Monday, March 9, 2009

திரைக்கு வராத சங்கதி 1


ஏ.வி.எம். தயாரிப்பில் ரஜினி நடித்து வெளியாகி வெள்ளி விழா கொண்டாடிய படம் எஜமான் ஏ.வி. எம்மின் தயாரிப்பில் தான் நடிக்க வேண்டும் என்று ரஜினி விரும்பி நடித்த படம்.
திரை உலக விருந்து ஒன்றின்போது ஏ.வி.எம்.மின் படங்கள் இனிமேல் ஓடாது என்று அங்கிருந்த தயாரிப்பாளர் ஒருவர் புலம்பினார். ரஜினி, வைரமுத்து ஆகியோரும் அந்த விருந்தில் இருந்தார்கள். அந்தத் தாரிப்பாளரரின் புலம்பலுக்கு யாரும் பதில் கூறவில்லை. உலகின் மிகப் பெரிய சாதனை செய்த ஏ.வி. எம்மை ஒருவர் தரக் குறைவாகப் பேசியதை வைரமுத்துவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மறுநாள் தொலைபேசியில் ஏ.வி.எம். சரவணனிடம் இரவு நடந்த விஷயங்களை கூறிக் கவலைப்பட்டார். ஏ.வி.எம். முக்கும் இயக்குநர் எஸ்.பி. முத்துராமனுக்கும் ரஜினிகாந்த் கால்ஷீட் தராமட்டார் என்ற தகவலை வைரமுத்து மூலம் அறிந்த ஏ.வி.எம். சரவணன் அதனைப் பெரிது படுத்தவில்லை. ரஜினியுடனான தமது நட்பு என்றைக்கும் நிலைக்கும் என்று கூறினார் ஏ.வி.எம். சரவணன்.
எஸ்.பி. முத்துராமனின் யுனிற் ரஜினியைச் சந்தித்து தமது படத்தில் நடிக்கும் படி கேட்டது அதற்கு ஒப்புதல்
கொடுத்த ரஜினி, அப்டத்தை ஏ.வி.எம். தயாரிக்க வேண்டும் என்று கூறினார். ஏ.வி.எம். படத்திலும் எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்திலும் ரஜினி நடிக்க மாட்டார் என்று புலம்பிய தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுப்பதற்கு ரஜினி திட்டமிட்டார்.
எஸ்.பி. முத்துராமன், ஏ.வி.எம். சரவணனைச் சந்தித்து ரஜினியின் விருப்பத்தைக் கூறினார். ரஜினியின் படத்தினால் எஸ்.பி.முத்துராமனுக்கு கிடைக்கவிருக்கும் இலாபத்தில் பங்கு போட ஏ.வி.எம். சரவணன் விரும்பவில்லை.
ஏ.வி.எம். மின் படத்தில் ரஜினி நடிக்க மாட்டார் என்று புலம்பிய தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுப்பதை விட எஸ்.பி. முத்துராமனின் யுனிட்டுக்கு இலாபம் கிடைக்க வேண்டும் என்பதையே ஏ.வி.எம். சரவணன் விரும்பினார்.
ஏ.வி.எம். சரவணைச் சந்தித்த ரஜினிகாந்த் நம்ம படத்தை தீபாவளிக்கு ரிலிஸ் பண்ணலாமா சார் எனக் கேட்டார்.
ஏ.வி.எம். சரவணனுக்கு எதுவும் புரியவில்லை. ரஜினி எந்தப் படத்தைப் பற்றிக் கூறுகிறார் எனத் தெரியாது.
என்ன படம் ஸார் சொல்றீங்க பூஜை எதுவும் போடவில்லையே என்றார்.
ஆர்.வி. உதயகுமாரை வைத்துப் படம் எடுத்து தீபாவளிக்கு ரிலிஸ் பண்ணனும்'' என்றார் ரஜினி.
முதலில் எஸ்.பி. முத்துராமனின் படம் முடியட்டும் அதன் பின்னர் நம் படத்தைப் பற்றிக் கதைக்கலாம் என்று ஏ.வி.எம். சரவணன் உறுதியாகச் கூறினார். ஏ.வி.எம்.சரவணனின் உறுதியான பதிலால் எஸ்.பி. முத்துராமனின் இயக்கத்தில் பாண்டியன் படம் வெளியானது. ரஜினியின் வெற்றிப் படங்களில் பாண்டியனும் ஒன்று.
பாண்டியன் வெளியான பின்னர் ஏ.வி.எம். தயாரிப்பில் ரஜினி நடித்த எஜமான் படம் வெளியானது. எஜமான் எதிர்பார்த்த வகையில் பரபரப்பாக இல்லை. ரஜினி ரசிர்களுக்கு விருந்தாக அப்படம் அமையவில்லை. ஒரு சில இடங்களில் படம் சரியாகப் போகவில்லை.
அப்படத்தைப் பார்த்து விட்டு திலகவதி என்ற பெண்மணி எழுதிய கடிதம் படத்தின் வியாபாரத்தை சூடாக்கியது.
""எஜமான் படம் பார்த்தேன். வானவராயர் மாதிரி ஒரு மாப் பிள்ளை கிடைத்தால் நான் கல்யாணம் செய்து கொள்வேன்.'' என்று திலகவதி எழுதிய கடிதத்தை விளம்பரப் படுத்த விரும்பிய ஏ.வி.எம். நிறுவனம் அப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று விபரத்தைக் கூறி அனுமதி கேட்டது.
விளம்பரத்தில் தனது படம் வெளியானால் அப்பா கோபிப்பார் என்று திலகவதி கூறினார். தகப்பனைக் கண்டு அனுமதி பெறுவதற்காக ஏ.வி.எம்.மின் விளம்பர மேலாளர் அர்ஜுனும் சண்முகமும் இரவு 11 மணிவரை காத்திருந்தனர்.
திலகவதியின் தகப்பன் பெருந்தன்மையுடன் அனுமதிக் கடிதம் கொடுத்தார். திலகவதியின் கடிதம் விளம்பரமாக வெளியானதும் எஜமான் படம் சூடு பிடிக்கத் தொடங்கியது.
வைத்தீஸ்வரி என்ற பெண்ணும் எஜமான் போன்ற கணவனை எதிர் பார்ப்பதாக கடிதம் எழுதினார். இரண்டு விளம்பரங்களும் மாறி மாறி வெளியானதால் ரசிகர்களின் ஆதரவு பெருகியது.

மித்திரன்
ரமணி
28 02 2009

5 comments:

Anonymous said...

Idhudhaan AVM Saravanan kalki weeklyla ezhdhinathilayae vandhidichae.

பிரபு . எம் said...

"பாண்டிய‌ன்" வெற்றிப்ப‌ட‌மா? அப்ப‌டி நினைவில்லை!
"பாண்டிய‌ன்" வெளிவ‌ந்த‌ அதே தீபாவ‌ளி தின‌த்தில்தான் "தேவ‌ர் ம‌க‌ன்" வ‌ந்த‌து கூட‌வே பாக்ய‌ராஜின் "ராசுக்குட்டி"யும்....தங்கமகன் சூப்ப‌ர்ஸ்டாருக்கு அந்த‌த் தீபாவ‌ளிக்குக் கிடைத்த‌து வெண்க‌ல‌ப் ப‌த‌க்க‌ம்தான் கிடைத்த‌தாக‌ ஞாப‌க‌ம்...

வர்மா said...

கல்கியில் வெளிவந்த அதே கட்டுரைகளை ஏ.வி.எம்.சரவணன் புத்தகமாகவும் வெளியிட்டுள்ளார். அப்புத்தகத்தில் தான் பாண்டியன் வெற்றிப் படம் என குறிப்பிட்டுள்ளார்.

பிரபு . எம் said...

வ‌சூலின் அடிப்ப‌டையில் வெற்றிப்ப‌ட‌மாக‌ இருந்திருக்க‌லாம்!!

வண்ணத்துபூச்சியார் said...

பாண்டியன் அந்த அளவிற்கு ஒடவில்லை. எஜமான நல்ல ஹிட்.

ஏவிஎம் வியாபார அணுகுமுறைகள் என்றுமே வித்தியாசமானவை.Quite Interesting too..

செட்டியாரின் கெட்டிகாரதனமும் தொழில் பக்தியும் இன்று கடுகளவும் புது தயாரிப்பாளர்களிடம் இல்லை.

Everyone wants to make quick money. So they are raisig high and falling steep..

Nice info. Thanx.