Wednesday, December 24, 2025

உலகக் கிண்ண உதைபந்தாட்ட சம்பியனுகு $50 மில்லியன் பரிசுத் தொகை

 

2026  ஆம் ஆண்டு  நடைபெறும் உலகக்  கிண்ண உதைபந்தாட்ட  சம்பியனுக்கு $50 மில்லியன் வழங்கப்படும் என பீபா புதன்கிழமை   அறிவித்தது. உலகக்கிண்ண வரலாற்றில் மிக அதிகமான தொகை இதுவாகும்.

  2022 இல் ஆர்ஜென்ரீனா வென்ற $42 மில்லியனையும், 2018 இல் பிரான்ஸ் பெற்ற $38 மில்லியனையும் விட  இது  அதிகமாகும்.அதிகமாகும்.

2026 ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை அமெரிக்கா, கனடா , மெக்சிகோ ஆகியன  இணைந்து நடத்துகின்றன.  2022 இல் கட்டாரில் வழங்கப்பட்ட  $440 மில்லியனை விட 48.9% அதிகரித்துள்ளது.   

  2026  ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் விளையாடும் அணிகள் ஆயத்த செலவுக்காக தலா  $1.5 மில்லியனையும், குழு நிலையில் பங்கேற்பதற்காக தலா $9 மில்லியனையும் பெறும்,

 அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணிகள்  தலா $11 மில்லியனையும், 16 சுற்றுக்கு எட்டிய அணிகள்  தலா $15 மில்லியனையும் பெறுகின்றன. காலிறுதிக்கு முன்னேறும் நாடுகளுக்கு  தலா$19 மில்லியன், நான்காவது இடம் பிடிக்கும் அணிக்கு $27 மில்லியன், மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு $29 மில்லியன் ,இறுதிப் போட்டியில் தோல்வியடையும் அணிக்கு $33 மில்லியன் பரிசுத் தொகையாக வழங்கப்படுகிறது.

 

ரமணி

21/12/25 

No comments: