Sunday, June 17, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 6



உருகுவே 
பிரேஸில்

பிரேஸில்
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தென் அமெரிக்காவில் இருந்த பிரேஸில்,உருகுவே ஆகியன தகுதி பெற்றுள்ளன.
உதைபந்தாட்ட சாம்ராஜ்யத்தின் பலம் வாய்ந்த பிரேஸில் இதுவரை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்லவில்லை. பிரேஸிலின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் கோல்டன் போய் என அழைக்கப்படும் நைமாரின் பங்களிப்புடன் பிரேஸில் இம் முறையும் தங்கம் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
1984 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் பிரான்ஸிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது பிரேஸில். 1988 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற ஒலிம்பிக் இறுதிப் போட்டியில் சோவியத் யூனியனிடம்தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.  2008 ஆம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பெல்ஜியத்தை வென்று வெண்கலம் பெற்றது. 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் போர்த்துக்கலை வென்று வெண்கலப்பதக்கம் பெற்றது. 1976 ஆம் ஆண்டு மொன்டேரியாவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் சோவியத் யூனியனிடம் தோல்வியடைந்து நான்காம் இடம் பெற்றது.
2001 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட தென் அமெரிக்க சம்பியன் கிண்ணத்தை வென்ற பிரேஸில் லண்டன் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றது. தொடர்ந்து 11 ஆவது தடவையாக தென் அமெரிக்க சம்பியனான பிரேஸில் கோல்டன் போய் நைமர் ஒன்பது போட்டிகளில் விளையாடி ஒன்பது கோல் அடித்தார். இத்தொடரில் எட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பிரேஸில் ஒரு போட்டியில் தோல்வியடைந்தது.
நைமர், மாலோ, ஹென்றி கியூகன்சோ, லூகாஸ், லென்ட்@ரா டமியோ ஆகி@யாரின் துடிப்பான விளையாட்டு பிரேஸிலுக்கு தங்கத்தைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது. சர்வதேசப் போட்டிகளில் தடம் பதித்த லென்ட்ரோமியோ கோல்டன் போய் நைமார் ஆகிய இருவரும் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள்.
ஒலிம்பிக் உதைபந்தாட்ட போட்டிகளில் சாதனை படைத்த டுங்கா (1984), டப்பரல், நிக்கோடா கோமஸ், ஜோர் கின் கூ, மகின் கூ, ரொமாரியே (1980), டிடா, ரொபோட்டோ காலோஸ், பெபெஹோ, ரிவால்டோ (1996), ரொனால்டி னோ ( 2000  2006) ஆகியோரைப் போன்று பிரேஸிலின் இன்றைய வீரர்களும் தடம் பதிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
எகிப்து, பெலாரஸ், நியூஸிலாந்து ஆகியவற்றுடன் குழு பி இல் உள்ளது பிரேஸில். உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை 2014 ஆம் ஆண்டும் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக்கையும் நடத்துவதற்கு தயாராய் உள்ளது பிரேஸில்.

உருகுவே
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தென் அமெரிக்காவிலிருந்து தகுதி பெற்ற இரண்டாவது நாடு உருகுவே. 20 வயதுக்குட்பட்ட தென் அமெரிக்கா சம்பியன் இறுதிப் போட்டியில் விளையாடியமையால் உருகுவே லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது. இறுதிப் போட்டியில் பிரேஸிலிடம் தோல்வியடைந்தது உருகுவே.
1924 ஆம் ஆண்டு பாரிஸிலும் 1928 ஆம் ஆண்டு ஆம்ஸ்ரர்டரமிலும் நடைபெற்ற ஒலிம்பிக்கிலும் உதைபந்தாட்டப் போட்டியில் தங்கம் வென்றது உருகுவே. பாரிஸில் சுவிட்ஸர்லாந்தையும் ஆம்ஸரர்டாமில் ஆர்ஜென்ரீனாவையும் வீழ்த்தி தங்கம் வென்றது உருகுவே. 1928 ஆம் ஆண்டு தங்கப் பதக்கத்துடன் நாடு திரும்பிய உருகுவே 84 வருடங்களின் பின் இப்போது தான் ஒலிம்பிக்கில் விளையாடத் தகுதி பெற்றது.
கோல் கீப்பரான சல்வடோர் இசாஸோவை மீறி கோல் அடிப்பது சற்று சிரமமானது டியுகோ பொலன்ஸா, லென்ரோகபரேரா ஆகியோர் பின்கள வீரர்களாக விளையாடும்போது அவர்களை மீறிப் பந்து கோல்செல்லாவண்ணம் செயற்படுவார்கள்.
மரிசா வெசினோ, டேவிட் ரெக்செரியா ஆகியோரின் துடிப்பான விளையாட்டு எதிரணி வீரர்களை திக்கு முக்காடச் செய்யும்.
பெட்ரோ பெற்ரோனி, ஹெக்ரர் ஸ்கொரன், ஜோஜாசி நசாஸி, அன்ரஸ் மஸ்ஸெல்லா, ச‌ன்ரோஸ் உர்டிநரன் (1924 28 ஏஞ்சல் ரொமானோ (1924) ஹெக்டிர் கஸ்ரோ, அந்தோனியோ கம்போலோ (1928) ஆகியோரின் சிறப்பான விளையாட்டினால் உருகுவே ஒலிம்பிக்கில் இரண்டு தங்கப் பதக்கங்களை பெற்றது.
ரமணி
மெட்ரோநியூஸ்15//06//12

No comments: