Sunday, February 16, 2014

உயிரில் கலந்த உறவு

"அம்மா...அம்மா..அய்யோ அம்மா..." வலிதாங்கமுடியாது தன்னையும் மறந்து துடித்த,சித்திரா தன் நிலை உணர்ந்ததும் வாயை மூடிக்கொண்டு துவண்டாள்.அவளால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை.தனது சபதத்தை மறந்து "அம்மா" என்றாள். அந்த வேதனையிலும் அவளுக்கு ஒரு சுகம் இருந்தது.

 "என்ரை சித்திரா செத்துப்போச்சு" தாய் கூறிய வார்த்தை இன்றும் சித்திராவின் காதில் ரீங்காரமிடுகிறது.அம்மாசொன்னது உண்மையாகி விடுமோ? நான் செத்துப்போய்விடுவேனோ? எனப்பயந்தாள் சித்திரா.அம்மாவும் இப்படித்தானே துடித்திருப்பா? வலி அதிகமாகும் போது அம்மாவை அழைப்பதால் வலியின் தாக்கம் குறந்தது போல் உணர்ந்தாள்.அம்மாவின் மீதிருந்த‌ வெறுப்பு நீங்கி அம்மாவின் அர‌வ‌ணைப்பு தேவை என‌ அவ‌ளின் ம‌ன‌ம் கூறிய‌து.

  சித்திரா வ‌லியால் துடிப்ப‌தை அறிந்த‌தும் அந்த‌ தொட‌ர் மாடியில் உள்ள‌ அனைவ‌ரும் ஒன்று கூடிவிட்ட‌ன‌ர்.
"என்ன‌ பாத்துக்கொண்டு நிக்கிறிய‌ள்? ஆஸ்ப‌த்திரிக்கு உட‌னை கொண்டுபோங்கோ."
"நான் காருக்கு போன் ப‌ண்ணிப்போட்ட‌ன்"
"பிள்ளை க‌ல‌ங்காதை தைரிய‌மா இரு."
கொஞ்ச‌ நேர‌ம் தான் ஆஸ்ப‌த்திரிக்குப் போனாப்போலை எல்லாம் ச‌ரியாப்போம்."
"உடுப்புக‌ள் எல்லாம் என்ன‌ மாதிரி."
"அது இங்கை சூட்கேசுக்கை அடுக்கின‌ப‌டி கிட‌க்கு."
"ஓ ராத்திரியும் எடுத்துப்பாத்த‌னாங்க‌ள்."
அங்கு நின்றவர்கள் சித்திராவுக்கு ஆறுதல் கூறினார்கள்.சிலர் அவளை வைத்தியசாலைக்கு அனுப்ப உதவிசெய்தார்கள். அந்தத்தொடர் மாடியில் இருக்கும் அனைவரும் சித்திராவை தமது குடும்பத்தில் ஒருவர்போன்றே கவனித்தார்கள். சித்திராவும் அவர்கள் மீது அன்புடனும் பாசத்துடனும் பழகினாள்.  
 
"கார் வந்திட்டுது." கீழே இருந்து ஒருவர் சத்தம் போட்டார். "நல்ல நேரத்திலை பிள்ளை சுகமாகப்பிறக்க வேணும்"எனக்கைகள் இரண்டையும் தலைக்கு மேலே கூப்பியபடி மூதாட்டி ஒருவர் கும்பிட்டார்.அங்குள்ள அனைவரின் வேண்டுகோளும் அதுவாகத்தான் இருந்தது.சித்திரா அந்தத் தொடர் மாடிக்கு வந்து மூன்று வருடங்களாகிவிட்டது. ஒவ்வொரு வருடமும் பரணி  இலங்கைக்கு வந்துபோவான்.சித்திராவை தான் இருக்கும் நாட்டுக்குக்கூட்டிப்போகும் முயற்சி தடைப்பட்டுக்கொண்டே வந்தது.  விரைவில்   விஸா கிடைத்துவிடும் என   இரவு சித்திராவுடன் கதைக்கும் போது கூறினான்.

 பரணிக்கும் சித்திராவுக்கும் தொடர்பு இருப்பதாக ஊரில் உள்ளவர்கள் மெதுவாக் கதைத்தது சித்திராவின் தாய் சோதிப்பிள்ளைக்கும் தெரியவந்தது.தாய் கேட்ட போது ஒரேயடியாக  அப்படி ஒரு தொடர்பும் இல்லை என சித்திரா மறுத்துவிட்டாள்.சித்திராவின் வார்த்தைய நம்பி ஊரில் உள்ளவர்களை வாய்க்கு வந்தபடி ஏசினாள்.. சில‌நாட்க‌ளின் பின்ன‌ர் ப‌ர‌ணி வெளிநாடு சென்ற‌த‌னால் சோதிப்பிள்ளை நிம்ம‌திப்பெருமூச்சு விட்டாள்
தலைவன் இல்லாத குடும்பம்.சித்திரா,ரேவதி இரண்டு பெண்குழந்தைகளுக்கும் குறை இல்லாமல் வளர்த்தாள் சோதிப்பிள்ளை.தோட்டத்தில் விளையும் மரக்கறிகளை சந்தைக்குக் கொண்டு சென்று இருந்து விற்பனை செய்து குடும்பத்தைப்பார்க்கும் சோதிப்பிள்ளைக்கு மழையை நம்பிய இரண்டு ஏக்கர் வயலும் உண்டு. பிள்ளைகள் படிக்க வேண்டும் என்பதனால் தோட்டம்,வயல்,சமையல் எல்லாவற்றையும் தனி ஒரு ஆளாக கவனித்து வந்தாள்.

 பரணிக்கும் சித்திராவுக்கும் இடையிலானதொடர்பு உண்மைதான் என சோதிப்பிள்ளைக்கு மிகவும் நம்பிக்கையானவர்கள் கூறியதால் மகள் சித்திராவிடம் மீண்டும் விசாரித்தாள். மறுக்க முடியாத ஆதாரங்களுடன் தாய் விசாரித்ததால் சித்திரா உண்மையைக்கூறினாள்.

 "அவை எங்கடை ஆக்கள்தான் அவையளை நாங்கள் எங்கடை பை,ந்தியிலை சேக்கிறேல்லை.அவையளின்ரை வீட்டிலை நாங்கள் செம்பு தூக்றேல்ல. தேப்பன் இல்லாத பிள்ளையளை பிளையா வளத்துப்போட்டன் எண்டு நாலு சனம் சொல்லும் படி வச்சிடாதை.அவனை ந்திடு. அப்பிடி அவன் வேணுமெண்டால், அவனை நீ ட்டினால் நானும் ரேவதியும் உயிரோடை இருக்கமாட்டம்" புத்திமதியில் ஆரம்பித்ததாயின் உபதேசம் மிரட்டலில் முடிந்தது.தாயின் மிரட்டலால் அமைதியானாள் சித்திரா.

ணி வெளிநாட்டில் நிற்பனால் ன் சொல்லையும் மீறி சித்திரா ஓடிப்போகமாட்டாள் எனசோதிப்பிள்ளை ம்பினாள்.சிலநாட்களின் பின்னர் ணியிடமிருந்து சித்திராவுக்குகு கிழ்ச்சியானசெய்தி கிடைத்தது. ணி கொழும்புக்கு ந்து சித்திராவைத் திருமம் முடித்து அவளை வெளிநாட்டுக்கு அழைத்துச்செல்லும் லை ணியுடன் வெளிநாட்டிலே வேலை செய்யும் ஒருவர் சித்திராவுக்குக் கூறினார்.சித்திரா கொழும்புக்குச்செல்வற்காகணி, பணம்கொடுத்தனுப்பினான்.இந்தச்செய்தியால் கிழ்ச்சியடைந்தசித்திரா தாயையும் ங்கையையும் நினைத்துக் லைப்பட்டாள்.
பரணியின் தகவலால் சந்தோசப்படுவதா கவலைப்படுவதா எனத்தெரியாது தவித்தாள். வெளிநாட்டுக்குச்சென்றும் பரணி தன்னை மறக்கவில்லை என மனம் குதூகலித்தது.பரணியைத் தேடிச்சென்றால் தாயும் சகோதரியும்  அவமானப்படுவார்கள் எனப் பரிதவித்தாள்.அவளது ஊரிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்றவர்களின் வாழ்க்கை திடீரென மாறியது.மண் வீடுகள் மாளிகையாகின. வசதி வாய்ப்புகள் அதிகரித்தன. தன் மீதான தாயின் ஆத்திரமும் கோபமும் சில நாட்களில் தணிந்துவிடும் என உறுதியாக நம்பிய சித்திரா கடிதம் எழுதி வைத்துவிட்டு பரணியைத்தேடி கொழும்புக்குச் சென்றாள்.

 கோயில்,சந்தை ஆகியவற்றுக்குச்செல்லும் சித்திரா,கொழும்பிலே உள்ள உறவினர்களையும் ஊரவர்களையும் சந்திப்பாள்.தான் வீட்டைவிட்டு ஓடியதால் தாய்பட்ட துன்பங்களையும் துயரங்களையும் அறிந்து மனம் வெதும்பினாள்."எனது ள் சித்திரா செத்துப்போனாள்" எனத்தாய் கூறியவார்த்தைகள் அவள் தைப்புண்ணாக்கின‌.அதை நினைக்கும் போதெல்லாம் சித்திராவின் ண்ணளிலிருந்து ண்ணீர் பெருகும்.

"சித்திரா ஆழாதை.இஞ்சை குழந்தையைப்பார் உன்னைப்போலநல்சிவத்தடிவானகுழந்தை." அங்கே நின்றஒரு பெண் குழந்தையைத்தூக்கி சித்திராவின் முகத்துக்கு முன்னே நீட்டினாள்.குழந்தையைப்பார்த்ததும் அவள் லைகள் எல்லாம் றைந்துவிட்ட‌.மெதுவாகஉச்சி முகர்ந்து கையைப்பிடித்தாள்.றுகையையும் சேர்த்து சித்திராவின் கையைஇறுகப்பிடித்தது குழந்தை.

இரவு த்து ணியாகிவிட்டது பிரத்துக்கு உதவிசெய்யந்தபெண் ட்டும் சித்திராவுடன் வைத்தியசாலையில் நின்றார்.டியிலே கிடந்தகுழந்தையை ஆசை தீரப் பார்த்தாள் சித்திரா.தாயைப்போன்று ட்டமுகம். ப்பனைப்போன்று அடர்த்தியானஇமை. சித்திராவைப்போல் சிறியநெற்றி.ணியின் கோதரியைப்போல் எடுப்பானமூக்கு.ணியின் தாயைப்போல் சிறியவாய்.அவளுக்குத்தெரிந்தது அவ்வவுதான்.ஊரிலே என்றால் இதைவிடஅதிகமாகஒப்பிட்டுச்சொல்வார்கள்.

குழந்தையின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தசித்திராவின் தில் புதியசிந்தனைஉருவானது. திடீரெனக்குழந்தை வீரிட்டலறியது."இல்லை.இல்லை. என்ரை செல்லம் அழவேண்டாம்.நாங்கள் வீட்டை போவம்.செல்லத்துக்கு பாட்டி, சித்தி எல்லாரும் இருக்கினம்.அழாமல் தூக்கி வைச்சிருப்பினம்" எனச் சித்திரா கூறியதும் ஏதோ புரிந்தது போல் சிரித்தபடி நித்திரையானது குழந்தைபரணி ஒப்புக்கொள்ளத்தங்குவான்.அனாலும் அவள் உறுதியானஒரு முடிவை எடுத்துவிட்டாள்.
சூரன்..ரவிவர்மா

 யாதும்,கனடா இதழ் 2014

No comments: