Thursday, April 26, 2018

மும்பை அணி அதிர்ச்சி தோல்வி


 
 
ஹைதராபாத் 111 ஓட்டங்கள் மும்பை 87 ஓட்டங்கள் இரண்டு அணிகளும் 198 ஓட்டங்கள் எடுத்து ரசிகர்களுக்கு வெறுப்பூட்டினர். இரண்டு அனிகளும் முழுமையாக 20 ஓவர்கள் விளையாடவில்லை. ஹைதராபாத் வீரர்களான  வில்லியம்ஸன்,யூஸுப்பதான் ஆகியோர் தலா 29 ஓட்டங்கள். மும்பை குர்னால் 29 ஓட்டங்கள் , சூரியகுமார் 34 ஓட்டங்கள் எடுத்ததே அதிகபட்சமாகும் ஒற்றை இலக்கம் எண்ணிக்கையுடன் பலர் வீரர்கள் திருப்திப்பட்டுக்கொண்டனர்.
.பி.எல்., லீக் போட்டியில், 87  ஓட்டங்களுக்கு சுருண்ட மும்பை அணி, 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

  மும்பை, வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின.நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற   மும்பை அணி கப்டன் ரோகித் சர்மா,களத்தடுப்பைத்  தேர்வு செய்தார்.
 
ஐதராபாத் அணிக்கு ஷிகர் தவான், கப்டன் வில்லியம்சன் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. பும்ரா வீசிய முதல் ஓவரில் வில்லியம்சன், அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்தார். இரண்டாவது ஓவரை வீசிய மெக்லீனகன், தவானை ஐந்து ஓட்டங்களிலும் சகாவை ஓட்டமெதுவுமின்றியும் வெளியேற்றினார். 
மணிஷ் பாண்டே 16 ஓட்டங்களுடனும்  சாகிப் அல் ஹசன்  2ஓட்டங்களுடனும்  ஆட்டம் இழக்க, 46  ஓட்டங்களுக்கு  4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.  29 ஓட்டங்கள் எடுத்த வில்லியம்சனை   ஹர்திக் பாண்ட்யா வெளியேற்றினார். 10 ஓட்டங்கள் எடுத்த  முகமது நபி ,  மார்க்கண்டே 'சுழல்' வலையில் சிக்கினார். கடைசியில் யூசுப்பதான் 29 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். . ஐதராபாத் அணி, 18.4 ஓவரில் 118 ஓட்டங்கள் எடுத்தது. 
மும்பை வெற்றி பெறும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர்.  மிக இலகுவான 119 என்ற எளிய இலக்கைத் துரத்திய மும்பை அணிக்கு, லீவிஸ் (5), இஷான் கிஷான் (0), ரோகித் (2) என, மூவரும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். குர்னால் 24 ஓட்டங்கள் எடுத்தார். போலார்டு (9) கைவிட, சூர்யகுமார் (34) சற்று உதவினார். அடுத்து வந்த மெக்லீனகன் (0), மார்க்கண்டே (1) இருவரும், சித்தார்த் ஓவரில் வீழ்ந்தனர். 19 பந்தில் 3 ஓட்டங்கள் மட்டும் எடுத்து பாண்ட்யாவும் வெளியேற, தோல்வி உறுதியானது.

கடைசியில் முஸ்தபிஜுர் (1) ஆட்டமிழக்க, மும்பை அணி 18.5 ஓவரில், 87 ஓட்டங்கள் மட்டுமெடுத்தது.   ஐதராபாத் அணி 31 ஓட்டங்களில்  வெற்றி பெற்றது. ஐதராபாத் சார்பில், சித்தார்த் கவுல் 3 விக்கெட் சாய்த்தார்.

 
ஐதராபாத் அணிக்காக ரூ. 50 லட்சத்துக்கு ஒப்பந்தம் ஆனவர் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்பில்லி ஸ்டான்லேக், 23. இதுவரை 4 போட்டிகளில் 5 விக்கெட் வீழ்த்தினார். கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால், இவர் நாடு திரும்புகிறார்
ஐதராபாத் (118/10), மும்பை (87/10) அணிகள்  அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தன. .பி.எல்., அரங்கில், இதுபோல இரு அணிகளும் தலா 10 விக்கெட்டுகளை இழந்தது, மூன்றாவது முறையாக நடந்தது


No comments: