Saturday, December 2, 2023

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வென்றது இந்தியா

ரான்பூரில்  அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற  நான்காவது ரி20 போட்டியில் 20  ஓட்டங்களால் வெற்றி பெற்ற  இந்தியா தொடரிக் கைப்பற்றியது.

இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியது.   ரிங்கு சிங் 46, ஜித்தேஷ் சர்மா 35,ருதுராஜ் 32 ஜெயஸ்வால் 27 ஓட்டங்க ள் எடுத்த உதவியுடன் 174 ஓட்டங்கள் எடுத்தது

அவுஸ்திரேலியா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாட முடியாமல் தவித்தது. ஹெட் 31, வாட் 36  ஓட்டங்கள் எடுத்தனர்.  20 ஓவர்களில் 154 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து 20ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது.

                   பாகிஸ்தானின் சாதனையை உடைத்த இந்தியா

2006  ஆம் ஆண்டு முதல்  ரி20 கிரிக்கெட்டில் விளையாடி வரும் இந்தியா  136 ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளதுசர்வதேச ரி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை தகர்த்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் 135, நியூசிலாந்து 102 வெற்றிகளைபெற்று அடுத்த இடங்களில் உள்ளன.

                                           ருதுராஜ் கெய்க்வாட் சாதனை

இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 28 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்து 14வது ஓவரில் ஆட்டமிழந்தார். இன்று எடுத்த ரன்களின் மூலம், ருதுராஜ் கெய்க்வாட்  டி20 யி 4,000 ஓட்டங்களை கடந்தார்

50 கேட்சுகளை பிடித்து மேத்யூ வேட் சாதனை

ரி20 போட்டிகளில் 50 கேட்சுகளை பிடித்த முதல் அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை மேத்யூ வேட் பெற்றுள்ளார்,

இதுவரை, ரி20 போட்டிகளில் மேத்யூ வேட் 56 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். அதில், 50 கேட்சுகளும் 6 ஸ்டம்பிங்குகளும் அடங்கும்.

அலெக்ஸ் கேரி , ஹாடின் ஆகியோர் ரி20 போட்டிகளில் அவுஸ்திரேலியாவின் கீப்பர்களாக தலா 23 விக்கெட்டுகளை எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் ரி20 போட்டிகளில் 50-க்கும் மேற்பட்ட கேட்சுகளை கைப்பற்றிய ஐந்தாவது வீரர் என்ற பெயரையும் மேத்யூ வேட் பெற்றுள்ளார்.

குயின்டன் டி காக் 76 [தென் ஆபி] ‍, 59-ஜோஸ் பட்லர்  59 இங்கிலாந்து],டோனி  57 [இந்தியா], ,இர்பான் கரீம் 51 [கென்யா] ஆகியோர் முதல் 4 இடத்தில் இருக்கும் சிறந்த ரி20 விக்கெட் கீப்பர்கள் ஆவர்

No comments: