Friday, May 3, 2019

சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற மும்பை


மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகியவற்றுக்கிடையே மும்பையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் இரு அணிகளும்  இ62 ஓட்டங்கள் எடுத்ததால் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் சூப்பர் ஓவரில் வெற்ரி பெற்ற மும்பை பிளே ஃஓவ் சுற்றில் விளையாடும் தகுதியைப் பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை 162 ஓட்டங்கள் எடுத்தது. டிகொக் அதிக பட்சமாக 69 ஓட்டங்கள் எடுத்தார். ரோஹித் சர்மா 24 ஓட்டங்கள் எடுத்தார். மற்றையவர்கள் முறைவான ஓட்டங்களையே பெற்றனர். ஹைதராபாத் பந்து வீச்சாளர் கலீல் அஹமட் 24 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று விக்கெற்களை வீழ்த்தினார்.

சகா 25 குப்தில்15, கேன் வில்லியம்சன் 3,  விஜய் சங்கர் 12 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். 14.3 ஓவர்களில் ஐந்து விக்கெற்களை இழந்து 105 ஓட்டங்கள்  எடுத்தது ஹைதராபாத்.  ஆறாவது விக்கெற்றில் இணைந்த்  முகமது நபி, மணிஸ் பாண்டே ஜோடி  49  ஓட்டங்கள் சேர்த்து ஆறுதலளித்தது. கடைசி மூன்று ஓவர்கள் பரபரப்பாக இருந்தது. மலிங்க வீசிய 18 ஆவது ஓவரிலும் பும்ப்ரா வீசிய 19 ஆவது ஓவரிலும் தலா 12 ஓட்டங்கள் எடுக்கப்பட்டன. 20 ஆவது ஓவரில் வெற்றி பெற  17 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

பண்டையா வீசிய 10 ஆவது ஓவரின் முதல் பந்தில் நபி ஒரு ஓட்டமும் இரண்டாவது பந்தில் மணிஸ் பாண்டே ஒரு ஓட்டமும் எடுத்தனர். 3 ஆவது பந்தில் சிக்ஸர் அடித்த நபி நான்காவது பந்தில் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். நிஅந்தாவதி பந்தில் இரண்டு ஓட்டங்கள அடித்த பாண்டே ஆறாவது பந்தில் சிக்சர் அடித்தார். ஹைதராபாத் 162 ஓட்டங்கள் அடித்ததால்போட்டி சமநிலையில் முடிந்தது.

சூபர் ஓவரில் ஹைதராபாத் முதலில் துடுப்பெடுத்தாடியது பும்ராவின் முதல் பந்தில் பாண்டே ரன் அவுட்  முறையில்  ஆட்டமிழந்தார். இரண்டாவது பந்தில்  குப்தில் ஒரு ஓட்டம் அடித்தார்.  மூன்றாவது பந்தில் சிக்ஸர் அடித்த நபி நான்காவது பந்துல் ஆட்டமிழந்தார். சூப்பர் ஓவரில் இரண்டு விக்கெற்கள் வீழ்த்தப்பட்டால் அந்த அணி தொடர்ந்து விளையாடும் தகுதியை இழந்து விடும். ஆட்டம் நிருத்தப்பட்டு மும்பைக்கு ஒன்பது ஓட்ட வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்ட்து.
 பாண்டியாவும்  பொலாட்டும் களம் இறங்கினர். ரஷீட் கான் பந்து வீசினார். முதல் பந்தில் பாண்டியா சிக்ஸரும் இரண்டாவது பந்தில் ஒரு ஓட்டமும் எடுத்தார். மூன்றாவது பந்தில் பொலாட் இரண்டு ஓட்டங்க அடிக்க மும்பை வெற்றி பெற்றது.

No comments: