Friday, June 29, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 7

ஜப்பான்  

ல‌ண்டன் ஒலிம்பிக் மகளிர் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு 12 நாடுகள் தகுதி பெற்றுள்ளன. ஆண்கள் உதைபந்தாட்டப் போட்டியைப் போன்றே பெண்கள் உதைபந்தாட்டமும் விறுவிறுப்பு மிக்கதாக உள்ளது. ஒலிம்பிக் பெண்கள் உதைபந்தாட்டத்தில் அமெரிக்காவின் கையே மேலோங்கியுள்ளது. 1996, 2004, 2008 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டிகளில் அமெரிக்க மகளிர் அணி தங்கம் வென்றது. 2004, 2008 ஆம் ஆண்டுகளின் இறுதிப் போட்டிகளில் பிரேஸிலை வென்று அமெரிக்கா தங்கம் வென்றது.  இறுதிப் போட்டியில் 2000 ஆம் ஆண்டுநோர்வேயிடம் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் பெற்றது.
2008, 2004 ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடம்பெற்று வெள்ளிப் பதக்கம் பெற்ற பிரேஸில் 2009, 1996 ஆகிய ஆண்டுகளில் நான்காம் இடம்பெற்றது.
ஜேர்மனிய மகளிர் உதைபந்தாட்ட அணியும் ஒலிம்பிக்கில் சாதனை செய்துள்ளது. 2000, 2004, 2008 ஆம் ஆண்டுகளில் மூன்றாமிடம் பெற்று வெண்கலம் வென்றது.
2000 ஆம் ஆண்டு தங்கம் வென்ற நோர்வே 1996 ஆம் ஆண்டு 3ஆம் இடத்தைப் பிடித்து வெண்கலம் வென்றது. லண்டன் ஒலிம்பிக் மகளிர் உதைபந்தாட்டப் போட்டியில் ஆசியாக் கண்டத்தில் இருந்து ஜப்பானும், வட கொரியாவும் தகுதி பெற்றுள்ளன.

ஒலிம்பிக் விளையாடும் தகுதியைப் பெறும் இறுதி சுற்று சீனா, வடகொரியா, ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் அவுஸ்திரேலியாவும் போட்டியிட்டது.
ஆபிரிக்க கண்டத்தில் இருந்து கமரூ னும் தென் ஆபிரிக்காவும் தகுதி பெற்றன. நைஜீரியா எதியோப்பியா ஆகியன இறுதிச் சுற்று வரை முன்னேறின. ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜேர்மனி, நோர்வே, சுவீடன் ஆகியன ஒலிம்பிக் தகுதி காண் இறுதிப் போட்டியில் விளையாடின. பிரான்ஸ், சுவீடன் ஆகியன வெற்றி பெற்று ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றன. ஒலிம்பிக்கை நடத்தும் நாடான இங்கிலாந்து நேரடியாகத் தகுதி பெற்றது.

வட அமெரிக்காவிலிருந்து கனடாவும் அமெரிக்காவும் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றன. தென் அமெரிக்காவிலிருந்து பிரேஸிலும் கமரூனும் தகுதி பெற்றுள்ளன. ஓசியானிக் தீவுகளிலிருந்து பபுவா நியூகினியை 150 என்ற கோல் கணக்கில் வென்ற நியூஸிலாந்தும் ஒலிம் பிக்கில் விளையாடும் தகுதியைப் பெற் றது. பப்புவா நியூகினித் தீவுகளின் பல மான நாடான நியூஸிலாந்து மகளிர் அணி ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டு பீஜீங் ஒலிம்பிக்கில் முதன் முதல் பங்கு பற்றிய நியூஸிலாந்து இப்போது 2ஆவது தடவை விளையாடத் தகுதி பெற்றுள்ளது. இங்கி லாந்து, பிரேஸில், கமரூன் ஆகியவற்று டன் குழு ஈ யில் உள்ளது நியூஸிலாந்து.

2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் முதன் முத லில் வடகொரிய மகளிர் அணி விளையா டத் தகுதி பெற்றது. பிரேஸில், நைஜீரியா, ஜேர்மனி ஆகிய பலம் வாய்ந்த அணிகளுடன் விளையாடி முதல் சுற்றிலேயே வெளியேறிய நைஜீரியாவுக்கு எதிரான போட்டியில் வட கொரியா ஒரு கோல் அடித்தது. அமெரிக்கா, பிரான்ஸ், கொலம்பியா ஆகியவற்றுடன் ஜீயில் வடகொரியா உள் ளது.
1996 ஆம் ஆண்டு முதன் முதலாக ஒலிம்பிக்கில் தடம் பதித்த ஜப்பான் பெண்கள் உதைபந்தாட்ட அணி மூன்றாவது முறையாக ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றுள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் சுற்றுடன் வெளியேறிய ஜப்பான் 2004 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் அரை இறுதி வரை முன்னேறியது. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜேர்மனியிடம் 4  2 என்ற கோல் கணக்கில் தோல்வியுற்று நான்காவது இடத்தைப் பிடித்தது.
கனடா, சுவீடன், தென்னாபிரிக்கா ஆகியவற்றுடன் குழு எஃப்பில் உள்ளது ஜப்பான்.
ரமணி
மெட்ரோநியூஸ்29/06//12

No comments: