ஈரோடு பெருந்துறையில் மக்கள சந்திப்பு என்ற பெயரில் விஜய் பிரசாரம் செய்த்டார்.வழமைபோல பலத்த கெடுபிடிகளின்மத்தியில் அனுமதி வழங்கப்பட்டது. எது எது செய்யக்கூடாது என விஜயின் கட்சி சொல்லிக் கட்டுப்படுத்தியதோ அவை அத்தனையையும் விஜயின் தொண்டர்கள் கனகச்சிதமாகச் செய்தர்கள். விஜய் போசும் போது 30 அடி உயரமான ஒரு இடத்தில் ஏறியவர் முத்தத்தைப் பறக்கவிட்டார். அவரை இறங்கும்படி விஜய் கெஞ்சினார்.
விஜயின் பேச்சு
சற்று வித்தியாசமாக இருந்தது.
அவர் தன்னை எம்ஜிஆராக நினைத்துக் கொண்டார். திராவிடர் கழகத்தில் இருந்து வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தவர் அண்ணா. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப் பட்டதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்ஜிஆர் உருவாக்கினார்.
அண்ணாவும்,
எம்ஜிஆரும் பொதுவானவர்கள்
எனச்சொல்லும் விஜய் அவர்களுக்குச் சொந்தம் கொண்டாடுகிறார். ஜெயலலிதாவை
முதன் முதலாக மேடம் என விஜய்
அழைத்தார். ஊழல்
அற்ற அரசை அமைக்கப்போகும் விஜய்க்கு
ஜெயலலிதா மெடமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திராவிட
முன்னேற்றக் கழகம் தீய சக்தி என
எம்ஜிஆர் பிரகடனப்படுத்தினார். அவர்
வழியை ஜெயலலிதாவும் பின்பற்றி
திமுக தீயசக்தி எனக் கூறினார்.திமுக
தீயசக்தி என ஈரோட்டில் விஜய்
முழங்கினார். இது செங்கோட்டையனின் வருகையினால்
ஏற்பட்ட தாக்கமாக இருக்கலாம்.
வழக்கம்
போல திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக் விஜய் முழங்கினார். பாஜகவிஅயும் கொஞ்சம் தொட்டுப் பார்த்தார். அதிமுகவைப் பற்றி வாயே திறக்கவில்லை. திமுகவுக்கும்
தவெகவுக்குமிடையேதான் போட்டி. களத்தில் இலாதவர்களைப் பற்றிப் பேசமாட்டேன் எனவும் விஜய் தெரிவித்தார். களத்தில் இல்லாதவர் சீமானாக இருக்கலாம்.
கவர்மெண்டா
கண்காட்சியா.. எம்ஜிஆரும் அண்ணாவும் தமிழ்நாட்டோட சொத்து.. உங்களுக்கு காசு தான் துணை
எனக்கு மாஸ் தான் துணை..
தீயசக்தி தூயசக்தி. திமுக ஆட்சியும் பிரச்சனைகளும் பெவிக்கால் போட்டு ஒட்டுன ப்ரண்ட்ஸ் மாதிரி என்று பஞ்ச் டயலாக் பேசினார் விஜய்.
விஜய் பேசிய விஷயங்கள் அப்படியே . 2 மணித்தியாலயத்துக்கு
முன்னர் இணையத்தில்
கசிந்தது கட்சிக்கு உள்ளே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் விஜய் கோபம் அடைந்து உள்ளதாக கூறப்படுகிறது. கட்சிக்கு உள்ளேயே இருக்கும் அந்த கருறுப்பு ஆடு
யார் என்று விஜய் கோபத்தில் கேட்டதாக கூறப்படுகிறது. எனக்கு எழுதிக்கொடுத்தவர் அதை லீக் செய்ய
வாய்ப்பு இல்லை.. வேறு யார் லீக்
செய்தது என்ற கேள்வி விஜய்க்கு
எழுந்து உள்ளதாம்.
பாரதீய
ஜனதாவுடன் கூட்டணி வைத்திருக்க்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் விருப்புமனு வாங்கத்தொடங்கி உள்ளது. வெற்றி வாய்ப்புள்ள 40 தொகுதிகளின் பட்டியலை தமிழக பாரதீய ஜனதாத் தலைவர் டெல்லிகுத் தெரியப்படுத்தியுள்ளார்.
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு
வார்த்தைக்கு முன்பாக அதிமுகவும், பாரதீய ஜனதாவும் தேர்தல் பணியைத் தொடங்கிவிட்டன.
தேர்தலின் கதாநாயகனாக தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுக குழுவை அமைத்துள்ள்து.
தமிழக
சட்டமன்றத் தேர்தலுக்கு
சுமார் நான்கு மாதங்களுக்கு மேல் இருக்கும் நிலையில்
கூட்டணியை இறுதி செய்ய கட்சித் தலைவர்கள் தீவிரமாகக் காய் நகர்த்தி வருகின்றனர். கூட்டணி
ஏற்கனவே பலம் வாய்ந்ததாக இருக்கிறது.
பெரும்பாலான கட்சிகள் அதே கூட்டணியில் தொடரும்
என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் அதிகதொகுதிகள் வேண்டுமென
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் பேசி வருகின்றன.
ஆனால் அது கூட்டணியில் பெரிய
அளவில் பிளவை ஏற்படுத்தாது எனச் சொல்லப்படுகிறது.
எதிர்க்கட்சியாக
இருக்கும் அதிமுக ஆளும்கட்சியாக வேண்டும் எனத் தீவிரமாகச் செயலாற்றி
வருகிறது. கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன்பே
அதிமுக பாஜக கூட்டணியை அமித்ஷா
இறுதி செய்துவிட்டார். 2021ஐ போலவே 2026லும்
பாஜக அதிமுக கூட்டணி அமைந்திருக்கிறது. மேலும் அந்த தேர்தலில் கூட்டணியிலிருந்து
பாமகவை அழைத்து வர எடப்பாடி பழனிச்சாமி
தீவிரமாகப் பேசி வருகிறார்.
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸ் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே குடும்ப தகராறு இருக்கிறது. அந்த தகராறு கட்சியிலும்
எதிரொலித்திருக்கும் நிலையில், நான் தான் தலைவர்
என ராமதாஸ் கூறி வருகிறார். ஆனால்
தேர்தல் ஆணையம் தங்களைத்தான் அங்கீகரித்து இருப்பதாக கூறி அரசியல் நடவடிக்கைகளை
தீவிரப்படுத்தி இருக்கிறார் அன்புமணி. உச்சமாக பனையூரில் உள்ள கட்சியின் தலைமை
அலுவலகத்தில் விருப்பமனுக்களையும் பெற்று வருகிறார். தமிழ்நாடு முழுவதும் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியினர் ஆர்வத்தோடு விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர்.
தமிழக தேர்தல்களில் பலமுறை களம் கண்ட சீமான்,
இந்த முறையும் தனித்து களம் காண்பதென முடிவு
செய்திருக்கிறார். இதற்காக வேட்பாளர்களையும் அறிவித்து விட்டார். பொதுவாக பல கட்சிகள் தேர்தல்
நேரம் வரை காத்திருந்து கூட்டணி
பங்கீடு முடிவடைந்தது தான் வேட்பாளர் பட்டியலை
அறிவிப்பார்கள். ஆனால் வழக்கம்போல் முதல் ஆளாக வேட்பாளரை பட்டியலை
அறிவித்து, பொதுக்கூட்டங்கள், மாநாடுகள் என பிரம்மாண்டம் காட்டி
வருகிறார் சீமான் எ.
அரசியல் பிரச்சாரம் மற்றொரு புறம் தேர்தல் வேலைகள் என தனியாக துவக்காவிட்டாலும்
கள அரசியலில் தனது முத்திரையை ஆழமாக
பதித்து வருகிறார் நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய். இதுவரை ஒன்றிய, நகர, மாநகர நிர்வாகிகள்
நியமனம் செய்யப்படவில்லை என்றாலும், விஜய் செல்லும் இடங்களில் எல்லாம் கூட்டம் சேருவது அவர் தரப்பை உற்சாகப்படுத்தி
இருக்கிறது. அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் விஜய் கால்பதிக்க திட்டமிட்டு அதற்கான காய்களை நகர்த்தி வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை முன்பே திட்டமிட்ட மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் கரூர் சம்பவத்தால் 70 நாட்களுக்கும் மேலாக தடைப்பட்டது .தற்போது நிலைமை ஓரளவு சீராகி இருக்கும் நிலையில் மக்கள் சந்திப்பு கூட்டங்களை பிரச்சாரம் போல மேற்கொண்டு வருகிறார்.இதுவரை மாவட்ட அரசியல் பேசாத விஜய் காஞ்சிபுரத்திலிருந்து உள்ளூர் அரசியலையும் பேச ஆரம்பித்திருப்பது பிரசாரத்தின் ஒரு
பகுதியாகவே பார்க்கப்படுகிறது.
அதிமுக,பாரதீய ஜனதா, தவெக ஆகிய மூன்று
கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரிக்கப்போகின்ரன. இந்த நிலை திமுகவுக்கு
சாதகமாக உள்ளது.
ரமணி
21/12/25


No comments:
Post a Comment