Friday, June 8, 2012

லண்டனில் தங்கத் திருவிழா 5

மெக்ஸிக்கோ 

மெக்ஸிக்கோ
லண்டன் ஒலிம்பிக் உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு வட அமெரிக்கா மத்திய அமெரிக்காவில் இருந்து மெக்ஸிக்கோ, ஹொண்டூரால் ஆகியன தகுதி பெற்றுள்ளன.
ஆம்ஸ்ரடாமில் 1928 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் மெக்ஸிக்கோ உதைபந்தாட்ட அணி முதன் முதலில் கலந்து கொண்டது. 1968 ஆம் ஆண்டு மெக்ஸிக்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஜப்பானிடம் தோல்வியடைந்து நான்காவது இடத்தைப் பெற்றது மெக்ஸிக்கோ. 1996 ஆம் ஆண்டு அட்லாண்டாவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் காலிறுதி வரை முன்னேறியது.
23 வயதுக்குட்பட்ட இணிணஞிச்ஞிச்ஞூ சம்பியனான மெக்ஸிகோ விளையாடிய சகல போட்டிகளிலும் வெற்றி பெற்றது. கனடாவுடனான அரையிறுதிப் போட்டியில் 3  1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற மெக்ஸிக்கோ லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 2  1 என்ற கோல் கணக்கில் ஹொன்டூராவை வென்று சம்பியனாகி சாதனை படைத்தது. ஹொண்டூராஸ் ஐந்து போட்டிகளிலும் 26 கோல்கள் அடித்தது. எதிரணிகள் மூன்று கோல்களை மாத்திரம் அடித்தன.
மெக்ஸிக்கோவில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட (பீஃபா) சம்பியன் 2011 ஆம் ஆண்டு கொலம்பியாவில் பீஃபா நடத்திய வெற்றி 20 வயதுக்குட்பட்ட (பீஃபா) சம்பியன் ஆகியன மெக்ஸிக்கோவுக்கு கூடுதல் பலமாக உள்ளன.
டியோகோ ரியாஸ், ஹெக்டர் ஹெரேரா, மார்கோபபியன், அலன்புலிடோ, எரிக் ரொரிஸ் ஆகியோரின் வேகத்துக்கு எதிரணி வீரர்கள் தடை போடுவது சிரமமானது. மார்கோபடியன், அலன் புலிடோ ஆகியோர் தலா ஐந்து கோல்கள் அடித்துள்ளனர். வடகொரியா, ஹோகென், சுவிட்ஸர்லாந்து ஆகியவற்றுடன் குழு "பீ'யில் உள்ளது மெக்ஸிக்கோ.
ஹொண்டூராஸ்  

ஹொண்டூராஸ்
சிட்னியில் 2000 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஹொண்டூராஸ் உதைபந்தாட்ட அணி முதன் முதலில் விளையாடும் தகுதியைப் பெற்றது. 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக்கிலும் ஹொண்டூராஸ் அணி விளையாடியது. இரண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் ஹொண்டூராஸ் முதல் சுற்றுடன் வெளியேறியது.
சிட்னி ஒலிம்பிக்கில் டேவிட் சுஹாசோ அதிகபட்சமாக நான்கு கோல்கள் அடித்து சாதனை புரிந்துள்ளார்.
23 வயதுக்குட்பட்ட இணிணஞிச்ஞிச்ஞூ சம்பியன் போட்டியில் பனாமாவுடனான போட்டியில் 3  1 என்ற கோல் கணக்கிலும், டிரினிலாண்ட் அன்ட்டுபாக்கோ உடனான போட்டியில் 2  0 என்ற கோல் கணக்கிலும் ஹொண்டூராஸ் வெற்றி பெற்றது.
மெக்ஸிக்கோவுடனான போட்டியில் 3  0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. எல்சல்வடோருடனான அரையிறுதிப் போட்டியில் 3  2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் விளையாடும் தகுதியைப் பெற்றது ஹொண்டூராஸ். மெக்ஸிக்கோவுடனான இறுதிப் போட்டியில் மேலதிக நேரத்தில் 2  1 என்ற கோல் கணக்கில் ஹொண்டூராஸ் தோல்வியடைந்தது.
ஜொனி லெவெரொன், கெர்சன் ரொடாஸ், ரொஜத்ரோஜாஸ், எடி ஹெனன்ட்ஸ் ஆகியோர் ஹொண்டூராஸின் பலம் மிக்க வீரர்களாவர். ரொஜர் ரோஜாஸ் எடி ஹெனன்ட்ஸ் ஆகியோர் தலா மூன்று கோல் அடித்துள்ளனர்.
 ரமணி
மெட்ரோநியூஸ்29/05/12  

No comments: