நாடாளுமன்றத் தேர்தலை முன்னிறுத்தி இந்திய அரசியல் கட்சிகள் அனைத்தும் காய்களை நகர்த்தி வருகின்றன. தேசியக் கட்சிகளும் மாநிலக் கட்சிகளும் தமது பலத்தை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு ஏனைய கட்சிகளை சங்கடத்தில் தள்ளுகின்றன.
ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் செயற்படும் பாரதீய ஜனதாக் கட்சியின் பிரதம வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்படும் வாய்ப்பு பிரகாசமாகத் தெரியும். இவ்வேளையில் மோடிக்கு எதிராக கூட்டணியில கட்சித் தலைவரான நிதீஷ்குமார் போர்க்கொடி தூக்கியுள்ளார்.
பாரதீய ஜனதாக் கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை அறிவித்த பின்னறே பொதுத் தேர்தல் பற்றிய வேலைகளை முன்னெடுக்க வேண்டும் என்று காட்டமாகக் கூறியுள்ளார் பீகார் முதல்வர்நிதீஸ்குமர்..
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஸ்குமர் தலைமையிலான ஐக்கிய ஜனதாத் தளமும் அங்கம் வகிக்கிறது. இக்கூட்டணியின் முக்கிய தலைவர்களின் ஒருவர்நிதீஸ்குமர்.. பிரதமர் வேட்பாளராக மோடியை நிறுத்தக் கூடாது என்பதில் இவர் உறுதியாக உள்ளார். குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரங்களை கட்டுப்பத்துவதற்கு மோடி நடவடிக்கை எடுக்கவில்லை என்று பீகார் முதல்வர் நிதீஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
பீகாரில் இரண்டாவது தடவையாக முதல்வர் பதவியை அலங்கரிக்கும்நிதீஸ்குமர் முஸ்லிம்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்தே மோடிக்கு எதிரான கருத்துக்களைப் பகிரங்கமாகக் கூறி வருகிறார். பீகாரில் இரண்டாவது தடவை நிதீஸ்குமர் பதவி ஏற்றாலும் அவருக்கு முஸ்லிம்களின் வாக்குகள் அதிகளவில் கிடைக்கவில்லை. மோசடிக்கு எதிரான கருத்துக்களை முஸ்லிம் வாக்கு வங்கியைக் குறிவைத்து தனது அரசியல் வியூகத்தை வகுத்துள்ளார் நிதீஸ்குமர் .
பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவுடன் தான் நிதீஸ்குமர் முதல்வர் ஆசனத்தில் வீற்றிருக்கிறார். பீகாரில் ஆட்சி அமைக்க 115 ஆசனங்கள் தேவைநிதீஸ்கு மாரின் அதிரடி அறிவிப்பினால் பாரதீய ஜனதாக் கட்சி வெளியேறினால் 10 ஆசனங்கள் மட்டுமே குறைவடையும். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் சுயேட்சைகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்து தனது பதவியைக் காப்பாற்றுவார் நிதீஸ்குமர் .
நிதீஸ்கு மாரைப் போன்று ஏனைய மாநில அரசியல் கட்சித் தலைவர்களும் மோடிக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினால் பாரதீய ஜனதாக் கட்சி மறு பரிசீலனை செய்ய வேண்டிய நிலை வரலாம். இந்தியப் பிரதமராகும் ஆசை சுஷ்மா சுவராஜுக்கு உள்ளது. மோசடிக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பு அலை தோன்றினால் சுஷ்மா சுவராஜுக்குச் சந்தர்ப்பம் கிடைக்கும்.
கச்சதீவுப் பிரச்சிøனயைக்கையில் எடுத்துள்ளார். தமிழக முதல்வர் ஜெயலலிதாஇந்தியாவின்.எந்த ஒரு பகுதி நிலத்தை வேறு ஒரு நாட்டுக்குக்கொடுப்பதென்றால்/இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் நாடாளுமன்றத்திவிவாதித்துச் சட்டம் இயற்ற வேண்டும். அப்படி ஒரு சட்டம் நிறைவேற்றப்படாது கச்சதீவை இலங்கைக்கு வழங்கியது. சட்ட விரோதம் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
கச்சதீவுப் பிரச்சினை காரணமாக தமிழக மீனவர்கள் படும் சொல்லொண்ணாத் துயரங்களைக் கருத்திற் எடுத்த ஜெயலலிதா நீதிமன்றத்தை அணுகப் போவதாக கூறியுள்ளார். கச்சதீவுப் பிரச்சினையில் ஜெயலலிதா முந்துவதைத்தெரிந்து கொண்ட கருணாநிதி கச்சதீவை மீட்க வழக்குத் தொடரப் போவதாக அறிவித்துள்ளார்.
தமிழக மக்களின் உணர்வலைகளைத் தூண்டி வாக்கு வங்கியை அதிகரிப்பதற்கே ஜெயலலிதாவும் கருணாநிதியும் போட்டி போட்டு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். கச்சதீவை மீட்கப் போவதாகக் தமிழக அரசியல் தலைவர்கள் பலர் அறிக்கைகள் விடுத்து ஓய்ந்து விட்ட நிலையில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் நீதிமன்றக் கதவைத் தட்டப் போவதாக அறிவித்துள்ளனர்.
கச்சதீவை இலங்கைக்கு வழங்கப்பட்ட பின் ஜெயலலிதாவும் கருணாநிதியும் தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்துள்ளனர். இந்திய மீனவர்கள் தாக்கப்படும்போது மட்டும் உரத்துக் குரல் கொடுத்து பின்னர் ஓய்ந்து விடுவார்கள். இப்போது இருவரும் நீதிமன்றத்தின் மூலம் கச்சதீவை மீட்கப் போவதாக அறிவித்துள்ளார்கள்.
ஏட்டிக்குப் போட்டியான இந்த அறிவிப்பினால் தமிழக மீனவர்களின் வாழ்வில் எதுவித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை.
No comments:
Post a Comment