Monday, April 9, 2018

முதல் போட்டியில் அஸ்வின் வெற்றி



டெல்லி டேடெவில்ஸ் அணிக்கு எதிராக மொஹாலியில் நடைபெற்றபோட்டியில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் மிக இலகுவாக வெற்றி பெற்றது. முதலில் களமிறங்கிய டெல்லி 20 ஓவருக்கு 7 விக்கெற்களை இழந்து 166 ஓட்டங்கள் எடுத்தது பதிலுக்குகளமிறங்கிய பஞ்சாப் எளிதாக அந்த இலக்கை அடைந்து வெற்றிபெற்றுள்ளது. இது ஐபிஎல் போட்டியில் கப்டன் அஸ்வினின் முதல் போட்டியாகும். முதல் போட்டியில் கப்டனாக அஸ்வின் சாதனை படைத்துள்ளார்
பஞ்சாப் அணியில் ஆரோன் பின்ச் தனது திருமணத்திற்காக  தாய்நாட்டுக்குச் சென்றதால் விளையாடவில்லை.  பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், கருண் நாயர், யுவராஜ் சிங், டேவிட் மில்லர், மார்கஸ் ஸ்டோனிஸ், அக்சர் பட்டேல், அஸ்வின்,ஆண்ட்ரு டை, மோஹித் சர்மா, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் உள்ளனர்.
டெல்லியில் அணியில் இருந்து காயம் காரணமாக ரபாடா வெளியேறியுள்ளார். தற்போது அந்த அணியில் கம்பீர், கோலின் மூன்றோ,ரிஷாப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், கிறிஸ் மோரிஸ், விஜய் சங்கர், டேனியல் கிறிஸ்டியன், ராகுல் திவேதியா, அமித் மிஸ்ரா, டிரெண்ட் போல்ட், முகமது ஷமி ஆகியோர் உள்ளனர். டெல்லி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.  
  டெல்லி அணியின் கொலின் முன்றோ, கவுதம் கம்பீர் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முன்றோ 4   ஓட்டங்களில் ஆட்டமிழக்க, கவுதம் கம்பீர் நிலைத்து நின்று விளையாடினார். தொடர்ந்துவந்த ஷ்ரேயாஸ் அய்யர் (11), விஜய் சங்கர் (13) அடுத்தடுத்து வெளியேறினார்கள்.

அடுத்து வந்த ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி 13  பந்துகளில் 28 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் அரைசதம் அடித்த கம்பீர் 42 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 55 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் வந்த கிறிஸ் மோரிஸ் ஆட்டமிழக்காமல் 16 பந்துகளில் 27 ஓட்டங்கள் சேர்க்க டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெற்களை  இழந்து 166 ஓட்டங்கள் சேர்த்தது. பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள ஆப்கானிஸ்தான் வீரர் முஜீப் உர் ரஹ்மான் 4 ஓவரில் 28ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெற்களைக் கைப்பற்றினார்.
 167 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேஎல் ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கேஎல் ராகுல் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் அரைசதம் அடித்தார். இவரது அதிரடியால் பஞ்சாப் அணி 2.5 ஓவரில் 50  ஓட்டங்களை எடுத்தது..

அரைசதம் அடித்த கேஎல் ராகுல் 16 பந்துகளில்  6 பவுண்டரி, 4 சிக்சருடன் 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் விளையாடிய அகர்வால் 5 பந்தில் 1 சிக்சருடன் 7 ஓட்டக்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த யுவராஜ் சிங் 22 பந்துகளில் 12 ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். ஆனால் 4-வது வீரராக களம் இறங்கிய கருண் நாயர் சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 50 ஓட்டங்கள் சேர்த்தார்.

இருவரின் சிறப்பான அரைசதங்களால் மற்ற வீரர்கள் நிதானமாக விளையாடினார்கள். 5-வது விக்கெட்டுக்கு டேவிட் மில்லர் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் 18.5 ஓவர்களில் 167ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.





No comments: