Saturday, February 8, 2014

சுவீடன் 1958

உபந்தாட்ட ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்படித்த பீலே  என்ற  இளம் நட்சத் திரம், உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்திய ஆண்டு  1958. சுவீடனில் நடை பெற்ற  உலக உதைபந்தாட்டப் போட் டியில் உதைபந்தாட்ட ரசிகர்களின் உள்ளத் தில் குடிபுகுந்தார்  பீலே. பீலே வாகா ஆகியோ ரின் அற்புதமான விளையாட்டின் மூலம் உதைபந்தாட்ட அரங்கில் பரேஸிலின்  சாம்ராஜ்யம் ஆரம்பமானது. 1950ஆம் ஆண்டு சொந்த நாட்டில் கைநழுவிய சம்ப யன் கிண்ணத்தை பரேஸில் முதல் முதலில் முத்தமிட்டது.
சுவீடனில் 1958ஆம் ஆண்டு நடை பெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு 45 நாடுகள் போட்டியிட்டன.சிறப்பாகச் செயற்பட்ட 16 நாடுகள்   உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றன. கடந்த போட்டி யில் விளையாடிய இத்தாலி, உருகுவே ஆகியன தகுதி பெறவில்லை. வேல்ஸ், வட அயர்லாந்து ஆகியன முதல் முதலாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
ஐரோப்பாக் கண்டத்திலிருந்து ஒஸ்ரியா, இங்கிலாந்து, மே.ஜேர்மனி, சோவியத் ரஷ்யா,  அயர்லாந்து, வேல்ஸ், செக்கஸ்லோ வாக்கியா, பரான்ஸ், ஹங்கேரி, ஸ்கொட்லாந்து, சுவீடன், யூக்கஸ்லோவாக்கியா ஆகிய 13 நாடுகள் தகுதி பெற்றன. தென்னமெரிக்காவி லிருந்து ஆர் ஜென்ரீனா, பரகுவே, பரேஸில், அமெரிக்கா விலிருந்து மெக்ஸிகோ ஆகியவும் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.
குழு 1 இல் வட அயர்லாந்து, மே.ஜேர்மனி,  செக்கஸ்லோவாக்கியா, ஆர்ஜென்ரீனா ஆகியன இடம்பெற்றன. வட அயர்லாந்தும், மே. ஜேர் மனியும் கால் இறுதிக்குத் தெரிவாகின. ஆர் ஜென்ரீனாவுக்கு எதிரான போட்டியில் செக்கஸ் லோவாக்கியா 6d1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
குழு 2இல் பரான்ஸ், யூக்கஸ்லோவாக்கியா, பரகுவே, ஸ்கொட்லாந்து ஆகியன விளையாடின. பரான்ஸ், யூக்கஸ்லோவாக்கியா ஆகியன கால் இறுதிக்குத் தெரிவாகின. பரகுவேக்கு எதிரான போட்டியில் %d3 என்ற கோல் கணக்கில் பரான்ஸ்  வெற்றிபெற்றது.
குழு 3இல் சுவீடன் வேல்ஸ், ஹங்கேரி, மெக்ஸிகோ ஆகியனவும் குழு 4இல் பறேசில், சோவியத்யூனியன், இங்கிலாந்து, ஒஸ்ரியா ஆகியனவும் போட்டியிட்டன.  இந்த இரண்டு குழுக் களிலும் முதலிடம் படித்த சுவீடன், வேல்ஸ், பரேஸில், சோவியத்யூனியன் ஆகியன கால் இறுதிக்குத் தெரிவாகின.
கால் இறுதிப் போட்டியில்  வெற்றிபெற்ற பரேஸில், பரான்ஸ், சுவீடன், மேற்கு ஜேர்மனி ஆகியன அரை இறுதிக்குத் தெரிவாகின. பரான் ஸுடன் மோதிய பரேஸில் 5d2 கோல் கணக்கிலும், மேற்கு ஜேர்மனியுடன் விளையாடிய சுவீடன் 3d1 கோல் கணக்கிலும் வெற்றிபெற்று இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றன.
பரேஸில், சுவீடன் ஆகியவற்றுக்கிடையே யான இறுதிப் போட்டியில்  பரேஸிலின் புதிய பயிற்சியாளரான வின்வென்ட் பெலோவின் வழிகாட்டலில் பீலே,வாவா ஆகியோர் தலா இரண்டு கோல்கள் அடித்தனர். பரேஸில் இளம் படை ஐந்து கோல்கள் அடித்தது. சுவீடன் இரண்டு கோல்கள் அடித்தது.  4d2d4 என்ற களவியூகத்தை முதல் முதலாக சோவியத் யூனியனுக்கு எதிரான போட்டியில் அறிமுக மாகிய பறேஸில் எதிரணிகளைத்  திணறடித் தது.  அரை இறுதிப் போட்டியில் தோல்விய டைந்த பரான்ஸ், மேற்கு ஜேர்மனி   ஆகிய வற்றுக் கிடையேயான போட்டியில் 6d3 கோல் கணக்கில் வெற்றிபெற்ற பரான்ஸ் மூன்றாவது இடத்தைப் படித்தது.
ஆறு கோல்கள் அடித்த பரான்ஸ் வீரர் ஜஸ்ட் பென்ரினி கோல்டன் ´ விருதை கெப் பெற்றார். நான்கு கோல்கள் அடித்த பரேஸி லின் இளம் புயல் பீலே, ஆறு கோல்கள் அடித்த சுவீடன் வீரர் யஹல்மட் ரஹ்ன் ஆகியோர் கோல்டன் ´ விருதுக்குப் போட்டியிட்டனர். சிறந்த இளம் வீரருக்கான விருதை 1% வயதான பீலே பெற்றார்.  உலகக் கிண்ணப் போட்டியில் 35 போட்டிகள் நடைபெற்றன. 126 கோல்கள் அடிக்கப்பட்டன. 8,19,810 ரசிகர்கள் பார்வை யிட்டனர். பரான்ஸ் 23 கோல்களும், பரேஸில்  16 கோல்களும், சுவீடன், ஜேர்மனி ஆகியன தலா 12 கோல்களும் அடித்தன. மெக்ஸிகோ 1 மாத்திரமே அடித்தது. 
சுவீடனில் 12 நகரங்களில்  போட்டிகள் நடை பெற்றன. உலகக்கிண்ணப் போட்டியில் விளை யாட இஸ்ரேல் தகுதிபெற்றிருந்தது. பீஃபாவின் விதிமுறையை மீறியதால் தடை செய்யப்பட்டது. 
ஆசிய அணியில்   இணைக்கப்பட்டதால் துருக்கி விளையாட மறுத்தது. ஹங்கேரியின் ஜனாதிபதிக்கு எதிர்ப்புத்தெரிவிக்கப்பட்டதால் ஹங்கேரி, வேல்ஸ் ஆகிவற்றுக்கிடையேயான போட்டியில் 2,823 பார்வையாளர்களே இருந்த னர்.
மூனிச் விமான விபத்தில் இங்கிலாந்து வீரர்கள் டாமிடெஸ், லாலர், ஜோன் பைரன் ஆகியோர் மரணமானார்கள். இங்கிலாந்து பரபல வீரரான பாப சால்ஸ்டனும் விளையாட வில்லை. இது இங்கிலாந் துக்குப் பாதகமாக அமைந்தது.

வர்மா 
சுடர் ஒளி 02/02/14


No comments: