டு பெங்களூரு அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரேனும் கிரிஸ் லின்னும் இறங்கினர். ஆட்டத்தின் 2வது ஒவரில் கிறிஸ் லின் 5  ஓட்டங்களில் அவுட்டானார். அடுத்து ராபின் உத்தப்பா களமிறங்கினார்.

சுனில் நரேன் தனது அதிரடியாக விளையாடி. அவர் 19 பந்துகளில் 5 சிக்சர், 4 பவுண்டரியுடன் 50 ஒட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து நிதிஷ் ரானா இறங்கினார். உத்தப்பா 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.. அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட்டுக்கு 83 ஓட்டங்கள் எடுத்திருந்தது. அடுத்து கப்டன் தினேஷ் கார்த்திக் களமிறங்கினார்.

நிதிஷ் ரானாவும், தினேஷ் கார்த்திக்கும் இணைந்து நிதானமாக ஆடினர். இருவரும் 55 ஓட்டங்கள் சேர்த்த நிலையில், நிதிஷ் ரானா 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.. அடுத்து இறங்கிய ரிங்கு 6 ஓட்டங்களில் வெளியேறினார்..

அவரை தொடர்ந்து ஆண்ட்ரே ரசல் களமிறங்கினார், அவர் 9 பந்துகளில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 15 ஓட்டங்களெடுத்தார். அடுத்து களமிறங்கிய வினய்குமாருடன் சேர்ந்து தினேஷ் கார்த்தில் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. தினேஷ் கார்த்திக் 35 ஓட்டங்களுடனும், வினய்குமார் 6 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். பெங்களூரு அணி சார்பில் கிரிஸ் வோக்ஸ் 3 விக்கெற்களும், உமேஷ் யாதவ் 2 விக்கெற்களும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

  

No comments: