Monday, March 20, 2023

உலகசாதனையுடன் வென்றது அவுஸ்திரேலியா


 விசாகபட்டினத்தில்  நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான  இரண்டாவது  ஒருநாள்  போட்டியில் 10 விக்கெற்களால்  அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய  இநதியா  26 ஓவர்களில் சகல விக்கெற்களையும் இழந்து 117  ஓர்ரங்கள் எடுத்தது  அவுஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 5 விக்கெற்களையும் சீன் அபோட் 3 விக்கெற்ககளையும் வீழ்த்தின.

118 என்ற சுலபமான இலக்கை துரத்திய அவுஸ்திரேலியா  11 ஓவர்களில்  விக்கெற் இழப்பின்றி  121 ஓட்டங்கள்  எடுத்து 10 விக்கெற் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது.   டிராவிஸ் ஹெட் 10 பவுண்டரியுடன் 51* (30) ஓட்டங்களும் ,மிட்சேல் மார்ஷ் 6 பவுண்டரி 6 சிக்சருடன் 66* (36) ஓட்டங்களும் எடுத்தனர்.

 சொந்த மண்ணில் வலுவான அணியாகவும் உலகில் முதல் அணியாகவும் திகழும் இந்தியாவை  தோற்கடித்த அவுஸ்திரேலியா 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்தது.

11 ஓவர்களில்  234 பந்துகள் மீதம் வைத்து  எளிதாக வென்ற அவுஸ்திரேலியா ஒருநாள் கிறிக்கெற்ரில் இந்தியாவுக்கு எதிராக அதிக பந்துகளை மீதம் வைத்து பந்துகள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த அணி என்ற நியூசிலாந்தின் சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது.

  1. அவுஸ்திரேலியா : 234 பந்துகள், விசாகப்பட்டினம், 2023*

 2. நியூசிலாந்து : 212 பந்துகள், ஹமில்டன், 2019

3. இலங்கை : 209 பந்துகள், தம்புள்ள‌, 2010

 4. இலங்கை : 181 பந்துகள், அம்பாந்தோட்டை , 2012

5. இலங்கை : 176 பந்துகள், தரம்சாலா, 2017 

சொந்த மண்ணில் குறைந்தபட்ச ஸ்கோரையும் (117 ஆல் அவுட்) பதிவு செய்து இந்தியா பரிதாப சாதனை படைத்துள்ளது. முந்தைய சாதனை : 148 ஆல் அவுட், வதோதரா, 2007. இதனால் சொந்த மண்ணில் இத்தொடரை வென்று தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கும் இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

சொந்த மண்ணில் குறைந்தபட்ச  ஓட்டங்களை (117  )  இந்தியா பதிவு செய்துள்ளது. முன்னதாக 2007 ஆம் ஆண்டு வதீதராவில்   148  ஓட்டங்கள் எடுத்தது.

அவுஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளரான மிட்சல் ஸ்டார்க் சர்வதேச ஒருநாள் கிறிக்கெற்றில்  பிரட் லீ , ஷாஹித் அப்ரிடியுடன் இணைந்து   சாதனையை பகிர்ந்து கொண்டுள்ளார்.   9 முறை ஒரு போட்டியில் 5 விக்கெற்களை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.வக்கார் யூனிவர் 13 முறை எடுத்து முதலிடத்திலும், முத்தையா முரளிதரன் 10 முறை 5 விக்கெற்களை எடுத்து இரண்டாவது இடத்தில்  இருக்கின்றனர்.  மிட்சல் ஸ்டார்க் , பிரட் லீ  ,சாகித் அப்ரிடி ஆகியோர் 9 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து  மூன்றாவது  இடத்தில் இருக்கின்றனர்.

No comments: