Monday, March 27, 2023

சர்வதேச நீதிமன்ற குற்றவாளிக் கூண்டில் புட்டின்


 உக்ரைன் மீது போர் தொடுத்த ரஷ்யா   அங்கு பல மனித உரிமை மீறல்களை நடத்தியது.  குழந்தைகளை நாடு கடத்திய குற்றச்சாட்டில் புட்டினுக்கு பிடிவாரண்ட பிறப்பித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது உக்ரைன் போர் விவகாரத்தில் சர்வதேச அளவில் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது. 

உக்ரைன் மீதான விசாரணை 2022 aam aaNdu  மார்ச் maatham 2ஆம் thikathi தொடங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் நடந்த போர்க் குற்றங்களைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கிறது.

போர் தொடங்கியது முதலே உக்ரைனில் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாக ஐசிசி  எனும்  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் ரஷ்ய ஜனாதிபது புட்டின், ரஷ்யாவின்  குழந்தைகள் உரிமைகள் ஆணையர் மரியா அலெக்ஸீவ்னா லவோவா ஆகியோருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தாக்குதலால்  உக்ரைன்  உருக்குலைந்துள்ளது. ரஷ்யாவின் போர் முகத்தால்  உலகின் பல நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. உக்ரைனில் இருந்து, ரஷ்யாவில் இருந்தும் ஏற்றுமதியாகும்  கோதுமை,கச்சா எண்ணைய் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ரஷ்யாவின் மீது  பொருளதாரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின்  இறையாண்மையைக் காப்பாற்றுவதற்காகவே உக்ரைன்  மீது சிறப்பு இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதாக  புட்டின் தெரிவித்தார். ஐசிசி எனப்படும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரஷ்யா உறுப்பு நாடு இல்லை. ஐசிசி அதிகார வரம்பை ரஷ்யா அங்கீகரிக்கவில்லை என்பதால் இந்த பிடிவாரண்ட் எல்லாம் செல்லாது என்று ரஷ்யா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.  உக்ரைன் போரில் ரஷ்யா எந்தவொரு போர்க் குற்றத்திலும் ஈடுபடவில்லை என்றும் கூறியுள்ளது.  உறுப்புரிமை இல்லாத நாட்டின் மீது விசாரனை நடத்த முடியாது.  ஆனால், உகரைன்  உறுப்பு நாடு என்பதால் அதனைப் பாதுகாக்க வேண்டிய கடமை சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்துக்கு உள்ளது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நெதர்லாந்தில் ஹேக் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்த நீதிமன்றம் 2002ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. விசாரணை போர்க்குற்றங்கள், மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் , ஆக்கிரமிப்பு விவகாரம் உள்ளிட்டவற்றை ஐசிசி விசாரிக்கும். உறுப்பு நாடுகள் விசாரிக்க முடியாது அல்லது விரும்பாத விவகாரங்களை ஐசிசி விசாரிக்கும். உறுப்பு நாடுகளில் வசிக்கும் மக்கள் அல்லது உறுப்பு நாடுகளின் பகுதிகளில் நடக்கும் குற்றங்களை ஐசிசியால் விசாரிக்க முடியும். 

ஐ.சி.சியில் 123 நாடுகள் உள்ளன.  2023ஆம் ஆண்டு பட்ஜெட்டாக சுமார் 170 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டது. இப்போது சர்வதேச நீதிமன்றம் 17 விவகாரங்களை  விசாரித்து வருகிறது. உக்ரைன், உகாண்டா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கென்யா, வெனிசுலா, மியான்மார், பிலிப்பைன்ஸ் உட்பட 17 விவகாரங்களை   ஐசிசி விசாரித்து வருகிறது. இதுவரை சர்வதேச நீதிமன்றம் 31 வழக்குகளை விசாரித்துள்ள நிலையில், 30க்கு மேற்பட்ட  பிடிவாரண்ட்களை ஐசிசி நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர். அதில் 21 பேர் விசாரணைக்கு ஆஜராகினர். ஆனாலும்,  14 பேர் இன்னும் விசாரணைக்குக் கூட ஆஜராகவில்லை.. குற்றஞ்சாட்டப்பட்டோரில் 5 பேர் மரணமடைந்ததால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டுள்ளன.

  சர்வதேச நீதிமன்ற நீதிபதிகள் 10 பேருக்குத் தண்டனை வழங்கியுள்ளனர். யும், 4 பேரை  விடுதலையும் செய்துள்ளனர். காங்கோ, மாலி , உகாண்டா நாடுகளைச் சேர்ந்த 5 பேரைப் போர்க் குற்றங்கள் மற்றும் மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக ஐசிசி குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. அவர்களுக்கு 9 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐசிசியால் அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்க முடியும்.

  ஐவரி கோஸ்ட் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி  லாரன்ட் கபாக்போ தான் ஐசிசி முன் ஆஜரான  மிக முகியமான முதல்  தலைவர் ஆவார். அவர் மீது மூன்று ஆண்டு விசாரணை நடந்தது. 2019இல் அவர் அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டார்.

  ஐநா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான நாடுகள்   சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை ஆதரிக்கிறன. அமெரிக்கா, சீனா ,ரஷ்யா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இதில் உறுப்பினர்களாக இல்லை. அரசியல் ரீதியாக வழக்கு தொடரப்படலாம் என்பதே இதை அவர்கள் புறக்கணிக்கச் சொன்ன காரணமாக இருக்கிறது.   இந்த நீதிமன்றத்தில் மொத்தம் 15 நீதிபதிகள் உள்ளனர். இந்த நீதிபதிகள் ஐநா பொதுச் சபை மற்றும் பாதுகாப்புச் சபையால் ஒன்பது வருடப் பதவிக் காலத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். நீதிபதி நியமனம் முழு பெரும்பான்மையைப் பெறுபவர்கள் மட்டுமே நீதிபதியாக நியமிக்கப்படுவார்கள். இதனால் சில நேரங்களில் பல சுற்றுகளில் வாக்குப்பதிவு நடத்த வேண்டிய சூழல் ஏற்படும்.   நீதிமன்றம் தொடர்ந்து இயங்குவதை உறுதி செய்யும் வகையில், நீதிமன்றத்தின் மூன்றில் ஒரு பங்கு நீதிபதிகள் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு செய்யப்படுவார்கள். ஒரு நீதிபதி தனது பதவிக் காலத்தில் இறந்தாலோ அல்லது இராஜினாமா செய்தாலோ, காலியிடத்தை நிரப்ப உடனடியாக சிறப்புத் தேர்தல் நடத்தப்படும்.

சர்வதேச முற்றவியல் நீதிமன்றத்தில் ரஷ்யா  உறுப்பினராக  இல்லை என்பதால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட புட்டினையும், மரியா ல்வோவா-பெலோவாவையும் கைது செய்ய முடியாது.ரஷ்யாவில் இருக்கும் வரை அவர்களைக் கைது செய்ய முடியாது. இருவரும் ரஷ்யாவுக்கு வெளியே எதாவது வெளிநாட்டிற்குச் சென்றால்.. சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகள் இந்த உத்தரவைச் செயல்படுத்தக் கடமைப்பட்டுள்ளன. இதனால் சர்வதேச நீதிமன்றத்தில் உறுப்பு நாடுகளாக இருக்கும் 123 நாடுகளில் புட்டின்  காலடி எடுத்து வைத்தாலும் அவர் கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன உலக நாடுகள் இதனால் புட்ன் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதில் சிக்கல் ஏற்படலாம்.

  சர்வதேச நீதிமன்றத்திற்கு எனச் சொந்தமாக எந்தவொரு    படையும் இல்லை. தங்கள் உத்தரவைச் செயல்படுத்த அவர்கள், ஐசிசி உறுப்பு நாடுகளின்  பொலிஸையே  படையையே முழுமையாக நம்பி உள்ளனர். உலகின் முக்கிய நாடுகளில் ஒன்றான ரஷ்யத் தலைவர் மீதான உத்தரவு என்பதால் உலக நாடுகள்  அவரைக் கைது செய்வதர்கு வாய்ப்பு இல்லை.    சூடானின் முன்னாள்  தலைவர் ஓமர் அல்-பஷீர் மீது ஐசிசி இதேபோல வாரண்ட் பிறப்பித்து இருந்தது. இருப்பினும், அவர் தென்னாப்பிரிக்கா, ஜோர்டான் எனப் பல சர்வதேச நீதிமன்றத்தின் உறுப்பு நாடுகளுக்குச் சென்றார். அவர் 219இல் பதவியில் இருந்து நீக்கப்பட்ட போதிலும், இன்னும் அவர் சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

சேர்பிய முன்னாள் ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிச் 2006இல் விசாரணையை எதிர்கொண்டார். விசாரணை நடக்கும்போதே அவர் உயிரிழந்தார். முன்னாள் போஸ்னிய சேர்பியத் தலைவர் ரடோவன் கராட்சிக் 2008 கைது செய்யப்பட்டார். அவர் இனப்படுகொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.  அவரது ராணுவத் தலைவர் ரட்கோ மலாடிக் 2011இல் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

 உக்ரைனில் நடந்த போர்க்குற்றங்களில் புட்டின் மீது குற்றம் சாட்டுவதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக ஐநா கூறியுள்ளது. உக்ரைன் போர் தொடங்கியது முதலே அங்குப் போர்க் குற்றங்கள் நடந்ததாகவும் இதற்கு புட்டினே முக்கிய காரணம் என்றும் ஐநா தரப்பில் கூறப்படுகிறது. குழந்தைகள் உக்ரைனின் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து சட்டவிரோதமாகக் குழந்தைகளை நாடுகடத்துதல் உள்ளிட்ட போர்க்குற்றத்திற்கு புட்டினே பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. புதின் நேரடியாக அல்லது மற்றவர்களுடன் இணைந்து இந்த குற்றங்களைச் செய்திருக்கலாம்.. அல்லது அவர் தனது ராணுவ அதிகாரிகளைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்றும் சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், அந்தக் குழந்தைகளில் சிலர் ரஷ்யக் குடியுரிமையைப் பெற நிர்ப்பந்திக்கப்பட்டனர் என்றும் அக்குழந்தைகள் கட்டாயமாக வளர்ப்பு குடும்பங்களில் சேர்க்கப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

 "இதனால் வேறு வழியில்லாமல் அவர்கள் ரஷ்யாவில் நிரந்தரமாக இருக்கிறார்கள். முதலில் இப்படி இடமாற்றம் செய்வது தற்காலிகமானவை என்றே கூறினர். இருப்பினும், இப்போது வரை பெற்றோர் மற்றும் குழந்தைகள் சந்திக்க முடியவில்லை. அங்குப் பல சிரமங்கள் இருக்கிறது. இதனால் குழந்தைகள் தனியாக இருக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இப்படி ரஷ்யாவிற்கு வலுக்கட்டாயமாக 16,221 குழந்தைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இது போர்க் குற்றமாகவே கருதப்படும். இதில் ல்வோவா- பெலோவா இணை குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.

  இது மட்டுமின்றி உக்ரைனில் நடந்த பலாத்காரம், சித்திரவதை தவிர, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான தாக்குதல் உள்ளிட்ட அனைத்திற்கும் ரஷ்யாவே பொறுப்பு என்று ஐ.நா விசாரணைக்குழு கூறியுள்ளது. குறிப்பாக புச்சா மற்றும் இசியம் பகுதிகளில் மனிதக்குலத்திற்கு எதிரான குற்றங்களில் ரஷ்யா ஈடுபட்டதாகவும் அதில் காட்டமான கருத்துகள் கூறப்பட்டுள்ளது.

  உக்ரைனின் கெர்சன் பகுதியில் மட்டும் ரஷ்யா 400 போர்க்குற்றங்களைச் செய்ததாக உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி  குற்றம் சாட்டியிருந்தார். புட்டினுக்கு எதிரான  போர்க்குற்ற ஆதரங்கள் பலமாக  இருந்தாலும் அவர் மீது எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க முடியாத கையரு நிலையில்  உலகம்  உள்ளது.

No comments: