பெண் குழந்தைக்குத்தந்தையான தனக்கு இன்னொரு குழந்தைக்குத்தந்தையாகும் பாக்கியம் இல்லை என்பதை உலகுக்குத்தெரியாமல் மறைத்துவைத்த இராணுவ ஜெனரல் விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோதுமனைவி ஒரு குழந்தைக்குத்தாயானதைக்கண்டு அதிர்ச்சியடையும் கதையுடன் 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "ஜெனரல் சக்கரவர்த்தி"
இராணுவ ஜெனரல் சிவாஜிகணேசன் அவரது மனைவி கே.ஆர்.விஜயா.அவர்களின் மகள் கவிதா, ஜெய்கணேசஷை உயிருக்குயிராகக்காதலிக்கிறார். பருவ வயதில் இருவரும் தம்மை மறந்ததனால் கவிதா கர்ப்பமாகிறார்.காதலன் ஜெய்கணேஷ் திடீரென இறந்துவிட செய்வதறியாது தடுமாறிய கவிதா தாயிடம் உண்மையைக்கூறுகிறார்.
திருமணமாகாத தனது மகள் கர்ப்பமானதையும் அதற்குக்காரணமான ஜெய்கணேஷ் இறந்ததையும் அறிந்த தாய் துடிதுடிக்கிறார்.மகளையும் குடும்ப மானத்தையும் காப்பாற்றுவதற்காக மகளுக்குப்பிறந்தகுழந்தையைத்தன் குழந்தை என ஊருக்குக்கூறுகிறார்.
விடுமுறையில் ஊருக்கு வந்த சிவாஜி தான் தந்தையானதை அறிந்து அதிர்ச்சியடைகிறார்.யுத்தமுனையில் காயமடைந்த சிவாஜிக்கு தந்தையாகும் பாக்கியம் இல்லை.இந்த உண்மையை மற்றவர்களூக்கு மறைத்த சிவாஜி மனைவியின் மீது சந்தேகமடைகிறார்.குழந்தைக்கு அம்மா நீதான். அப்பா யாரெனத் துழைத்தெடுக்கிறார்.
மகளைக்காப்பாற்றுவதற்காக நடத்திய நாடகத்தினால் கணவன் தன் மீது சந்தேகம் கொள்வதை அறிந்த கே.ஆர்.விஜயா, துடிதுடிக்கிறார்.உணமையைச்சொல்லமுடியாது தடுமாறுகிறார்.திருமணம் செய்யாத மகளின் குழந்தை என எப்படிச்சொல்வதெனத தெரியாது தடுமாறினார்.
அழுத குழந்தைக்கு மகள் தாய்ப்பால் கொடுப்பதை பார்ஹ்த சிவாஜிக்கு உண்மையைக்கூறுகிறார் மனைவி கே.ஆர்.விஜயா.மகளின் நிலை அறிந்த சிவாஜி நிலை குலைந்து போகிறார்.இறந்துபோனதாக்க்கூறப்பட்ட ஜெய்கணேஷ் உயிருடன் வருகிறார். அதன்பின் அவர்களின் வழ்க்கையில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
சிவாஜியும் கே.ஆர்.விஜயாவும் போட்டிபோட்டு நடித்தனர்.உணர்ச்சிகரமான இவர்களின் நடிப்பு ரசிகர்களைக்கலங்க வைத்தது.மனோரமா,கவிதா,ஜெய்கணேஷ்,டி.பி.முத்துலக்ஷ்மி ஆகியோர் நடித்தனர்.கதை செல்வபாரதி,வியட்நாம் வீடு சுந்தரத்தின் வசனம் படத்துக்கு உயிரைக்கொடுத்தது.பாடல்கள் கண்ணதாசன், இசை எம்.எஸ். விஸ்வநாதன்.இயக்கம் டி.யோகானந்.100 நாட்களுக்கு மேல் ஓடிய வெற்றிப்படம்.
கே.எஸ்.ராஜவின் மதுரக்குரலில் இலங்கை வானொலியில் ஒலிபரப்பான இப்படத்தின் விளம்பரங்கள் இன்றும் நெஞ்சில் நிழலாடுகின்றன.
ரமணி
மித்திரன் 10/01/13
10 comments:
நல்ல பதிவு!. ஆனால் ஒரு திருத்தம் கவிதாவின் காதலனாக நடித்தது ஜெய்கணேஷ் அல்ல!நடிகை லட்சுமியின் இரண்டாவது கணவர் நடிகர் மோகன்
நன்றி!. உங்களுடைய வலைப்பூவினை நான் தொடர்ந்து படிக்கிறேன். கமெண்ட் ஏதும் போடாமலேயே! :)

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் தவறைச்சுட்டிக்காட்டியதற்கும் நன்றி
அன்புடன்
வர்மா
//பெண் குழந்தைக்குத்தந்தையான தனக்கு இன்னொரு குழந்தைக்குத்தந்தையாகும் பாக்கியம் இல்லை என்பதை உலகுக்குத்தெரியாமல் மறைத்துவைத்த இராணுவ ஜெனரல் விடுமுறையில் வீட்டுக்கு வந்தபோதுமனைவி ஒரு குழந்தைக்குத்தாயானதைக்கண்டு அதிர்ச்சியடையும் கதையுடன் 1978 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் "ஜெனரல் சக்கரவர்த்தி"//
அன்பரே! அதுவல்ல கதை! மனைவி இரண்டாம் முறை கர்ப்பமாக இருப்பதை அறிந்து, தனது மேலதிகாரிகளிடம் குதூகலத்துடன் தகவல் தெரிவிப்பார். வீட்டுக்கு வந்ததும், தன் குழந்தைக்கு மகள் பால் கொடுப்பதைப் பார்த்து, சந்தேகமடைந்து, உண்மையை வெளிவரச்செய்ய, தனக்கு இனி குழந்தை பாக்கியமில்லை என்று மனைவியிடம் பொய் சொல்வார். படம் முடிகிறபோது, உண்மையிலேயே ஜெனரல் சக்கரவர்த்தியின் மனைவி கர்ப்பமாக இருப்பார். “ஃபிஃப்டி இயர்ஸ்! எப்படி?” என்று கையை மடக்கிக் காட்டி, கண்சிமிட்டுவதோடு ‘வணக்கம்’ கார்டு போடுவார்கள்.
படம் பார்த்தீங்களா இல்லையா? :-))

தங்கள் வருகைக்கும் தவறைச்சுட்டிக்காட்டியதற்கும் நன்றி
அன்புடன்
வர்மா
அன்பின் சேட்டைக்காரரே சிறுவயதில் பார்த்த படத்தின் கதையில் தடுமாற்றம் ஏற்பட்டுவிட்டது
அன்புடன்
வர்மா
OH MY DEAR DOCTOR
WHAT IS THE MATTER
SUPER SONG IN THIS FILM
SANKAR.M TIRUNELVELI
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
அன்புடன்
வர்மா
Post a Comment