Wednesday, March 22, 2023

காற்றின் வேகத்தால் டெஸ்ட் போட்டியில் வினோதம்

வெலிங்டனில் இலங்கை,நியூஸிலாந்து  ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற  இரண்டாவ டெஸ்ட்  போட்டியில் ப்பலத்த காற்று வீசியதால் இரண்டு விநோத சம்பவங்கள் நிகழ்ந்தன.  இரண்டாவது  போட்டியில் ஒய்ட் வாஷ் தோல்வியை தவிர்க்கும் முனைப்புடன் நாணயச் சுழற்சியில் வென்ற வென்ற இலங்கை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

நியூசிலாந்தில் சற்று அதிகப்படியான வேகத்துடன் காற்று அடிப்பது வழக்கமான நிலையில் இப்போட்டி நடைபெற்ற வெலிங்டன் மைதானத்தில் மார்ச் 20ஆம் திகதி  நடந்த 4வது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவெளிக்கு பின் அதிகப்படியான காற்று வீசியது.   போட்டி நடைபெற்ற பேசின் ரிசர்வ் கிரிக்கெட் மைதானம் திறந்த வெளியாக இருக்கும் காரணத்தால் காற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது.

 பந்து வீசும் ஒரு திசையில் பின்புறத்தில் உயரமான  கோபுரங்கள் அமைத்து போட்டியை நேரலையாக படம் பிடித்த படப்பிடிப்பாளர்கள்  தொடர்ந்து துல்லியமாக படம் பிடிக்க முடியாத அளவுக்கு காற்று பலமாக வீசியது. அதன் காரணமாக பெவிலியன் இல்லாமல் அதிகத் திறந்த வெளியுடன் பின்புறத்தில் மரங்கள் இருக்கும் அடிலெய்ட் ரோட் திசையில் படம் பிடித்துக் கொண்டிருந்த படப்பிடிப்பாளர்கள் காற்ரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியமல்   கீழே இறங்கினார்கள். அதனால் ஒரு கட்டத்தில் அந்த போட்டி ஒரு கோணத்தில் இருந்து மட்டும் ஒளிபரப்பப்பட்டது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அதை விட மைக்கேல் பிரேஸ்வெல் வீசிய 121 ஓவரின் ஒரு பந்து கையில் இருந்து விட்டபின் காற்றில் வேகத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து இறுதியில் பிட்ச் வரையறுக்கப்பட்டிருக்கும் கடைசி வெள்ளை கோட்டை தாண்டி தரையில் பட்டது.அதை விக்கெட் கீப்பர் கச்சிதமாக பிடித்தும் பிட்ச்சுக்கு வெளியே வந்து சென்றதால் நடுவர் வைய்ட் வழங்கினார்.  காற்றால் நடந்த  இந்த இரண்டு  வினோத நிகழ்வுகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

No comments: