Sunday, March 19, 2023

வேலை நிறுத்தங்களால் பாதிக்கப்படும் அப்பாவிப் பொது மக்கள்

அரசாங்கத்தின் அண்மைய வரிக் கொள்கை அதிகரிப்புகள், அதிகரித்த மின்சாரக் கட்டணங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மற்றும் சம்பள முரண்பாடுகளுக்கு எதிராக தொழில்சார் தொழிற்சங்கக் கூட்டமைப்பினால் கடந்த 15 ஆம் திகதி  நாடளாவிய ரீதியில்   அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது. இதன் காரணமாகசுகாதாரம், துறைமுகங்கள், அஞ்சல், வங்கி, போக்குவரத்து, கல்வி , உயர்கல்வி, ,நீர் வழங்கல் உட்பட பல முக்கியமான  அத்தியாவசிய சேவைகளை முடக்கியது.

ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் முடிந்ததுவேலை நிறுத்தம்  வெற்றி என அறிக்கை விடப்பட்டது. வேலை நிறுத்தம் தோல்வி என அரசாங்கம் அறிவித்ததுஆனால் இரு தரப்பினரும் பொது மக்களைக்  கணக்கில் எடுக்கவில்லை. அரச வைத்தியலாசைகள்  முடங்கின. அவசர நோயாளிகளுக்கு வைத்தியம் செய்யப்பட்டதுதனியார் வைத்திய சாலைகள் தடையின்றி இயங்கின. வைத்தியர்களும், ஆசிரியர்களும் தாம் நினைத்ததைச் சாதித்தனர்.

ஆசிரியர்கள்  இல்லாமையினால்  பாடசாலைகள் வெறிச்சோடினதனியார் வகுப்புகள் வழமைபோல் இயங்கின. அடையாள வேலை நிறுத்தத்தால் பயணங்களை மக்கள் தவிர்த்தனர். குறைந்த பயணிகளுடன் போக்குவரத்து நடைபெற்றது.

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தத்தில் 40-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், பல துறைகளைச் சேர்ந்தவை. பல மாநில மற்றும் அரை மாநில தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்தனவேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்த தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, தமது கோரிக்கைகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காததால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.இது  முடிவல்ல அடுத்த தொடர்  வேலை நிறுத்தத்துக்கான ஆரம்பம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிப்பகிஷ்கரிப்பை ஆதரித்து நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுத்ததாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்தா தெரிவித்தார்.

வேலை நிறுத்தம் காரணமாக  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.கொழும்பு துறைமுகத்தில்   இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் தொழிலாளர்களை பணிக்கு திரும்புமாறு அறிவித்ததையடுத்து துறைமுக ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் SLPA தலைவர் விடுத்த கோரிக்கைக்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. துறைமுக வளாகத்தில் கடற்படையினர் குவிக்கப்பட்டனர்.

பொருளாதர  பாதிப்பில் இருந்து  இலங்கை வெளிவருவதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில் வேலை நிறுத்தங்கள், பணிப் பகிஷ்கரிப்புகள்  காரணமாக  பொருளாதாரம்  மேலும்  முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அரச  ஊழியர்கள் தம்து வேலையைப் பாதுகாப்பதற்காக சுகவீஅ  விடுமுறையை அறிவித்தனர். ஒரெ நேரத்தில் ஆயிரக் கணக்கான அரச  ஊழியர்கள்  சுகவீனமடைவதன் காரணம் எதுவும்  புரியாத புதிரல்ல.

அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து  கொண்டவர்களில் பலர் அதனால் பாதிக்கப்படவில்லை. தமக்குப் பாதிப்பு இல்லாத  ஒரு காரணத்துக்காக வேலை நிறுத்தம் செய்கிறோம் என்ற  உண்மையை அவர்கள்  புரிந்துகொள்ளவில்லை.

கடந்த  ஒரு மாதமாக நடைபெறும் பணிப் பகிஷ்கரிப்புகள், அரசாங்கத்துக்கு எதிரான  போராட்டங்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுவது மக்கள் தான்  என்பதை இரு தரப்பினரும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

பணிப்பகிஷ்கரிப்புபோராட்டம் என்பனவற்றை தொடர்ச்சியாக  முன்னெடுப்பதால் அதனை  முறியடிப்பதற்காக அரசாங்கம்  படைபலத்தைக் காட்டுகிறதுபடையினரும், போராட்டக்காரர்களும் இந்த நாட்டுப் பிரஜைகள் தான் என்பதை  களத்தில் நடைபெறும் முட்டல்கள்உரசல்கள் மறக்கடித்துவிடுகின்றன.

அடையாள வேலைநிறுத்தம் காரணமாக நாட்டின் மொத்த தேசிய உற்பத்திக்கு 46 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.ஒரு நாள் வேலைக்குப் போகாது விட்டால் சாப்பிட  முடியாத பல  குடும்பங்கள்  இருப்பதை  மேல்தட்டு மக்கள் அறிவதில்லை.

No comments: