Tuesday, July 29, 2025

மோடிக்கு குடைச்சல் கொடுக்கும் துணை ஜனாதிபதி

 

இந்திய துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர்   திடீரென இராஜினாமாச் செய்துள்ளார். இது இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

இந்திய ஜனாதிபதியும், துணை ஜனாதிபதியும்  இந்திய மத்திய அரசினால் தெரிவு செய்யப்படுவார்கள்.  எதிர்க் கட்சிகள் இதற்கு பெயரளவில் ஒப்புதல் கொடுப்பார்கள். மத்திய  அரசின்  கொளகைகளையும், பிரசாரங்களையும் அரசியல் ரீதியாக  மேம்படுத்தும்  வேலைகளையும் ஜனாதிபதி செய்வார். மத்திய‌ அரசு கொண்டு வரும் சட்டமூலங்களுக்கு ஒப்புதலளிப்பதே ஜனாதிபதியும் முக்கியமானபணியாகும். துணை ஜனாதிபதிக்கு  முக்கியத்துவம்  பெரிதாக  இல்லை.சில வேலை அவர் அடுத்த ஜனாதிபதியாகலாம். துணை ஜ்னாதிபதியாகலாம்.

மதிய அரசின் நெருக்கடி காரணமாகவே துணை ஜனாதிபதி இராஜினாமாச் செய்திருக்கல்லம் என எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.மோடி அரசு  விரும்பியவாரு அவர் செயற்படவில்லை ஆதலால் எழுந்த நெருக்கடி அவரை இராஜினாமாவுக்குத் தளியது.

  துணைஜனாதிபதி  ஜெக்தீப் தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து வர்த்தமனி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நாடாளுமன்ற  மழைக்கால கூட்டத் தொடர் கடந்தவாரம்  துவங்கியது. இதில் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பி, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடரின் முதல் நாளே அலுவல் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் அன்று  மாலை, ஜெக்தீப் தன்கர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். மருத்துவ காரணங்களால் உடல்நிலையை கருத்தில் கொண்டு பதவியை இராஜினாமா செய்வதாக அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதம் ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த திடீர் ராஜினாமா அறிவிப்பு பரபரப்பையும், விவாதத்தையும் கிளப்பியது. பகல் 1 மணி முதல் மாலை 5 மணிக்குள் என்ன நடந்தது? துணை ஜனாதிபதி பதவியை ஜெக்தீப் தன்கர் ராஜினாமா செய்ய என்ன காரணம் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சந்தேகத்தை எழுப்பி, கேள்வி கேட்டு வந்தன. அதோடு ஜெக்தீப் தன்கர் தனது ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் பெரும் அமளி துமளி ஏற்பட்டது.  அவையில் அமளி நீடித்ததால் பார்லிமென்ட் இரு அவைகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணை ஜனாதிபதியின் இராஜினாமாவின் பின்னால் விடை தெரியாத பல கேள்விகள்  இருப்பதாக  காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. அவருடைய அண்மைக் கால நடவ்டிக்கைகள் பாரதீய ஜனதாவுக்கு எரிச்சலை ஏர்படுத்தின. இதனை காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது.

 2027 வரை அவர் பதவிக்காலம் உள்ளது. அவர் ராஜ்யசபாவின் தலைவராகவும் இருந்தார். எதிர்க்கட்சிகளுடன் அவருக்கு அடிக்கடி கருத்து வேறுபாடுகள் இருந்தன. சில நேரங்களில் அவரது கருத்துக்கள் அரசாங்கத்திற்குள்ளேயே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் குறித்தும் அவர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வந்தார். மேற்கு வங்க ஆளுநராக இருந்தபோது அவரது செயல்பாடுகள் கடும் விமர்சனங்களை சந்தித்தன. இந்த நிலையில்தான்  திடீரென தனது பதவியை அவர் ராஜினாமா செய்து விட்டார்.

 தன்கர் தனது பதவிக் காலத்தில் கம்போடியா, கட்ட்ர், பிரிட்டன்   ஈரான் ஆகிய நாடுகளுக்கு மட்டுமே சென்றுள்ளார். அதேபோல் இந்தியா வரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் தன்னை வந்து சந்திப்பதும் குறைவாகவே இருந்தது என்பது அவரது குமுறலாக இருந்துள்ளது

அதேபோ ஈரான் அதிபர் இப்ரஹிம் ரெய்ஸி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தபோது, அவரது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள இந்தியா சார்பில் தன்கர் சென்றிருந்தார். அங்கே அவருக்கான ஏற்பாடுகள் குறித்து   துணை ஜனாதிபதி  அலுவலகம் கடும் அதிருப்தியைத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 ரசு விழாக்கள் தொடர்பான மரபுகளைப் பின்பற்றப்படுவதிலும் தன்கர் ஒதுக்கப்பட்டதாக கருதுப்படுகிறது. அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ் இந்தியா வந்தபோது ஏற்பாடு செய்யப்பட்ட அரசு விருந்து நிகழ்வில் தன்கருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதுபற்றிய  எந்தத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை. அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றது.

டெல்லியில் கடந்த மே 19‍ம் திக‌தி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஜெகதீப் தன்கர், மரபு ரீதியாக கடைப்பிடிக்கப்படும் மரியாதை குறைபாடு குறித்து சுட்டிக் காட்டியிருந்தார். உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கான ப்ரோடோகால் குறைபாடு குறித்து சுட்டிக்காட்டி நானும் அதே பிரச்சினையை எதிர்கொள்கிறேன் என்று கூறியிருந்தார்.

 அரசு அலுவகங்களில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி படங்களுடன் தனது படமும் வைக்கப்படவில்லை என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாகத் தெரிகிறது.

ஜெகதீப் தன்கர் 35 மாதங்கள் இப்பதிவியில் இருந்துள்ளார். ஆனால் 4 முறை மட்டுமே இருநாட்டு நல்லுறவு ரீதியாக அவர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். இதனால் வெளியுறவு அமைச்சுக்கும் அவருக்கும் இடையே பிணக்கு ஏற்பட்டுள்ளது. வெளியுறவுக் கொள்கைகள் ரீதியாக ஓரங்கட்டப்பட்டதாக தன்கர் உணர்ந்துள்ளார். அவருக்கு முன்னதாக  துணை ஜனாதிபதியாக இருந்த  வெங்கயா நாயுடு 2017 முதல் 2022 வரை 17 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார், அதற்கு முன்னர் 2007 முதல் 2017 வரை அப்பதவியில் இருந்த ஹமீது அன்சாரி 28 முறை வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

துணை ஜனாதிபதிப்  பதவிக்கு மீண்டும் பாஜகவைச் சேர்ந்தவரையே தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக நிறுத்தும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

  தன்கரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக ஜனாதிபதி மாளிகை அறிவிப்பு வெளியிட்டது. இதனையடுத்து அடுத்த துணை ஜனாதிபதி யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அடுத்த துணை ஜனாதிபதி பதவிக்கு பலரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகிது.

ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ்குமார், மத்திய அமைச்சர் ராம்நாத் தாகூர் உள்ளிட்ட பல பெயர்கள் துணை ஜனாதிபதி பதவிக்கு அடிப்பட்டது. இவர்களில் ராம்நாத் தாகூரின் பெயர் தான் அதிகமாக சொல்லப்படுகிறது. இவர் சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டாவை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளார். அடிக்கடி நடக்கும் இவர்களின் சந்திப்புகளும், இந்த சந்திப்பிற்கு பிறகு நட்டா மற்ற எம்பி,,க்களுடன் ஆலோசனை நடத்தியதையும் வைத்து பார்க்கையில் இவரே அடுத்த துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதற்கிடையில்,அடுத்த துணை ஜனாதிபதி பாஜக கட்சியை சேர்ந்தவராக தான் இருப்பார் என பாஜக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் ச்ட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் அந்த மாநில மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக பீகாரை சேர்ந்த தாகூரை அடுத்த துணை ஜனாதிபதியாக பாஜக தலைமை நியமிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் பணிகளை துவக்கி விட்டதாக தேர்தல் கமிஷன் ஏற்கனவே தெரிவித்துள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலுக்கான தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் துணை ஜனாதிபதி தேர்தல்  திக‌தி உள்ளிட்ட நடைமுறைகள் குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ரமணி

27/7/25 

 

 

 

 

0000000000000000

 

 

No comments: