நட்புக்கு இலக்கணமான பல படங்கள் வெளிவந்த @வளையில் நட்புக்கு துரோகம் செய்யும் கன்னிப்பருவத்திலே வெளியாகி 275 நாட்களை தாண்டி வெள்ளிவிழா கொண்டாடியது. ஆண்மை இழந்த நண்பனின் மனைவியை அடையத்துடிக்கும் துரோகியை அடையாளம் காட்டிய படம் கன்னிப்பருவத்திலே. 1979 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தின் மூலம் மிகச் சிறந்த நடிகராக ராஜேஷ் அறிமுகமானார். ராஜேஷின் மனைவியாக வடிவுகரசி நடித்தார். ராஜேஷின் நண்பனாக . கே.பாக்கியராஜ் நடித்தார். திருட்டு முழி சோடாபுட்டி கண்ணாடியுடன் பார்த்ததும் சிரிப்பை வரவழைக்கும் பாக்கியராஜின் வில்லத்தனம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்தது.
நம்பியார் பி.எஸ்.வீரப்பா அசோகன் ராமதாஸ் போன்ற பயங்கர வில்லன்களை பார்த்து மிரண்ட தமிழ் ரசிகர்களுக்கு பாக்கியராஜின் வில்லத்தனம் வித்தியாசமாக இருந்தது. ரி.எஸ்.பாலையா எம்.ஆர்.ராதா ஆகியோர் நகைச்சுவையுடன் கூடிய வில்லன் பாத்திரத்தில் மிளிர்ந்தனர். தில்லானா @மாகனம்பாள் படத்தில் நம்பியார், ராமதாஸ் போன்றவர்கள் வில்லன் பாத்திரத்தில் நடித்தாலும் இறுதிவரை நகைச்சுவையுடன் கூடிய வில்லனாக நிலைத்தவர் நாகேஷ். காதலர்களான சிவாஜியையும் பத்மினியையும் பிரிப்பதற்கு வில்லனான நாகேஷ் @மற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்தன. நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட பாக்கியராஜ் வில்லன் பாத்திரத்தைக் காத்திரமாகச் செய்து முடித்தார்.
ராஜேஷûம் பாக்கியராஜும் உயிர் தோழர்கள் ராஜேஷ் வடிவுகரசியை காதலிக்கிறார். வடிவுகரசியும் ராஜேஷை உயிருக்குயிராக காதலிக்கிறார். பாக்கியராஜ் மேற்படிப்பிற்காக வெளியூர் சென்று விடுகிறார். ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்கும் போது காளையினால் முட்டப்பட்ட ராஜேஷ் ஆண்மையை இழக்கிறான். திருமணத்தின் பின் மனைவியை திருப்திப்படுத்த முடியாது தவிக்கிறார். ராஜேஷ். கணவனின் இயலாமையை அறிந்த வடிவுகரசி கணவனின் இயலாமையை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தாம்பத்தியசு கத்தை தேடாது கணவனின் மனதை நோகடிக்காது கிராமத்து பெண்ணாக பணிவிடை செய்கிறாள்.
வெளியூரில் படித்துவிட்டு கிராமத்துக்கு வரும் பாக்கியராஜுக்கு ராஜேஷின் இயலாமை தெரியவருகிறது. தாம்பத்திய சுகத்தை அனுபவிக்காது வாழும் வடிவுகரசியை வலையில் வீழ்த்த முயற்சிக்கிறார் பாக்கியராஜ். பாக்கியராஜின் ஆசைக்கு இணங்க மறுக்கிறாள் வடிவுகரசி. வடிவுக்கரசியை துரத்தித் துரத்தி தொல்லை கொடுக்கிறார் பாக்கியராஜ். வடிவுகரசியின் புத்திமதியைக் கேளாது அவளை அடைய முயற்சி செய்கிறார் பாக்கியராஜ்.
பாக்கியராஜின் தொல்லையைத் தாங்க முடியாது திட்டமிட்டு பாழும் கிணற்றில் தள்ளிக் கொலை செய்கிறாள் வடிவுகரசி. இந்த விஷயம் எல்லாம் ராஜேஷுக்கு தெரிய வருகிறது. பாக்கியராஜின் மரணத்தின் பின் நிம்மதியாக வாழ்கிறாள் வடிவுகரசி.
எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரித்த இப்படத்தை பி.வி.பாலகுரு இயக்கிநார். திரைகதை வசனத்தை பாக்கியராஜ் எழுதினார். பாக்கியராஜின் வசனங்கள் வடிவுகரசியை மட்டுமல்ல ரசிகர்களையும் பதற வைத்தது. பாக்கியராஜ் திரையில் தோன்றும் போது பூனையின் சத்தத்தினை பின்னனியில் ஒலிக்கவிட்டு காட்சிக்கு பரபரப்பூட்டினார்கள் இரட்டையர்களாகிய சங்கர் கணேஷ். அட்டகாசச் சிரிப்பு அவேசப் பேச்சு எதுவுமின்றி இயல்பாகத் தனது வில்லத்தனத்தை வெளிபடுத்தினார் பாக்கியராஜ்.
நேதாஜி, முத்துபாரதி, பூங்குயில், புலமைபித்தன் ஆகியோர் எழுதியநடையை மாற்றி, ஆவாரம்பூமேனி, அடி அம்மாடி சின்னப்பொண்ணு, பட்டுவண்ண ரோஜாவாம் ஆகிய பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் வரவேவற்பைப் பெற்றன. சங்கர் கணேஷ் இசையமைத்த வெற்றிப்படங்களில் வரிசையில் கன்னிப்பருவத்திலேயும் சேர்ந்தது.
பாக்கியராஜின் திரைக்கதை வசனத்தில் வெளியான படங்கள் தோல்வியடைந்ததில்லை பாக்கியராஜின் கதை வசனத்தில் உருவாக்கப்பட்ட படங்களுக்கு வேற்று மொழிகளில் அதிக கிராக்கி உள்ளது. இப்படமும் வேற்று மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்றது.
மித்திரன்04/10/11
1 comment:
really nice..... konjam pudu padangalai pathiyum solli irukkalam.
Post a Comment