தமிழக சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான கட்சிகள் அனைத்தும் பிரிந்து இருக்கின்றன. அதிராவிட முன்னேற்றக் கழகமும் பாரதீய ஜனதாவும் ஓரணியில் உள்ளன.
சீமான் தனிவழியில் செல்கிறார். ஸ்டாலினையும் திமுகவையும் மிகக் கடுமையாக விமர்சிகும் விஜய் இன்னொரு பக்கம் நிற்கிறார். பன்னீர்ச்செல்வமும், தினகரனும் விஜயுடன் கைகோர்ககும் நிலையில் இருக்கின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான வாக்குகள் மூன்று திசையில் பிரிய உள்ளன. சிறிய கட்சிகளும், சுயேட்சைகளும் தேர்தல் சமயத்தில் களம் காண்பார்கள். அப்போது திராவிட முன்னேற்றக் கழகத்துக்க்கு எதிரான வாக்குகள் மேலும் சிதறலாம்.
பன்னீரையும், தினகரனையும் தமது கூட்டணிக்குள் கொண்டுவர பாரதீய ஜனதா கடுமையாக முயற்சி செய்தது. தினகரனுடன் அண்ணாமலை பேச்சு வார்த்தை நடத்தியும் சாதகமான முடிவு எட்டப்படவில்லை. எடப்பாடியை முதலமைச்சராக்கும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என பன்னீரும், தினகரனும் அடித்துச் சொல்லியுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் பன்னீரும், தினகரனும் கண்டிப்பாக இணையமாட்டார்கள். இந்த நிலையில் அவர்களின் அடுத்த தெரிவு தமகவாகத்ன் இருக்க முடியும். பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இன்னமும் முடிவு எட்டப்படவில்லை. அவர்கள் இருவரும் தமிழ் மக்கள் கட்சியில் இணைந்தால் அது அண்ணா திராவிட முன்னேற்றத்துக்குப் பலமாக அடியாகத்தான் இருக்கும்.
கடந்தகால தமிழக தேர்தல் முடிவுகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமாக இருப்பதாக விகிதாசாரக் கணக்குகள் தெரிவிக்கின்றன.தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணி எப்படி இருக்கிம் என்ற எதிர் பார்ப்பு எழுந்துள்ளது. பலவீனமான கூட்டணி அமைந்துவிட்டால், அது விஜய்க்கு சாதகமாக போகுமா? என்றெல்லாம் கணிப்புகள் அரசியல் களத்தில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
தமிழகத்தின் 39 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 46.97 சதவீத வாக்குகளைப் பெற்றது.. ஆனால்,
அதிமுக தலைமையில் தேமுதிக, எஸ்டிபிஐ உள்ளிட்ட கட்சிகள் இருந்த கூட்டணி 23.05 சதவீத வாக்குகளைப் பெற்றது. அதிமுக, பாஜக வாக்குகள் பாஜக,
பாமக, அமமுக,
தமாகா, தேசிய ஜனநாயக கூட்டணி என மொத்தம் 18.28 சதவீத ஓட்டுகளை பெற்றிருந்தது.. அப்போது அதிமுக 28 தொகுதிகளில் 2ம் இடத்தை பிடித்திருந்தது, அக்கட்சி தொண்டர்களுக்கே அதிர்ச்சியையும், அதேசமயம் பாஜக கூட்டணி 11 தொகுதிகளில் 2ம் இடத்தில் முன்னிலை வகித்தது.
234 தொகுதிகளில், 80 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி, அதிமுக கூட்டணியை விட முன்னிலை பெற்றது.எனவேதான், அந்த
80 தொகுதிகளில்
75 இடங்களில் பாஜக போட்டியிட வேண்டும் என்று தமிழக பாஜக ஆசைப்படுகிறது.. இதைத்தான் அமித்ஷாவிடமும் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக , பாஜக ஆகியவற்றுக்கு இடையேயான முதற்கட்டத் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது.மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல்,
அர்ஜுன் ராம் மேக்வால் , முரளிதர் மோஹோல் ஆகியோர் பாஜக தரப்பிலும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர் அதிமுக தரப்பிலும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட அதிமுகவும் பாஜகவும், வரவிருக்கும் 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் கைகோர்த்துள்ளன. இதில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 160-க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிட அதிமுக திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கட்சி பெரும்பான்மையை பெற வேண்டும் என்றால், அந்த கட்சி மட்டும் தனியாக மொத்தமுள்ள தொகுதிகளில் பாதிக்கு மேல் பெற வேண்டும். அதாவது 234 தொகுதிகளில் பாதியான 117 தொகுதிகளை விட கூடுதலாக பெற வேண்டும். அப்படி பெற்றால் மட்டுமே கூட்டணிகளின் ஆதரவு இல்லாமல் 5 ஆண்டுகள் ஆட்சி நடத்த முடியும்.
இதை கணக்கில் வைத்து தான்
160 இடங்கள் என அதிமுக பேச்சை துவங்கி உள்ளது. ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மீதமுள்ள 74 தொகுதிகளே கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து தரப்படும். இவற்றில் பாஜக.,விற்கு 23, பாமக.,விற்கு 23, அமமுக.,விற்கு 6 சீட்கள் ஓதுக்கப்பட உள்ளதாக ஒரு புறம் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது போக மீதமுள்ள சீட்கள் தான் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட சிறிய கட்சிகளுக்கு ஒதுக்கப்படும். அப்படி பார்த்தால் தேமுதிக.,விற்கு ஒற்றை இலக்கத்திலேயே தொகுதி ஒதுக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
அதிமுக மற்றும் பாஜக இடையேயான தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு இறுதி செய்யப்படும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நேற்று நடைபெற்ற முதற்கட்டப் பேச்சுவார்த்தை சுமூகமாகத் தொடங்கியது.மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவினருடன் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல்,
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் தாக்கம் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
பாஜக தரப்பில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தங்களுக்குக் கூடுதல் வாக்குகள் கிடைத்த தொகுதிகள் மற்றும் வெற்றி பெற அதிக வாய்ப்புள்ள இடங்களை ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எந்தெந்தத் தொகுதிகள் என்பது குறித்து இறுதி முடிவு எட்டப்படவில்லை. கூட்டணியில் இணையப்போகும் மற்ற கட்சிகள் குறித்துத் தெளிவு கிடைத்த பிறகு, பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment