Tuesday, April 23, 2013

வடக்கே போகும் மெயில் – முன்னுரை – க. நவம்


சூரன் ரவிவர்மாவின்
வடக்கே போகும் மெயில்

நவீன விஞ்ஞானஇ தொழில் நுட்பங்களின் கடுகதி வளர்ச்சியானதுஇ இன்றைய வாசகர்கள் மத்தியில் பல்வேறு அனுகூலங்களைக் கொண்ட மின்-வாசிப்பான்கள் (-சநயனநசள) இணையப் பலகைகள் (வயடிடநவள) போன்ற மின்-நூல்களை அறிமுகம் செய்து வைத்துள்ளபோதிலும்இ இப்புதுவரவுகள் காகித நூல்களின் பாவனையிலும் பயன்பாட்டிலும் பாரிய மாற்றங்களை விளைவிக்கத் தவறிவிட்டன என்பதுதான் அண்மைக்காலக் கணிப்பீடுகளின் முடிபு. காகிதப் புத்தகம் தரும் துணைக்கும் தோழமைக்கும்பயன்பாட்டுக்கும் பரிச்சயத்திற்கும் ஈடு இணை இல்லை என்பதுதான் உண்மை!
புத்தகம் ஒன்று, அது புத்தகமான தருணத்திலேயே பூரணத்துவம் பெறுவதில்லை. அது படிக்கப்படவும் வேண்டும். அதனைப் படிப்பதென்பது, அதன் ஆசிரியரது அனுபவத்தை வாசகர் பெறுவதாகும். புத்தகம் ஆசிரியருக்கும் வாசகருக்கும் இடையிலானதோர் இணைப்புப் பாலம்; ஏகாந்த உறவாடல் சாதனம். அதில் ஆசிரியரும் வாசகரும் சம பங்காளிகள். ஆசிரியர் தமது எண்ணங்களையும் அனுபவங்களையும் படிபிப்னைகளையும் வாசகர் மனதில் சரிவர விதைத்து, வாழ்வியல் குறித்த பரந்த தரிசனத்திற்கு வழிதிறக்கும் பணியில் வெற்றிபெறும் போதேஇ புத்தகம் தனது பூரணத்துவத்தை எய்துகிறது.
சூரன் . ரவிவர்மாவடக்கே போகும் மெயில்என்ற பெயரில், தமது16 சிறுகதைகள் அடங்கிய புத்தகம் ஒன்றை வெளியிடுகின்றார். இப்புத்தகமானது தனது பிறவிப் பணியின் பாதியினையே இதுவரை பூர்த்தி செய்திருக்கிறது. இனி, இது இடம்விட்டு இடம் நகர்ந்து, கால இடைவெளி கடந்து, வாசகரைச் சென்றடைய வேண்டும்; தனிமையில் வாசகரால் நுகரப்பட வேண்டும்; வாசகரோடு அணுக்கமான உறவை உண்டுபண்ண வேண்டும்; வாசகருக்குப் புதிய அனுபவங்களை அள்ளி வழங்க வேண்டும்; வாழ்வின் நிதர்சனங்களைச் சித்திரித்து, மனித மேம்பாட்டுக்குத் திசை காட்ட வேண்டும். இவற்றிலேயே இப்புத்தகத்தினது பிறவிப் பணியின் மீதிப்பாதி தங்கியுள்ளது.
வடக்கே போகும் மெயில்திரட்டினைப் படித்து முடிக்கும் வாசகர்கள், இதன் ஆசிரியர் ரவிவர்மா பொழுதுபோக்கு அம்சங்களைக் கதைகளாக்கும் ஒரு கேளிக்கை எழுத்தாளரல்ல என்பதையும், பதிலாக அவர் சமூகத்தின் மீது கரிசனையும் அக்கறையும் கொண்ட ஒரு மனிதநேயப் படைப்பாளி என்பதையும் சுலபமாகக் கண்டறிந்து கொள்வர். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களைத் தமது கதைகளினூடாகப் பேசும் ரவிவர்மா, அதே மக்களின் அக வாழ்க்கையின் நெருக்கடிகளையும் கதைகளாக்கித் தந்திருக்கின்றார். எனவே இலக்கியம் சமூக நோக்குடையதாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கும் ஈழத்து இலக்கியப் பாரம்பரியத்தினின்றும் அவர் விலகிச் செல்லவில்லை என்பதும், அவரது இத்திரட்டு வாசகனுக்கு நுட்பமான புதிய அனுபவங்களை வழங்கி, மனித மேம்பாட்டுக்கு உரம் சேர்க்கத் தவறவில்லை என்பதும் நம்பிக்கை தரும் செய்திகளாகும்.
கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து இலங்கையின் வரலாற்றுப் போக்கினை மாற்றியமைத்த இனமுரண்பாடுகளும், அதன் வழியாக எண்பதுகளின் ஆரம்பம்தொட்டு முனைப்புப்பெற்ற இனவிடுதலைப் போராட்டமும், மக்களின் அமைதி வாழ்வைத் துவம்சம் செய்துபோன யுத்த அவலங்களும், அவற்றின் பக்க விளைவுகளும் பாதிப்புகளும் இடம்பெறாத அண்மைக்கால ஈழத்தமிழ் இலக்கியப் படைப்புகள் அனேகமாக இல்லை என்றே கூறலாம். ரவிவர்மாவின்வடக்கே போகும் மெயில்சிறுகதைத் திரட்டும் அதற்கு விதிவிலக்கல்ல. ‘வடக்கே போகும் மெயில்இ’ ‘விடியலைத் தேடி,’ ‘குலதெய்வம்,’ ‘என்று மறையும்,’ ‘திக்குத் தெரியாத,’ ‘தாலி பாக்கியம்,’ ‘தண்ணீர் தண்ணீர்ஆகிய கதைகள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இனமுரண்பாட்டினையும் யுத்தக் கெடுதிகளையும் தொட்டுச் செல்லும் கதைகளாகவே காணப்படுகின்றன. உதாரணத்திற்கு -
போர்க் காலங்களின்போது கொழும்புசென்று தற்காலிகமாக லொட்ஜ் ஒன்றில் தங்கி நிற்கும் தமிழருக்கு ஏற்படக்கூடிய பீதியையும்இ அதனால் ஏற்படும் தடுமாற்றங்களையும்தண்ணீர் தண்ணீர்என்ற கதை உணர்ச்சிச் செறிவுடன் நேர்த்தியாகச் சித்திரிக்கின்றது. அச்சமும் பதற்றமும் உச்சமடைகையில், எதைச் செய்யக்கூடாதோ அதையே செய்ய நேர்ந்துவிடும் அபாயத்தை எண்ணி அஞ்சும் மனம்இ தனக்குள் இலேசாக நகைக்கவும் செய்கிறது. சிறுகதை வரம்புகளுக்குள் அடங்க மறுத்தாலும்இ தன் பங்கைச் சரிவரச் செய்திருக்கும் ஒரு சின்ன மாத்திரைக் கதை ,இது.
திக்குத் தெரியாதஎன்ற சிறுகதை இனமுரண்பாட்டின் கோரமுகத்தைக் காட்டும் இன்னொரு கதையாகும். வன்செயல்களுடன் சம்பந்தப்படாத இளைஞர்கள்கூட, சில சமயங்களில் கைதுசெய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்படும் சோகங்களைச் சொல்லும் கதை. அனைவரது முகங்களிலும் அச்சமும் சந்தேகமும் அள்ளிப் பூசப்பட்ட பாதுகாப்பு வலயம் ஒன்றினுள் எடுக்கப்பட்ட திகில் திரைப்படம் போன்று நகர்த்திச் செல்லப்படும் கதை.
போர்க்கால சூழலோடு பின்னிப் பிணைந்த இவைபோன்ற பல கதைகளுடன், சாதாரண மக்களின் அகவயமான எழுச்சிகளையும் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் படம் பிடித்துக் காட்டும் வகைசார்ந்த படைப்புக்களையும் ரவிவர்மா இத்தொகுதியில் தந்திருக்கின்றார். ‘செல்லாக்காசு’, ‘பொன்னுக்கிழவி’, ‘மிலேனியம் அப்பா’, ‘காவியமா நெஞ்சில் ஓவியமா’, ‘முடிவிலும் ஒன்று தொடரலாம்’, ‘திரைகடலோடியும்’ ‘கொக்கு வெடிஎன்பன மனோவினோதங்களின் வெவ்வேறு பரிமாணங்களைத் தொட்டுக் காட்டும் குறிப்பிடத்தக்க கதைகள். உதாரணங்களாக ஒன்றிரண்டைச் சுட்டிக் காட்டுவதாயின்
கிழிந்து, உருக்குலைந்து பெறுமதியிழந்துபோன பத்து ரூபா தாள் காசைத் தந்திரமாகப் பிறரது தலையில் கட்டியடித்துவிட முயற்சிக்கும் ஒவ்வொரு தடவையும், ஒரு சராசரி மனிதமனம் படும் அவஸ்தையைசெல்லாக்காசுஅழகாகச் சொல்கிறது. அறம்சார்ந்த மனச் சிக்கல்களுக்கு மத்தியிலும், வாழ்வின் ஏதோவொரு சந்தர்ப்பத்தில், விரும்பியோ விரும்பாமலோ, நாமும் ஒரு கணேசமூர்த்தியாக இருந்திருக்கின்றோமோ என எண்ணி, வாசகர் மனம் சஞ்சலப்படும் வகையில் கதை நகர்ந்து செல்கிறது. அதுவே அக்கதையின் வெற்றியும் கூட!
இலட்சியங்களும் ஆசைகளும் கனவுகளும் மனித வாழ்வின் இயங்கியலுக்கான உந்துசக்தியாக விளங்குவன. இந்த யதார்த்தத்தை நிறுவும் விதமாகவே பொன்னுக்கிழவியின் சின்னச் சின்ன ஆசைகள் அவளது வாழ்க்கைப் படகை அவ்வப்போது முன்னோக்கி நகர்த்திச் சென்றுள்ளன. இறுதியில் மனநிம்மதியுடன் உடலைவிட்டு உயிர் பிரிந்து செல்வதற்கும்,தனது கடைசி ஆசை ஒன்று நிறைவேறிவிட்டதுஎன்ற செய்திதான் பொன்னுக்கிழவிக்குத் தேவைப்படுகின்றது. மேலும்பொன்னுக்கிழவிஎன்ற இந்தக் கதை மூலமாக, மரணவீடுகளில் இடம்பெறும் சம்பவங்களையும் சம்பிரதாயங்களையும் ஒருவித எள்ளலுடன் எடுத்துக்கூறி, எமது கிராமியப் பண்பாட்டுக் கோலங்களை ரவிவர்மா கோடிட்டுக் காட்டுகிறார்.
இவ்வாறாக,வடக்கே போகும் மெயில்எனும் இத்திரட்டிலுள்ள கதைகளை தமது மனதின் அகவயமான, புறவயமான தூண்டுதல்களின் விளைவாக, தமக்கே உரிய நடையில் ரவிவர்மா எழுதியுள்ளார். இதிலுள்ள எல்லாவகைக் கதைகளிலும் ரவிவர்மாவின் மனிதநேயம் இழையோடி இருக்கின்றது. தாம் வாழும் சமூகம் மீதான கரிசனை அவரது கதைகளில் ஊறிப் பரவிக்கிடக்கின்றது. இந்தக் கருத்துநிலை ஆரோக்கியம் தான் ரவிவர்மாவின் கதைகளின் பலம். இதற்குப் பக்கதுணையாக அவரது எழுத்துடன் இயல்பாக ஒட்டியிருக்கும் மெல்லிய அங்கதம், அவரது கதைகளுக்கு மென்மேலும் மெருகூட்டி சுவாரசியத்தை வழங்குகிறது.
சுமார் நூறு வருட வரலாற்றைக் கொண்ட தமிழ்ச் சிறுகதையானது படிமுறை ரீதியான பரிணாம வளர்ச்சிக்கும்  (Evolution) – உருமாற்றத்திற்கும் (Metamorphosis) உள்ளாகி, முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இத்தருணத்தில் ஒரு கதையின் உள்ளடக்கத்துக்கு ஈடாக, அதன் உருவம், உத்தி, படிமம், மொழிநடை, என்பவற்றுடன்படைப்பாளியின் கண்ணோட்டம், அனுபவம், கற்பனை வளம்இ படைப்பாற்றல் போன்றவற்றின் சீரான ஒருங்கிணைவு பெரிதும் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. இவ்வகைப்பட்ட நுட்பங்களைக் கருத்தில் கொண்டு, ரவிவர்மா மென்மேலும் தமது சிறுகதை எழுத்துப் பணியைத் தொடரவேண்டும்.
ரவிவர்மாவின் பாட்டனார் ஆசாரியார் திரு. கா. சூரன் அவர்கள் ஒரு பண்பட்ட சிற்பக் கலைஞர்; தந்தையார் ஆசிரியர் திரு. சூ. ஏகாம்பரம் அவர்கள் ஓர் உன்னதமான ஓவியக் கலைஞர்; பெரிய தந்தையார் கலாவினோதன் திரு. பெ. அண்ணாசாமி அவர்கள் ஓர் அற்புதமான நடிகர், நாடக அரங்கக் கலைஞர். இத்தகைய காத்திரமான கலைப் பாரம்பரியத்தின் வழிவந்த ரவிவர்மா, தமது கலை இலக்கியப் படைப்பாக்க முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட வேண்டும். வேரில் பலாவாக ஒளிந்திருக்கும் அவரது பன்முகப்பட்ட படைப்பாற்றல் வெளிக்கொணரப்பட வேண்டும். நவீன தமிழ்ப் புனைவிலக்கியம் அவரது ஆற்றல்களால் புது மெருகு பெறவேண்டும். வாழ்த்துக்கள்!
. நவம்
கனடா
09-01-2013

No comments: