Saturday, December 2, 2023

மோடியின் ஆட்சியை எடைபோடும் மினித் தேர்தல்

மத்தியப்பிரதேசம்,ராஜஸ்தான்,சத்தீஸ்கர்,மிசோரம்தெலுங்கானா ஆகிய ஐந்து சடமன்றத் தேர்தல்  வாக்குப்பதிவு  நிறைவடைந்தது.டிசம்பர் 3ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஐந்து மாநிலங்களுக்கும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன.அடுத்த ஆண்டு நடைபெறும்  இந்திய பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக,ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகிறது.

மாநிலத் தேர்தல் என்றாலும், மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் சாதக, பாதகமும் தேர்தல் முடிவை மாற்றியமைக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.ஐந்து மாநிலங்களிலும்  பிரசாரங்கள் களைகட்டின. மாநிலத் தலைவர்களை முன்னிறுத்தி  எதிர்க்கட்சிகள்  பிரசாரம் செய்தன.தேர்தல் பரப்புரையில் வழமையாக  மோடியை முன்னிறுத்தும் பாரதீய ஜனதாக் கட்சி அவரை வெளிப்படுத்தவில்லை. தேர்தல் பரப்புரையில்  மோடி அதிக அக்கறை காட்டவில்லை..

திராவிட முன்னேற்றக் கழகத்தின் திராவிட மொடலை மிகக் கடுமையாக விமர்சித்த  பாரதீய ஜனதாக் கட்சி தேர்தல் பரப்புரையில்  தமிழகத்தில் தமிழகத்தில் உள்ள திட்டங்களை வாக்குதியாகக் கொடுத்தது. மகளிருக்கு உதவித்தொகை, காஸ்ஸுக்கு மானியம் ,இலவசத்திட்டங்கள் என்பனவற்றை வரிசையாக  ஒப்பித்ததுஇலவசமாக எதையும் கொடுக்கக்கூடாது எனச் சொன்ன பாரதீய ஜனதாக் கட்சி மக்களைக் கவருவதற்காக  இலவசத்திட்டங்களை வாக்குறுதியாகக்கொடுத்தது.

            மத்திய பிரதேசத்தில் ஆட்சியைப் பிடிப்பது யார்?

மத்திஅப்பிரதேசத்தில் 230 சட்டமன்ற தொகுதிகள்  உள்ளன. பாரதீய ஜனதா ஆட்சி செய்கிறது. பெரும்பான்மைக்கு 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

ஜன் கி பாத் ,ரிவி 9 பாரத்வர்ஷ்- போல்ஸ்ட்ராட்ஆகியனவற்றின் கருத்துக்கணிப்பின்படி காங்கிரஸ்  குறுகிய வெற்றியைப் பெறும்அனால்ரிபப்ளிக் ரிவி- மேட்ரிஸ் கருத்துக்கணிப்பு பாஜகவிற்கு பெரும்பான்மையை வழங்கியுள்ளது.

                 ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்குமா  பாஜக ?

199 இடங்கள் கொண்ட ராஜஸ்தான் சட்டசபையில், 100 தொகுதிகளில் வெற்றி பெறுபவர்கள் ஆட்சி அமைக்கலாம்.

ஜன் கி பாத், டைம்ஸ் நவ் ரிவி 9 பாரத்வர்ஷ்- போல்ஸ்ட்ராட் ஆகியவை பாஜக பெரும்பான்மை பெறும் என கணித்துள்ளன.

இம்மாநிலத்தில் உதிரி கட்சிகள் அதிகபட்சமாக 21 தொகுதிகள் வரை கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், ஆட்சி அமைக்க அவர்களின் பங்கு காங்கிரஸ், பாஜகவிற்கு தேவைப்படும்.

காங்கிரஸ் ஆட்சிசெய்யும் ராஜஸ்தானில்  பாரதீய ஜனதா ஆட்சியைப் பிடிக்கிறது என அனைதுக் கருத்துக் கணிப்புகளும் சொல்கின்றன. பாரதீய ஜனதாக் கட்சியினர்  வெடிகொளுத்திக் கொண்டாடுகின்றனர்கருத்துக்கணிப்பு முடிவுகளை ராஜஸ்தான் காங்கிரஸார் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை என்பதும், மக்கள் தங்கள் பக்கம் தான் எனவும் கூறி வருகின்றனர். இதனிடையே ராஜஸ்தான் மாநில எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகளை பொறுத்தவரை சொல்லி வைத்தாற்போல் எல்லா முடிவுகளும் பாஜக தான் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன.

              சத்தீஸ்கர் மாநிலத்தை தக்கவைக்கும் காங்கிரஸ்

ஏபிபி செய்திகள்- சீ ஓட்டர், இந்தியா டுடே- ஆக்சிஸ் மை இந்தியா, இந்தியா டிவி- சிஎன்எக்ஸ், ஜன் கி பாத், நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா,

ரிபப்ளிக் டிவி- மேட்ரிஸ், ரிவி 9 பாரத்வர்ஷ்- போல்ஸ்ட்ராட் ஆகிய அனைத்து கருத்துக்கணிப்புகளும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், காங்கிரஸ் அதிகபட்சமாக 57 தொகுதிகளை கைப்பற்றும் என நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா கணித்துள்ளது

சத்தீஸ்கரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 57 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைக்கும் என டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போலில் வெளியாகியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் சில தொகுதிகளில் நக்ஸலைட் ஆதிக்கம் உள்ளன. இதனால்தான் இங்கு 90 தொகுதிகளே இருந்தாலும் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது

        காங்கிரஸையும், பாஜகவையும் கைவிட்ட மிசோரம்

மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி , ஜோரம் மக்கள் இயக்கம் ஆகிய கட்சிகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.

  மக்கள் இயக்கம் ஆட்சி அமைக்கும் என ஜன் கி பாத் ஜோரம் இன்  கருத்துக் கணிப்பு சொல்கிறதுஇந்தியா ரிவி- சிஎன்எக்ஸ் ஆகியன  மிசோ தேசிய முன்னணியும் ஆட்சி அமைக்கும் எனக் கணித்துள்ளன.

இரு கருத்துக்கணிப்புகளும், பாஜக அதிகபட்சமாக இரண்டு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றும் என  சொல்கின்றன.

காங்கிரஸ் அதிகபட்சமாக 10 தொகுதிகளை கைப்பற்றும் என, இந்தியா ரிவி- சிஎன்எக்ஸ் கணித்துள்ளது.

 எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் (ZPM) 20 தொகுதிகளிலும், ஆளும் மிசோ தேசிய முன்னணி (MNF), 12 தொகுதிகளிலும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு கூறுகிறது. இதே போல் காங்கிரஸ் கட்சி 7 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும், பாஜகவுக்கு 1 தொகுதியில் மட்டுடம் வெற்றி வாய்ப்பு உள்ளதாகவும் 'நியூஸ் 18 இந்தியா' கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.   மிசோரமில் தொங்கு சட்டசபை அமையும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மிசோரம் தேர்தல் மூலமாக காங்கிரஸ் மீண்டும் வடகிழக்கு மாநிலங்களில் தலையெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது வெளிவந்துள்ள கருத்துக்கணிப்புகள் காங்கிரஸுக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கிறது.

1987ம் ஆண்டு மிசோரம் யூனியன் பிரதேசத்திலிருந்து, மாநிலமாக பரிணமித்ததிலிருந்து அதன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிசோ தேசிய முன்னணி அல்லது காங்கிரஸ்தான் மாறி மாறி ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. தற்போது மிசோ தேசிய முன்னணி ஆட்சியிலிருக்கிறது

 90 தொகுதிகளில் 15 தொகுதிகளில் நட்சத்திர போட்டியாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த மாநிலத்தில் முக்கிய பிரச்சினைகளாக ஊழல், விவசாயிகளின் பிரச்சினை, பழங்குடியினர் பிரச்சினை , நக்ஸலைட்டுகள் பிரச்சினை ஆகியவை ஆகும். இங்கு முதல் கட்ட தேர்தலின் போதே சுக்மா மாவட்டத்தில் குண்டுவெடித்தது.

             தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்கும் காங்கிரஸ்

ஆளும் பிஆர்எஸ், காங்கிரஸ் , பாஜக  ஆகியவற்றுக்கிடையேஇடையே மும்முனை போட்டி நிலவியது.119 தொகுதிகளை கொண்ட தெலுங்கானா மாநிலத்தில், பெரும்பான்மைக்கு 60 தொகுதிகள்  வெற்றி பெற்றால் ஆட்சியைப் பிடிக்கலாம்.

இந்நிலையில், ஜன் கி பாத், இந்தியா ரிவி- சிஎன்எக்ஸ், ரிவி 9 பாரத்வர்ஷ்- போல்ஸ்ட்ராட் ஆகியவை, காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என கணித்துள்ளனர்.

இந்தியா ரிவி- சிஎன்எக்ஸ், அதிகபட்சமாக காங்கிரஸ் 79 தொகுதிகளை கைப்பற்றும் என கணித்துள்ளது.

எதிர்பார்த்தது போலவே, ஆளும் பிஆர்எஸ்ஸை  தள்ளிவிட்டு, மேலே வந்துள்ளது காங்கிரஸ். தேர்தலுக்கு பிந்தைய கணிப்பில், காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளதாக கணிப்புகள் வெளியாகி உள்ளன‌. சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) ஆட்சி நடைபெறுகிறது.

தெலுங்கானாவில் முதல்முறையாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதைக் கடந்த முதியவா்கள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தலுக்குப் பின்னரான கணிப்புப்படி மத்திய பிரதேசத்தில் ஆட்சியை பாஜக தக்க வைக்கும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து பாஜக அங்கே வெற்றிபெறும் என்று பெரும்பாலான கணிப்புகள் தெரிவிக்கின்றன. சட்டீஸ்கர், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன. மிசோரத்தில் இழுபறி ஏற்படும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன.

 மிகுந்த  எதிர்பார்ப்பிற்கு இடையில் ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்துள்ளதுஅடுத்த ஆண்டு நடைபெற  உள்ள நாடாளுமன்றத் தேர்தலின் முன்னேடியாக  இந்த முடிவு எதிர் பார்க்கப்படுகிறது.  

ராஜஸ்தானில் பாரதீய ஜனதா வெற்றி பெறும்.  தெலுங்கானா, சத்தீஷ்கரை காங்கிரஸ் கைப்பற்றும்.     ராஜஸ்தானில்,      பாரதீய ஜனதா வெற்றி பெற்றாலும், மிகக் குறைந்த சத வீத்தால் காங்கிரஸ் தோல்வியடைவதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.   தென்னிந்தியாவில் ஏற்கனவே கர்நாடகாவை இழந்த பாஜக தெலுங்கானாவில் மிக மோசமான படுதோல்வியை சந்திக்கும் என்று கணிப்புகள் கூறுகின்றன.

இதனால் நாடாளுமன்றத் தேர்தலில்  தேர்தலிலும்  பாரதீய ஜனதா  பின்னடைவைச் சந்திக்கும்  என எதிர் நோக்கப்படுகிறது. 

No comments: