Tuesday, December 31, 2024

2024 ஆம் ஆண்டு விடை பெற்ற விளையாட்டு வீரர்கள்

உலகலாவிய ரீதியில் நூற்றுக் கணக்கான விளையாட்டுகள்  உள்ளன. அவற்றில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த விளையாட்டுகள்  இருக்கின்றன. ரசிகர்களின் மனதைக் கவர்ந்த விளையாட்டு வீரர்கள்  புகளின் உச்சத்தை எட்டுகிறார்கள். அந்த வீரர்கள்  ஓய்வு பெறும்போது ரசிகர்கள் கவலையடைகிறார்கள்.

உடல்  உறுதியாக  இருக்கும் வரையில்தான் ஒரு வீரனால்  புகழின் உச்சத்தில் இருக்க முடியும்,ஒரு சிலர் 40 வயது கடந்தும் விளையாடுகிறார்கள். மீள முடியாத காயங்களினால் சிலர்  இளம் வயதில் ஓய்வு பெற்றுவிடுகிறார்கள்.2024 ஆம் ஆண்டு பல வீரர்கள்  ஓய்வு பெற்றார்கள். உதைபந்தாட்டம்,கிறிக்கெற்,டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் இருந்து ஓய்வு பெற்ற ஜாம்பவான்கள் சிலரைப் பார்ப்போம்.

உதைபந்தாட்டம்

முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் ,பேயர்ன் முனிச் நட்சத்திரங்கள் உட்பட தலைமுறையின் சிறந்த  உதைபந்தாட்ட வீரர்கள் சிலர் 2024 இல்  ஓய்வு பெற்றனர்.

 

 ஆண்ட்ரெஸ் இனியெஸ்டா

 உதைபந்தாட்ட வரலாற்றில்    ஸ்பெய்ன் அணியின் சிறந்த மிட்ஃபீல்டர்களில் ஒருவரான இனியெஸ்டா தனது 40 வயதில் தனது  ஓய்வை அறிவித்தார்.

 முன்னாள் பார்சிலோனா ,ஸ்பெயின் நாயகன், இப்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விளையாடி வரும் இவர், ஜப்பானில் விஸ்சல் கோபியுடன் ஆறு சீசன்களை கழித்தார்.    2010 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஸ்பெய்ன் சம்பியனாகிய  அணியில் இருந்தார்.

பெப் கார்டியோலா, லூயிஸ் என்ரிக் ,லூயிஸ் வான் கால் போன்ற   2024 ஆம் ஆண்டு  விடை  பெற்ற விளையாட்டு வீரர்கள்

முன்னாள் மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட் ,பேயர்ன் முனிச் நட்சத்திரங்கள் உட்பட தலைமுறையின் சிறந்த  உதைபந்தாட்ட வீரர்கள் சிலர் 2024 இல்  ஓய்வு பெற்றனர்.

                                         ரபேல் வரனே

பிரான்ஸ் டிஃபெண்டர் வரனே செப்டம்பர் 2024 இல் 31 வயதில்   ஓய்வு பெற்றார்.   மான்செஸ்டர் யுனைடெட், ரியல் மாட்ரிட்  ஆகியவற்ரின்  வெற்ரியிலும் பெரும் பங்காற்றினார்.

ரியல் மாட்ரிட்டுடன் 18 கோப்பைகளையும், பிரான்சுடன் உலகக் கிண்ணத்தையும், கடந்த சீசனில்  சீசனின் எஃப்ஏ கோப்பையையும் வென்றார்.

                                            பெப்பே

ரியல் மாட்ரிட் அணியுடன் மூன்று சாம்பியன்ஸ் லீக் பட்டங்களையும், போர்ச்சுகலுடனான ஐரோப்பிய சம்பியன்ஷிப்  உட்பட   பல கிண்ணங்களை வென்ற பெப்பே தனது 41 வயதில் ஓய்வி பெற்றார்.

 அவர் எங்கு சென்றாலும் தனது அணியினரை ஊக்குவிக்கும் அதே வேளையில், அவரை முயற்சித்து கடந்து செல்லத் துணிந்த எந்தவொரு முன்னோடிக்கும் அதை ஒரு கனவாக மாற்றினார்.

                                                  தியாகோ அல்காண்டரா

தியாகோ கடந்த சீசனின் இறுதியில் லிவர்பூலை விட்டு வெளியேறிய பிறகு ஜூலை 2024 இல் தனது ஓய்வை அறிவித்தார்.

33 வயதான ஸ்பானிய வீரரான தியாகோ பார்சிலோனா, பேயர்ன் முனிச்    ஆகிய அணிகளிஉக்காகவும் விளையாடினார். அவர் மெர்சிசைடில் இருந்தபோது காயத்தால் பாதிக்கப்பட்டார் .

                                    டோனி குரூஸ்

ஒரு தலைமுறையின் மிகச்சிறந்த மிட்ஃபீல்டர்களில் ஒருவர். ஜேர்மனியின் ஐரோப்பிய சம்பியன்ஷிப் காலிறுதியில் ஸ்பெயினுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.

க்ரூஸ் ரியல் மாட்ரிட்டில் தனது இறுதி சீசனில் லா லிகா , சாம்பியன்ஸ் லீக் இரண்டையும் வென்றார், ஆனால் யூரோ 2024 இல் சொந்த மண்ணில் வெற்றி  பெறவில்லை.

ரமணி 29/12/24

 

இடைத் தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்

திராவிட முன்னேற்றக் கழக அரசின் மீது மக்கள் வெறுப்டைந்துள்ளனர். பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடித்தது. சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துள்ளது என எதிர்க் கட்சிகள்  குற்றம் சாட்டுகின்றன. அவை உண்மையா,  பொய்யா என அரிவதற்குரிய சந்தர்ப்பம் ஒன்று  உருவாகி உள்ளது. கிழக்கு  ஈரோடு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானதால் அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்படுள்ளது.

கிழக்கு  ஈரோடு தொகுதியில் அண்ணா திராவிட முன்னாற்றக் கழகம், பாரதீய ஜனதா ஆகியவை போட்டியிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி மீண்டும் ஒரு இடைத் தேர்தலைச் சந்திக்க உள்ளது.  ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த ஒரு ஆண்டுக்குள் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களை இழந்திருக்கிறது. மூன்றாஅவ்து முறை தேர்தலுக்குத் தயாராகி உள்ளது.

 2021 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பாக இளங்கோவனின் திருமகன் ஈவெரா போட்டியிட்டு   67,300 வாக்குகளைப் பெற்றார். அப்போது அவரை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் யுவராஜா  போட்டியிட்டு  58,396 வாக்குகளைப் பெற்று தோல்வியடைந்தார். 

  திருமகன் மறைவுக்குப் பின்னர் அந்தத் தொகுதியில்திரவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்ற எதிர் பார்ப்பு எழுந்தது. ஆனால்,  ஈரோடு கிழக்குத் தொகுதியை விட்டுக் கொடுக்க கங்கிரஸ் தயாராக  இல்லை. வேட்பாளர் தெரிவுக்காக காங்கிரஸில் குடுமிப் பிடிச் சண்டை நடந்தது.

காங்கிரஸ் கட்சியே எதிர் பார்க்காத நிலையில் ஸ்டாலின்  முடிவு எடுத்தார்.   திருமகனின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை வேட்பாளராக  ஸ்டாலின் அறிவித்தார். அதைக் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல; இளங்கோவனே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் அவர்  கொரோனா தொற்று ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டு  அப்போதுதான் சுகமடைந்தார்.  அவரை தேர்தல் பிரச்சார களத்தில் இறங்கிவிடுவது சரியாக இருக்குமா என பலரும் நினைத்தனர்.  ஒரு பக்கம் மகனின் இழப்பு மற்றொரு பக்கம் உடல்நிலை என அவர் பல துன்பங்களை அனுபவித்து வந்தநிலையில் முதல்வர் ஸ்டாலின் உத்தரவில் களம் கண்டார் இளங்கோவன்.

ஈரோடு இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. தேர்தல் பிரசாரத்தை திராவிட முன்னேற்றக் கழகம் கையில் எடுத்தது.

 'ஈரோடு கிழக்கு' என்ற புதிய ஃபார்முலாவை திராவிட முன்னேற்றக் கழகம்  அறிமுகம் செய்தது. அதை எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அதனைச் சுட்டிக் காட்டி  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும், விஜயகாந்தின் கட்சியும் இடைத் தேர்தலைப் புறக் கணித்தன.

  அமைச்சர் செந்தில் பாலாஜியின் கையில் தொகுதி தேர்தல் பணிகளை ஒப்படைத்தது திராவிட முன்னேற்றக்கழகம்.   1,10,556 வாக்குகளைப் பெற்று இளங்கோவன் அமோக வெற்றியைப் பெற்றார்.   இளங்கோவனின் திடீர் மறைவை அடுத்து விரைவில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற இருக்கின்றது. இந்த முறையும்  திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கக் கூடும் என சிலர் கருதிய நிலையில் 'ஈரோடு   'திமுக கூட்டணி வசமாகும்' என்று  ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  அந்த இடைவெளியில்  கூடுதலாக ஒரு எம்.எல்.ஏவை பெறுவதால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு  இலாபமும் கிடைக்கப் போவதில்லை. எனவே தேவையற்ற ரிஸ்க்கை  திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்காது.

2025 ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பெப்ரவரியில் டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதனுடன் சேர்த்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் தேர்தல் நடத்தப்படலாம். இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் வழமைபோல் அடிபிடி ஏற்பட்டுள்ளது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இரண்டாவது மகன் சஞ்சய் சம்பத், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன் இடையே தீவிரமான போட்டி நிலவி வருகிறது. திருமகன் ஈ.வே.ரா மறைவுக்குப் பிறகு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட முதலில் சஞ்சய் சம்பத்திடம்தான் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் போட்டியிட ஆர்வம் காட்டவில்லை.  இளங்கோவன்  போட்டியிடுவதை அப்போது திராவிட முன்னேற்றக் கழகம் விரும்பியது.   இந்த முறை தேர்தலில் போட்டியிட சஞ்சய் சம்பத் விரும்புகிறார். டெல்லி தலைமையிடமும் இளங்கோவனின் ஆதரவாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

 தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையின் சிபார்சில்    ராஜன்  முயற்சி செய்கிறார்.. இவர் கடந்த சட்டமன்றத் தேர்தல், பிறகு நடந்த இடைத்தேர்தலின் போதும் சீட் பெறுவதற்குத் தீவிரம் காட்டினார். ஆனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு டெல்லியிலிருந்த செல்வாக்கால் அமைதியானார்.

  இளங்கோவனின் தீவிர ஆதரவாளராக இருந்து பின்னாளில் அவரிடமிருந்து விலகிய முன்னாள் மாவட்ட தலைவர் ஈபி ரவியும் முயன்று வருகிறார். இதற்கிடையில் முன்னாள் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ஆதரவாளரை களமிறக்க தீவிரம் காட்டி வருகிறார்.

ஒரு வருடப் பதவிக்காக தேர்தலில் கோடிக்கணக்காகச் செலவளிக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரண்டாம் மட்டத் தலைவர்களும்   கிழக்கு ஈரோடு இடைத் தேர்தலில் போட்டியிட ஆர்வமாக  இருக்கின்றனர்.

ஈரோடு கிழக்கு இடத் தேர்தல்  எடப்பாடிக்கு திரிசங்கு சொர்க்கமாக  உள்ளது.இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   நிச்சயம் தோல்வியடையும். எடப்பாடியின் தேர்தல் தோல்விப் பட்டியலில் ஒரு  எண்ணிக்கை கூடி அவருக்கு அவப் பெயரைத் கொடுக்கும். தொடர்ச்சியாக 10  தேர்தல்களில்  தோல்வியடைந்த எடப்பாடி  காட்டமான ஒரு அறிக்கையுடன் தேர்தலைப் புறக்கணிப்பார். 

விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும், விஜயகாந்தின் கட்சியும் புறக்கணித்தன.

 2026 தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டுகள் இருக்கும் நிலையில், இந்த ஒரு தொகுதியில் மீண்டும் வாய்ப்பை இழந்து நிற்க எடப்பாடி  தயாராக இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது.

தனது இலக்கு எது என்பதை  என்பதை விஜய் உறுதிசெய்துவிட்டார். அவரது வேலைத் திட்டத்தில்  ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் இடம்பெறப்போவதில்லை.   கூட்டணிக்கு அழைப்பு விடுத்துக் காத்திருக்கிறார்.

சீமான் சீறிக்கொண்டு வருவது உறுதி. எந்தத் தேர்தலையும் விடக்கூடாது என்பதே சீமானின் கொள்கை. தோல்வியைப் பற்ரி அவர் கவலைப்படுவது இல்லை.

தமிழகத்தில் பாரதீய ஜனதா வளர்ந்து விட்டதாக அறிக்கை விடும்  அண்ணாமலை என்ன செய்யப்போகிறார் எனத் தெரியவில்லை. எடப்பாடிக்குப் போட்டியாத தேர்தல்களில்  தொடர்ந்து தோல்வியடையும் அண்ணாமலை அறிக்கையுடன் நின்றுவிடும் நிலைதான் உள்ளது.    விக்கிரவாண்டியைப் போல கூட்டணிக் கட்சிக்கு கிழக்கு ஈரோடைத் தாரை வார்க்கும் நிலையும் ஏற்படலாம்.

  இடைத் தேர்தல் ஆளும் கட்சிக்குச் சாதகமானது என்ற ஒரு நம்பிக்கையை இந்த ஈரோடு மீண்டும் உறுதிசெய்யும்.

ரமணி

29/12/24

தமிழன்,தம்ழிழகம்,ஸ்டாலின்,சீமான்,எடப்பாடி,மோடி

Friday, December 20, 2024

வேதனையுட‌ன் விடைபெற்ற சதனை வீரன் அஸ்வின்


 கிறிக்கெற் உலகில் தனக்கென  ஒரு தனி இராஜ்ஜித்தை உருவாக்கி ஆட்சி செய்த இந்திய சுழற்பந்து வீரர்  கடந்த புதன்கிழமை சர்வதேச கிரிக்கெற்றில் இருந்து ஓய்வுபெற்றார்.

பிரிஸ்பேனில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இந்திய ஆஃப் ஸ்பின்னர்  அஷ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 கேரம் போல் ஸ்பெஷலிஸ்ட். சுழற்பந்து வீச்சில் இவருக்கென ஒரு தனி இடம் உண்டு. விக்கெட்டை எடுக்க இவர் சுழற்பந்தில் செய்யும் மாயாஜாலம் அனைத்தும் இவர் சொல் பேச்சை கேட்கும். இடதுகை துடுப்பாட்ட விரார்களுக்கு  சிம்ம சொப்பனமாக்த் திகழ்ந்தவர்.

106  போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, அனில் கும்ப்ளேவுக்கு (619 விக்கெட்டுகள்) பின்தங்கிய நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் அஸ்வின் 181 ஆ போட்டிகளில்  விளையாடி 228 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  சிறந்த பந்துவீச்சில் 4/25 வீழ்த்தியுள்ளார். அவர் 63 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம், 65 ஓட்டங்களுடன் 16.44 சராசரியில் 707 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் 13வது இடம் பிடித்தார்.

65  ரி20 போட்டிகளில் 23.22 சராசரியில் 72 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  ரி20யில் இந்தியாவுக்காக அதிக விக்கெட் எடுத்த ஆறாவது வீரர் ஆவார்  அனைத்து வடிவங்களிலும் இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். இந்தியாவுடன் 2011-ன் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்ற அணியில் இருந்துள்ளார்.

அஸ்வின் 2009 இல் அறிமுகமானதிலிருந்து ஐந்து ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அஸ்வினின் முதல் ஐபிஎல் அணி ஆகும். 2008 முதல் 2015 வரை ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் சிஎஸ்கேக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பிறகு 2016 இல் ஒரு சீசனில் விளையாடினார். அடுத்ததாக, பஞ்சாப் கிங்ஸில் அஸ்வின் 2018 முதல் கேப்டனாக இருந்தார். அடுத்து டெல்லி கேபிடல்ஸ் 2020 முதல் 2022 வரை இரண்டு சீசன்களில் விளையாடினார். மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் 2022 இல் விளையாடினார். பின்னர் 2025 ஏலத்திற்கு வந்தார். ஐபிஎல் 2024 தொடங்குவதற்கு முன்பு 171 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் வரலாற்றில் முதல் ஐந்து விக்கெட்டுகள் எடுத்தவர்களில் அஸ்வின் ஒருவராக இருந்துள்ளார்.

   டெஸ்ட் கிரிக்கெட்டில் (போட்டிகளின் அடிப்படையில்) 250, 300 மற்றும் 350 விக்கெட்டுகளை வேகமாக எட்டியவர் அஸ்வின். 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450 மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை (போட்டிகளின் அடிப்படையில்) எட்டிய அதிவேக இந்தியர். ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மற்றும் ஐந்து விக்கெட்டுகளை நான்கு முறை எடுத்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 50 ரி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர். டெஸ்ட்களில் அதிக நாயகன் விருதுகள் (11) பெற்றவர். டெஸ்டில் இரண்டாவது அதிக ஐந்து விக்கெட்டுகள் (37), வேகமாக 25 ஐந்து விக்கெட்டுகள் எடுத்தவர் அஸ்வின். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவர் (522). ஒரு காலண்டர் ஆண்டில் (2016) 500 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்தியர் (199) ஒரு சீசனில் அதிக விக்கெட் எடுத்தவர் (82) ஆவார்.

  தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் அஸ்வின் தான். அஸ்வினின் மோசமான செயல்பாடும் ஒரு காரணம். அதேபோல் அஸ்வினின் இடத்தை எளிதாக வாஷிங்டன் சுந்தரால் நிரப்ப முடியும் என்று புரிந்த சில போட்டிகளிலேயே ஓய்வை அறிவித்து சென்றுள்ளார். 

அவுஸ்திரேலியாவில் முதல் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார். இரண்டாவது போட்டியில் அவர் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அஸ்வினால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ரவீந்திர ஜடேஜா அணியில் வாய்ப்பு பெற்றார்.

அஸ்வினுக்கு இந்த தொடரில் ஆட வாய்ப்பே வழங்காமல்.. அதிலும் முறையாக ஃபேர்வெல் கூட தராமல் போனது கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

" அஸ்வினுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அளிக்கப்பட்ட வாய்ப்பும் அவர் ஓய்வு பெறப் போகிறார் என்பதை அறிந்த பின்னரே அளிக்கப்பட்டது என தற்போது தெரிய வந்துள்ளது. அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் அஸ்வினை பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப் போவதில்லை என தெரிந்தே தான் இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்து இருக்கிறது. தான் புறக்கணிக்கப்படுகிறோம் என்பதை உணர்ந்தே அஸ்வின் இரண்டாவது போட்டிக்கு முன்பே ஓய்வு பெறும் முடிவை .எடுத்து இருக்கிறார். பின்னர் அவருக்கு ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது. பின்னர் மீண்டும் அவர் நீக்கப்பட்டார்.

அஸ்வினுக்கு பெரிய ஃபேர்வெல் வழங்கப்படவில்லை. ஒரு காலத்தில் நெஹ்ராவிற்கு தோனி சிறப்பாக ஃபேர்வெல் கொடுத்தார். பார்ம் இழந்தவரை சிஎஸ்கேவில் எடுத்து பார்மிற்கு கொண்டு வந்து.. அவரை இந்திய அணியில் எடுத்து நல்ல சிறப்பான கடைசி மேட்ச் ஃபேர்வெல் கொடுத்தார். ஆனால் பார்மில் இருக்கும்.. அணியில் இருக்கும் ஒருவருக்கு.. அஸ்வின் போன்ற தலைசிறந்த வீரருக்கு ரோஹித் - கம்பீர் அணியால் ஃபேர்வெல் தர முடியவில்லை.

சிலம்பு

21/12/24

அமித்ஷாவுக்கு எதிரான போராட்டத்தால் போர்க்களமான இந்திய நாடாளுமன்றம்

  இந்தியாவின் அனைத்து அரசியல் தலைவர்களும்  போற்றும் அண்ணல் அம்பேத்காரை அமைச்சர்  அமித்ஷா நாடாளுமன்றத்தில் இழிவுபடுத்தியதாகக் குற்றம் சாட்டி எதிர்க் கட்சிகள்  போராட்டம் நடத்தியதால் இரண்டு அவைகளும் முடங்கின.அமித்ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும், மன்னிப்புக் கேட்க வேண்டும் என எதிர்க் கட்சி எம்பிக்கள் அனைவரும் ஆக்கோரஷத்துடன்  உரையாற்றினார்கள்.

அமித்ஷவுக்கு எதிரான போராட்டங்கள் நாடாளுமன்றத்துக்கு  வெளியேயும்  பரந்தளவில் நடைபெறுகின்றன.

ஆளும் கட்சி எம்பிக்கள் அமித்ஷாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். கடந்த வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றம் போர்க்களமாக மாறியது.

நாடாளுமன்ற வளாகத்தில் இந்திய கூட்டணி எம்பிக்களுக்கும் பாஜக எம்பிக்களும் இடையே வியாழக்கிழமை  கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாஜக எம்பி பிரதாப் சாரங்கியின் மண்டை உடைந்து இரத்தம் வழிந்தோடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இம்மோதலில் படுகாயமடைந்த மற்றொரு பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத்,  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நாடாளுமன்றத்துக்குள் நுழைய முயன்ற தம்மை பாஜக எம்பிக்கள் தடுத்து தள்ளிவிட்டதாக லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் ராகுல் காந்திதான் தம்மை தடுத்து தள்ளிவிட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி புகார் கூறினார்.

 நாடாளுமன்றம்   கூடுவதற்கு முன்பாக பாஜக எம்பிக்கள் ஒன்று திரண்டு, அம்பேத்கரை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது; அவமானப்படுத்துகிறது என குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி தலைமையில் இந்திய கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக சென்று போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா இருவரும் நீல நிற உடை அணிந்திருந்தனர். அம்பேத்காரின் ஆதரவாளர்கள்  நில நிற  உடை அணிவது  வழமையானது.

இதனையடுத்து நாடாளுமன்றத்துக்குள் ராகுல் காந்தி செல்ல முயன்றார். அப்போது பாஜக எம்பிக்கள் அவரை சிலர் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு பதற்றமும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

  ராகுல் காந்திதான் தம்மை கீழே தள்ளிவிட்டதாக குற்றம் சாட்டினார். ஆனால்   நாடாளுமன்றத்துக்குள் நுழைய இருப்பது ஒரு வழிதான்.. அந்த வழியே செல்லவிடாமல் பாஜக எம்பிக்கள் தடுத்து தள்ளிவிட்டனர் என ராகுல் காந்தி தெரிவித்தார். அரசியல் சாசனத்தையே தாக்குகிறவர்கள் எங்களை தாக்குகின்றனர்; இது எங்களுக்கு பிரச்சனை அல்ல. அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் எங்களுக்கு முக்கியம் என்றார்.

  நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு தின சிறப்பு விவாதம் இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த எதிர்க்கட்சி எம்பிக்கள் மத்திய அரசு மீது சரமாரியான விமர்சனங்களை அடுக்கியிருந்தனர்.

இந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்து பேசிய  அமித்ஷா   "அம்பேத்கரை காங்கிரஸ் புறக்கணித்தது எப்படி? பாஜக பெருமைப்படுத்தியது எப்படி?  எனப் பட்டியலிட்டு  "அம்பேத்கர், அம்பேத்கர் என்று முழக்கமிடுவது இப்போது ஃபேஷனாகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில் பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும் காங்கிரஸ் பேச வேண்டும்" என்றார்.

அமித்ஷாவின் இந்தப் பேச்சி எரியும் நெருப்பில் எண்ணெயை விட்டது போல் மாறிவிட்டது.

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

  அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அவர் பதவி விலக வலியுறுத்தி  நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டத்தை நடத்தி யது. தமிழ்நாட்டில் திமுக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. சென்னை மாநில கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம் நடந்தது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு செவி கொடுத்து கேட்காமல் இருந்து வருகிறது. குறிப்பாக அதானி விஷயத்தில் உரிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தல்கள் எழுந்த போது, அவையை ஒத்திவைத்து அதற்கு மத்திய அரசு தனது பாணியில் பதிலளித்ததாக காங்கிரஸ் எம்பிக்கள் விமர்சித்துள்ளனர்.

  அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும் என்று தமிழக‌ முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

  அம்பேத்கர் குறித்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப் புண்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹசான் தெரிவித்துள்ளார். 

டாக்டர் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும். நிச்சயமாக மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர் டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அம்பேத்காரைப் பற்றிய அமித்ஷாவின் பேச்சு தமிழகத்தைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

நாடாளுமன்றத்தில்  கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் - பாஜக எம்பிக்கள் போராட்டம் நடத்தியதால் திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜகவின் இரண்டு எம்பிக்களின் மண்டை உடைந்தது. ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  நாடாளுமன்றக் கலவரத்துக்கு ராகுல்தான் காரணம் என்று குற்றம் சுமத்திய  பாரதிய ஜனதா  குற்றம் சாட்டியது. ராகுல் காந்தி மீது ஆறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று பாஜக   புகார்  கொடுத்தது.  அதனை பொலிஸ் நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் திக‌தி தொடங்கியது. இந்த குளிர்கால கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமையுடன்  முடிவ்டைந்தது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அமித்ஷா மன்னிப்பு கோரி தனது மத்திய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது

   இந்நிலையில் தான் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்த தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி சபாநாயகர் ஓம்பிர்லா அலுவலகம் சார்பில்,‛‛நாடாளுமன்றத்தின் அனைத்து நுழைவு வாயில்களிலும் போராட்டம், தர்ணா நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சியினருக்கும் இந்த தடை உத்தரவு பொருந்தும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமித்ஷாவுக்கு  எதிரான போராட்டம்  இப்போதைக்கு ஓய்வு பெறாது போல் தெரிகிறது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கும்போது அமித்ஷாவுக்கு எதிரான போராட்டம் மீண்டும் உயிர்  பெறும்.

Thursday, December 19, 2024

சிறந்த வீரர் வினிசியஸ் ஜூனியர் சிறந்த வீராங்கனை பொன்மதி


   2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த பீபா ஆடவருக்கான விருதை பிறேஸிலின் முன்கள வீரர் வீரர் வினிசியஸ் ஜூனியர் வென்றார். இந்த விருதைப் பெற்ற முதல் பிறேஸில்வீரர் சக வீரர் நெய்மர் மூன்றாஅவ்து இடத்திப் பெற்றார்.  ஸ்பெயின் மிட்ஃபீல்டர் ஐடானா பொன்மதி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த மகளிர் வீராங்கனைக்கான விருதை வென்றார்.

உலக உதைபந்தாட்ட‌ நிர்வாகக் குழுவான  பீபா, , கட்டாரின் டோஹாவில் பீபா 2024 ஆம் ஆண்டுக்கான உதைபந்தாட்ட விருது  விழாவை நடத்தியது, அங்கு ரசிகர்கள், கப்டன்கள் , தேசிய அணிகளின் பயிற்சியாளர்கள், ஊடகங்களின் வாக்குகளின் அடிப்படையில்  விருதுகள் அறிவிக்கப்பட்டன. 

வினிசியஸ் ஜூனியர் 48 புள்ளிகளைப் பெற்றிருந்தார், அதே நேரத்தில் மான்செஸ்டர் சிட்டியின் ஸ்பெயின் மிட்பீல்டர் ரோட்ரி 43 புள்ளிகளைப் பெற்றார். ரியல் மாட்ரிட்டின் இங்கிலீஷ் மிட்பீல்டர் ஜூட் பெல்லிங்ஹாம் 37 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

விதியின்படி ஒவ்வொரு வாக்குக்கும் முதல் தேர்வு ஐந்து புள்ளிகளையும், இரண்டாவது எண்ணுக்கு மூன்று புள்ளிகளையும், கடைசியாக ஒரு புள்ளியையும் கணக்கிடுவதால், மெஸ்ஸி 25 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தைப் பிடித்தார்.

 வினிசியஸ் ஜூனியர்  2023 /2024 சீசனில்    ரியல் மாட்ரிட்டுக்காக   39  போட்டிகளில் விஒளையாடி  24 கோல்களை அடித்தார்.

பார்சிலோனாவின் ஸ்பானிஷ் நட்சத்திரம் பொன்மதி இந்த விருதை ஒன்றுக்கு மேற்பட்ட முறை வென்ற ஆறாவது வீராங்கனை ஆவார். யூரோ மகளிர் நேஷன்ஸ் லீக்கை ஸ்பெயின் வெல்ல பொன்மதி உதவினார், மேலும் பார்சிலோனா யூரோ மகளிர் சம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றது.

26 வயதான  பொன்மதி ஜாம்பியாவின் பார்பரா பண்டா (39 புள்ளிகள்) , நார்வேயின் கரோலின் கிரஹாம் ஹேன்சன் (37 புள்ளிகள்) ஆகியோரை விட 52 வாக்குகள் பெற்றுள்ளார்.

ரியல் மாட்ரிட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கார்லோ அன்செலோட்டி சிறந்த ஆடவர் பயிற்சியாளருக்கான விருதையும், செல்சியின் எம்மா ஹேய்ஸ் சிறந்த மகளிர் பயிற்சியாளருக்கான விருதையும் வென்றனர்.

சிறந்த ஆடவர் கோல்கீப்பர் விருது அர்ஜென்டினா எமிலியானோ மார்டினெஸுக்கும், சிறந்த பெண்கள் கோல்கீப்பராக அமெரிக்க வீராங்கனையான அலிசா நாஹெர்க்கும் வழங்கப்பட்டது.

 உலகக் கோப்பை வென்ற பெபெட்டோ வழங்கிய 'ஃபேர் ப்ளே' விருதை பிரேசிலின் தியாகோ மியா வென்றார். மே மாதம் பிரேசிலிய வெள்ளத்தின் போது அவரது வீர முயற்சிகளுக்காக இன்டர் மிட்ஃபீல்டர் விருதைப் பெறுகிறார்.

பிரீமியர் லீக்கில் எவர்டனுக்கு எதிராக மான்செஸ்டர் யுனைடெட்டின் அலெஜான்ட்ரோ கர்னாச்சோ தனது சிறந்த ஓவர்ஹெட் கோலுக்காக புஸ்காஸ் விருதை வென்றார்.

பிறேஸிலின் மார்டா (ஆர்லாண்டோ பிரைட்) 2024 ஆம் ஆண்டிற்கான மகளிர் கால்பந்தில் அடித்த சிறந்த கோலுக்கான முதல் 'மார்டா விருதை' வென்றார். ஒரு வீராங்கனை தனது சொந்த பெயரில் விருதை வெல்வதை நீங்கள் அடிக்கடி பார்க்க மாட்டீர்கள்.

பிறேஸிலிய கிளப் வாஸ்கோ டி காமாவின் தீவிர ரசிகரான கில்ஹெர்ம் காந்த்ரா மௌரா, ரசிகர் விருதை வென்றார்.

எட்டு வயதான கில்ஹெர்ம் ('குய்'), எபிடெர்மொலிசிஸ் புல்லோசா எனப்படும் அரிய மரபணு நிலையில் பாதிக்கப்பட்டு, நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார்.

இறுதியாக 16 நாட்களுக்குப் பிறகு எழுந்ததும், அவரும் அவரது தாயும் மீண்டும் இணையும் வீடியோ விரைவில் வைரலானது.

இளம் பிறேஸிலியன் வாஸ்கோடகாமாவின் தீவிர ரசிகராவார், மேலும் கிளப்பின் அப்போதைய நட்சத்திர வீரர் கேப்ரியல் பெக்கால் அவர் குணமடைய உதவினார், அவர் அவரை மருத்துவமனையில் தவறாமல் சந்தித்தார்.

அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன், குய் மற்ற வாஸ்கோ அணிக்கு அறிமுகப்படுத்தப்பட்டார் மற்றும் ஆகஸ்ட் 2023 இல் ஒரு விளையாட்டுக்கான சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

ரமணி

20/12/24

ஜோகோவிச்சுடன் ஜோடி சேர்கிறார் நிக் கிர்கியோஸ்



  

அவுஸ்திரேலிய  ஓபனில் நோவக் ஜோகோவிச்சுடன் இரட்டையர் போட்டிகளில் விளையாடப் போவதாக நிக் கிர்கியோஸ் கூறுறினார்.

கிர்கியோஸ் 2021 ஆம் ஆண்டில்   சிறந்த  வீரராகப் பரிணமித்தார் இரண்டு வீரர்களும் 2022 இல் விம்பிள்டன் பட்டத்திற்காக நேருக்கு நேர் மோதினர், ஜோகோவிச் நான்கு செட்களில் வென்றார்.

  இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டி மெல்போர்னில் ஜனவரி 12 ஆம் திகதி  தொடங்குகிறது.

29 வயதான கிர்கியோஸ், பல காயங்களுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிகம் விளையாடவில்லை.

24 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான முன்னாள் உலக நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சுக்கு காயங்கள்  இருந்தபோதிலும் கிர்கியோஸ்  ஊக்கிவிக்கிறார். 

Sunday, December 15, 2024

2024 ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட வீரர்கள்

 2024 ஆம் ஆண்டு முடிவடையும் நிலையில், கூகுள் தனது ஆண்டில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அல்ஜீரிய குத்துச்சண்டை வீரர் இமானே கெலிஃப் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார். அவருடன், இந்தியாவின் ஹர்திக் பாண்டியா, ஸ்பெயின் கால்பந்து வீரர் லாமின் யமல் மற்றும் குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன் போன்ற குறிப்பிடத்தக்க பெயர்கள் அவர்களின் சாதனைகள் மற்றும் சர்ச்சைகள் காரணமாக தலைப்புச் செய்திகளில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த விளையாட்டு வீரர்கள் 2024 இல் தங்கள் முத்திரையைப் பதித்தனர், அவர்களின் செயல்திறன் மற்றும் தனிப்பட்ட சாதனைகளால்  ரசிகர்களைக் கவர்ந்தனர். 2023ல் கூகுளில் 199.4 மில்லியன் தேடல்களுடன் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆவார். 


2024ல் அதிகம் தேடப்பட்ட முதல் 10 விளையாட்டு வீரர்கள்:


இமானே கெலிஃப்


மைக் டைசன்


லாமைன் யமல்


சிமோன் பைல்ஸ்


 ஜேக் பால்


நிகோ வில்லியம்ஸ்


ஹர்திக் பாண்டியா


ஸ்காட்டி ஷெஃப்லர்


ஷஷாங்க் சிங்

பிரபல பொலிவுட் நட்சத்திரங்களை முந்திய டோனி


 கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் டோனி பொலிவுட் சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன் , ஷாருக்கான் ஆகியோரை  பிராண்ட் அங்கீகாரத்திற்கான போட்டியில் தோற்கடித்துள்ளார்.

டோனியின் பிராண்ட் எண்டர்ஸ்மென்ட்கான ஒப்பந்தங்கள் 2024 முதல் பாதியில் கணிசமாக வளர்ந்துள்ளன என TAM Media Research இன் தரவு கூறுகிறது.

ஜனவரி மற்றும் ஜூன் 2024க்கு இடையில் அவர் 42 ஒப்பந்தங்களைப் பெற்றதாக தரவு காட்டுகிறது, 2023 இல் இதே காலகட்டத்தில் அவரிடம் 32 ஒப்பந்தங்கள் இருந்தன.

டோனி, கல்ஃப் ஆயில், யூரோகிரிப் டயர்ஸ், கிளியர்ட்ரிப், மாஸ்டர் கார்டு மற்றும் சிட்ரோயன் போன்ற பிராண்டுகளுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.

டோனியின் 42 பிராண்ட் ஒப்புதலுடன் ஒப்பிடுகையில், அமிதாப் பச்சன் 41 , ஷாருக்கான் 34 ப்ராண்டுகளுடன் ஒப்பந்தமிட்டுள்ளனர்.

பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் கான் 31 ஒப்பந்தங்களுடன் நான்காவது இடத்திலும், அக்‌ஷய் குமார் 28 ஒப்பந்தங்களுடன் ஐந்தாவது இடத்திலும், கியாரா அத்வானி 27 ஒப்பந்தங்களுடன் ஆறாவது இடத்திலும் உள்ளனர்

விளம்பரங்கள் மற்றும் சமூக ஊடக விளம்பரங்களைத் தவிர்த்து, TAM மீடியா ஆராய்ச்சியின் புள்ளிவிவரங்கள், பிராண்டுகள் மற்றும் வணிக விளம்பரங்களுக்கு மட்டுமே கணக்கு. கோலி, கங்குலி ஆகியோர் டாப் 10 இடத்தை பிடித்துள்ளனர்.

Friday, December 13, 2024

கனவை நனவாக்கிய குகேஷ்


 ‘’நான் world chess champion ஆவேன்’’ என்ற வார்த்தைகள் வெறும் கனவு இல்லை ” அது வெற்றி கனவு’’ என நிரூபித்துவிட்டார் world champion குகேஷ். அன்று 7 வயது சிறுவன் கூறிய கனவு இன்று நிஜமாகியிருக்கிறது.

உலக செஸ் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில்  18 வயது இளம்வீரர் குகேஷ் தொம்மராஜு  18 ஆவது சம்பியனானார். உலகின் இளம் செஸ் சாம்பியன் என்ற சாதனையையும் தட்டிச்சென்றுள்ளார்.

  ராஜாவுடன் தனது 58 வது நகர்வை மேற்கொண்ட பிறகு, நம்பிக்கையற்ற நிலையில், 17 வது உலக சாம்பியனான  சீனாவின்  டிங் லிரன் தோல்வியை ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு டை-பிரேக்கரில் இயன் நெபோம்னியாச்சியை வீழ்த்தி  டி லிரங் முடிசூட்டப்பட்டார், மேலும் அவர் வரலாறு மீண்டும் நிகழும் என்று நம்பியிருக்க வேண்டும். அவர் தனது இளைய எதிரியை விட அதிக அனுபவம் வாய்ந்தவர் என்பது மட்டுமல்லாமல், வேக சதுரங்கத்திலும் அவர் ஒரு சிறந்த சாதனை படைத்துள்ளார்.

குகேஷ்-க்கு இந்த ஆண்டு உலக சம்பியன்ஷிப் தொடரில்  நடப்பு சம்பியனான‌ டிங் லிரனுக்கு எதிராக குகேஷ் போட்டியிட்டார். இறுதிவரை கணிக்க முடியாத வகையில் இருவரும் காய்களை நகர்த்தினார்கள்.    14வது போட்டியில் குகேஷ் வெற்றி பெற்று உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.  விஸ்வநாதன் ஆனந்த்துக்குப் பிறகு உலக செஸ் சம்பியன்ஷிப் பட்டம் வென்ற இரண்டாவது வீரர்  என்ற சாதனையை படைத்துள்ளார்.

டி குகேஷ் 12 ஆண்டுகள் 7 மாதங்கள் மற்றும் 17 நாட்களில் இந்த சாதனையை அடைந்ததன் மூலம் சதுரங்க வரலாற்றில் மூன்றாவது இளைய கிராண்ட்மாஸ்டர் ஆனார்.

பாபி பிஷ்ஷர் ,  மேக்னஸ் கார்ல்சன் ஆகியோருக்குப்  பின் கேண்டிடேட்ஸ் போட்டிக்குத் தகுதி பெற்ற மூன்றாவது இளையவர் என்ற பெருமையையும் பெற்றார்.

சம்பியன்ஷிப் பட்டத்திற்கான குகேஷின் பயணம் அசாதாரணமானது அல்ல. இறுதி ஆட்டத்தில் 58 தீவிர நகர்வுகளுக்குப் பிறகு அவர் வெற்றி பெற்றார். டிங் லிரனின் 6.5 க்கு எதிராக 7.5 புள்ளிகளை எடுத்தார். 

இந்த சாதனையானது ரஷ்ய ஜாம்பவான் கேரி காஸ்பரோவின் 22 வயதில் உலக சம்பியனான சுமார் நான்கு தசாப்த கால சாதனையை முறியடித்தது.

இந்த வெற்றியின் மூலம்,  உலக செஸ் சம்பியன்களின் வரிசையில்   இணைகிறார். அவரது சாதனை, அத்தகைய புகழ்பெற்ற மற்றும் போட்டி வரலாற்றைக் கொண்ட ஒரு விளையாட்டில் அவரது சாதனையின் மகத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.

உலக செஸ் சம்பியன்  போட்டிக்கு  முன்னதாகவே குகேஷ்  வெற்றி பெறுவார் என அன்றைய சம்பியனான டி லிர‌ங் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் மாதம் செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா முதன்முதலாக தங்கம் வென்று சாதனை படைத்தது.அதிலும் குகேஷின் பங்கு இருந்தது குறிப்பிடத்தக்கது. பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, அர்ஜுன் எரிகைசி, பென்டலா ஹரிகிருஷ்ணா ஆகியோருடன் இணைந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் தங்க மகன் குகேஷ்.

 

விளையாட்டு,செஸ்,இந்தியா,சிங்கப்பூர்,சாதனை

திருமாவைச் சீண்டிய விஜய் ஆதவ் அர்ஜுனாவை வெளியேற்றிய திருமா

 தமிழக அரசியல் தலைவர்களால்  பெரிதும் மதிக்கப்படும் அண்ணல் அம்பேத்காரின்  புத்தக வெளியீடு  தமிழகத்தில் நடைபெறும் என அறிவிக்கபட்ட தினத்தில் ஆரம்பமான தமிழக அரசியல் பொறி புத்தக வெளியீட்டிலன்று தீப்பிளம்பாக வெடித்துச் சிதறியது.

அம்பேத்காரின்  பிறந்தநாளன்று நடைபெற்ற  புத்தக வெளியீடு விஜயின் அரசியல் கட்சி மாநாடாக நடந்து முடிந்துள்ளது. " எல்லோருக்குமான தலைவர் என்ற புத்தக வெளியீட்டு விழாவை தனது அரசியல்  மேடையாக மாற்றிவிட்டார்  விஜய். திராவிட முன்னேற்றக் கழகத்தை தக்கிப் பேசும் அரங்கமாக அம்பேத்காரின் புத்தக வெளியீட்டு விழா  மாறியது. திருமாவளவனிக் கட்சியின்  துணைப் பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா கைதட்டி மகிழ்ச்சியுடன்  விஜய்யை  உற்சாகப்படுத்தினார்.

ஆட்சியில் பங்கு  வேண்டும் என ஆதவ் அர்ஜுனா கொளுத்திப் போட்ட வெடியால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், திருமாவளவனுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டது.  ஸ்டாலினை திருமாவளவன்   சந்தித்ததால் சுமுக நிலை ஏற்பட்டது.ஆனாலும், ஆதவ் அர்ஜுனா அடங்கவில்லை.விஜயை  உசுப்பேற்றி விட்டார்.

உசுப்பேத்துறவன் கிட்ட உமென்றும், கடுப்பேத்துறவன் கிட்ட கம்மெண்டும்  இருக்கணும் என பாடம் எடுத்த விஜய் சன்னதம் ஆடிவிட்டார். விஜயை பேசியது சரியா தவறா என்ற விவாதம்  இன்றுவரை தொடர்கிறது.


 விகடனும், ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனமும்  இணைந்து வெளியிட்ட அம்பெத்கரின் நூலை ஸ்டாலின் வெளியிட, திருமாவளவன்  பெற்றுக்கொள்வார் எனத் திட்டமிடப்பட்டது.ஆதவ் அர்ஜுனாவின் ஏற்பாட்டில் விஜயையும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வார் என திட்டமிடப்பட்டது.  வெளியில் பகிரங்கப்படுத்தப்படாமல்  நடைபெற்ற இந்த  பேச்சு வார்த்தைகளை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பத்திரிகை  ஒன்று  பகிரங்கப்படுத்தியது. ஒரே மேடையில் திருமா விஜய் எனத் தலைப்பிட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறும் திருமாவலவன்  விஜயையுடன்  கூட்டணி சேர்வார் எனச் சாரப்பட செய்தியை  வெளியிட்டது. அந்தச் செய்தி பரபரப்பானதால் திருமாவளவன் தன்னிலை விளக்கம் அளிக்க  வேண்டிய நிலை ஏற்பட்டது.

  அனைவருக்குமான அம்பேத்கர் என்ற நூல்  சென்னயைில் வெளியிடப்பட்டது. தமிழக  வெற்றிக் க‌ழக‌ தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பிறகு அவர் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டத்தில் விஜய்யும் படு அனல் பறக்க பேசினார்.

 அம்பேத்கரையும் அவரது கொள்கைகளையும் மதித்துப் போற்றும் திருமாவாளவன்  புத்தக வெளியீட்டு விழாவில்  கலந்துகொள்ளப் போவதில்லை என முடிவெடுத்தார். இது இன்னொரு  பட்டிமன்றத் தலைப்புக்கு வித்தானது.

  அனைவருக்குமான அம்பேத்கர் என்ற நூல்  சென்னயைில் வெளியிடப்பட்டது. தமிழக  வெற்றிக் க‌ழக‌ தலைவர் விஜய் வெளியிட்டு சிறப்புரையாற்றினார். விக்கிரவாண்டி மாநாட்டுக்குப் பிறகு அவர் கலந்து கொண்ட முதல் கூட்டம் இது என்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. கூட்டத்தில் விஜய்  அனல் பறக்க பேசினார். 

ம‌க்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அடிப்படை சமூக நீதியான பாதுகாப்பைக் கூட உறுதி செய்ய முடியாத, கூட்டணிக் கணக்குகளை மட்டுமே நம்பி,  இறுமாப்புடன் 200ம் வெல்வோம் என்று எகத்தாளத்துடன் முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை..  நீங்க உங்களோட சுயநலத்துக்காக போட்டு வரும் உங்களது கூட்டணிக் கணக்குகள் அனைத்தையும் 2026ல் மக்களே மைனஸாக்கி விடுவார்கள் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளன் அவர்கள் அவங்களால இன்னிக்கு வர முடியாமப் போச்சு. அம்பேத்கர் அவர்களுடைய புத்தக விழாவில் கூட அவரால் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு கூட்டணிக் கட்சிகள் சார்பில் எத்தனை பிரஷர் இருக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தாலும் நான் இப்ப சொல்றேன்.. அவருடைய மனசு முழுக்க முழுக்க இங்க நம்மளோடதான் இருக்கும் என்று பேசினார் விஜய்.

அதுமட்டுமலாமல் மன்னராட்சி என திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சித்தார்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் விஜய்க்கு பதிலடி கொடுக்கிறார்கள்.திருமாவளவனின்  கட்சித் தலைவர்களும் விஜய்க்கு எதிராக  முழக்கமிட்டனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் ஆதவ் அர்ஜுனா சேர்ந்ததும் அவருக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பாட்டது. அப்போது சலசலப்பு எழுந்தது.திருமா அதனை சமாளித்துவிட்டார். அந்தப் புகைச்சல் இப்போது பற்றி எரிந்ததால் ஆதவ் அர்ச்ஜுவை திருமா ஒதுக்கி வைத்துள்ளார்.

ஸ்டாலினை முதல்வராக்கியதில் ஆதவ் அர்ச்ஜுனாவின் பங்கு மிக அதிகம். ஸ்டாலின் எதிர்க் கட்சித் தலைவராக  இருந்த போது அவரை முன்னிருத்தி பல திட்டங்களை ஆதவ் தீட்டினார்.பணம் வாங்கிக்கொண்டு ஸ்டாலினை  முதல்வராக்கிய ஆதவ் அர்ச்ஜுனா அவரை வீழ்த்துவதற்கு விஜயைப் பயன்படுத்தத் துடிக்கிறார்.

திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அந்தக் கட்சியை கடுமையாக விமர்சித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளரான ஆதவ் அர்ஜுனா தற்போது ஆறு மாதங்களுக்கு அந்த கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை திருமாவளவன்  அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் மருமகனான ஆதவ் அர்ஜுனா அரசியல் துறையில் பட்டம் பெற்றவர். தொடர்ந்து தேர்தல் வியூக நிறுவனங்களை நடத்தி வந்தார். வாய்ஸ் ஆப் காமன் நிறுவனத்திற்கு முன்னதாகவே ஒன் மைண்ட் இந்தியா நிறுவனத்தை நடத்தி வந்தவர்.

 " 2014ஆம் ஆண்டிலிருந்து திமுகவுக்காக பணியாற்றி வந்திருக்கிறார். குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலின் அப்போது நமக்கு நாமே பயணத்தை மேற்கொண்ட போது அதில் ஆதவ் அர்ஜுனாவின் பங்கு முக்கியமானது என கூறப்படுகிறது. 2016 தேர்தல் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும் தொடர்ந்து கிராம சபை கூட்டம் உள்ளிட்ட திமுகவின் பல்வேறு நிகழ்வுகளில் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து ஒன் மைண்ட் இந்தியா நிறுவனம், வாய்ஸ் ஆப் காமன் என்ற நிறுவனமாக மாறியது. 2021 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பணியாற்றிய அவர், பிரசாந்த் கிஷோரை வியூக பணிகளுக்காக அழைத்து வந்தவர் என்றும் சொல்லப்படுகிறது.

அவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேரப் போவதாக பேச்சு அடிபட்டது.  விடுதலை சிறுத்தைகள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். கட்சியில் சேர்ந்த உடனேயே அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. மேலும் கட்சியின் மாநாடுகள், நிகழ்ச்சிகள், சமூக வலைதள பக்கங்களின் கட்டுப்பாடு என முழுவதும் ஆதவ் அர்ஜுனா நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் வந்தது. அது மட்டுமல்லாமல் மது ஒழிப்பு மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்திக் காட்டினார் அர்ஜுனா. 

தமிழகத்தில் மன்னர் ஆட்சியை ஒழிக்க வேண்டும், ஒரு குடும்பம் திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என நேரடியாக திமுகவை விமர்சித்து பேச விடுதலை சிறுத்தைகள் கட்சியினரே அவருக்கு எதிராக திரும்பினார். 

  திமுக கூட்டணியில் பத்தோடு பதினொன்றாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திடீரென இவ்வளவு ஊடக வெளிச்சம் கிடைக்க ஆதவ் அர்ஜுனா முக்கிய காரணம் என்பதை திருமாவளவன் உணர்ந்திருந்தார். அதனால் தான் அவர் மீது ஒரு சாஃப்ட் கார்னர் இருந்தது. ஆனால் சக கட்சி நிர்வாகிகளை எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி ஆதவ் அர்ஜுனாவை இடநீக்கம் செய்ததாக கூறுகின்றனர் விசிக நிர்வாகிகள்.

அதே நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தில் ஆதவ் அர்ஜுனா இணைய இருப்பதாகவும் தகவல் உலாவுகிறது. ஏற்கனவே விஜய் மீது ஊடக வெளிச்சம் அதிகமாக இருக்கும் நிலையில் ஆதவ் அர்ஜுனா சேர்வது கூடுதல் பலமாக இருக்கும் என அந்த கட்சி தலைமை நம்புகிறது. எனவே விரைவில் ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவார் எனவும், இதற்காக திரை மறைவு பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.  அதே நேரத்தில் அரசியலில் அனுபவம் இல்லாமல் இருந்தாலும், தேர்தல் அரசியல், பகுப்பாய்வில் மிகுந்த நிபுணத்துவம் கொண்டவர் ஆதவ். எனவே எடுத்த எடுப்பிலேயே விஜய் கட்சியில் சேர மாட்டார். இன்னும் சிறிது காலம் பொறுத்திருந்து அதற்குப் பிறகு தனது முடிவை அறிவிப்பார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

 

 ரமணி

15/12/24

Thursday, December 12, 2024

உலக உதைபந்தாட அணியில் மெஸ்ஸி ரொனால்டோவுக்கு இடம் இல்லை


 FIFPRO ஆண்கள், பெண்கள் உலக 11  அனி வீரர்கலின்  பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்லது.

 70 நாடுகளைச் சேர்ந்த 28,000 தொழில்முறைஉதைபந்தாஅட்ட வீரர்கள்  வாக்கலித்து இந்த அணிகளைத் தேர்ந்தெடுத்துள்ளனர். 

  ஓய்வு பெற்ற டோனி குரூஸ் உட்பட ஆறு ரியல் மாட்ரிட் வீரர்கள்,நான்கு மான்செஸ்டர் சிட்டி நட்சத்திரங்கள் 2024 ஆண்கள் உலக 11 இல் சேர்க்கப்பட்டனர், டானி கார்வஜல், அன்டோனியோ ருடிகர், எடர்சன் , ரோட்ரி ஆகியோர் முதன் முதலாக உலக  11 அணியில் இடம் பிடித்துள்ளனர்.  

லூசி ப்ரோன்ஸ், மேரி ஏர்ப்ஸ், அலெக்ஸ் கிரீன்வுட், லாரன் ஜேம்ஸ், கெய்ரா வால்ஷ் ஆகியோருடன் பெண்கள் உலகம்  அணியில் உள்ளனர். 

பிரேறெஸில் வீராங்கனையான  மார்ட்டா 2021 ஆம் ஆண்டிற்குப் பிறகு   இந்த ஆண்டின் அணிக்குத் திரும்புகிறார், அதே சமயம் பார்பரா பண்டாவைச் சேர்ப்பதன் மூலம் பெண்கள் உலக 11 வது இடத்தைப் பிடித்த முதல் ஆப்பிரிக்க வீராங்கனை என்ற பெருமையை ஜம்பியா பெற்றுள்ளது.

லியோனல் மெஸ்ஸி அணியில் இடம் பெறாத 2006க்குப் பிறகு 2024 ஆம் ஆண்டு முதல் உலக 11 அணி இதுவாகும்.. அர்ஜென்டினாவைச் சேர்ந்த இவர், 17 முறை தனது சகாக்களால் ஆண்டின் சிறந்த அணியில் இடம்பிடித்த பிறகு, உலக 11 போட்டிகளில் பங்கேற்றதற்கான அனைத்து நேர சாதனையையும் படைத்துள்ளார்.

  பெண்கள்  அணி

கோல்கீப்பர்: மேரி ஏர்ப்ஸ் (மான்செஸ்டர் யுனைடெட்/பாரிஸ் செயின்ட் ஜெர்மைன், இங்கிலாந்து)

டிஃபெண்டர்கள்: லூசி வெண்கலம் (பார்சிலோனா/செல்சி, இங்கிலாந்து), ஓல்கா கார்மோனா (ரியல் மாட்ரிட், ஸ்பெயின்), அலெக்ஸ் கிரீன்வுட் (மான்செஸ்டர் சிட்டி, இங்கிலாந்து)

மிட்பீல்டர்கள்: ஐடானா பொன்மதி (பார்சிலோனா, ஸ்பெயின்), அலெ11 ஏ புட்டெல்லாஸ் (பார்சிலோனா, ஸ்பெயின்), கெய்ரா வால்ஷ் (பார்சிலோனா, இங்கிலாந்து)

ஃபார்வர்ட்ஸ்: பார்ப்ரா பண்டா (ஷாங்காய் ஷெங்லி/ஆர்லாண்டோ பிரைட், ஜாம்பியா), லிண்டா கைசெடோ (ரியல் மாட்ரிட், கொலம்பியா), லாரன் ஜேம்ஸ் (செல்சி, இங்கிலாந்து), மார்டா (ஆர்லாண்டோ பிரைட், பிரேசில்)

  ஆண்கள் உலக அணி

கோல்கீப்பர்: எடர்சன் (மான்செஸ்டர் சிட்டி, பிரேசில்)

டிஃபெண்டர்கள்: டானி கார்வஜல் (ரியல் மாட்ரிட், ஸ்பெயின்), விர்ஜில் வான் டிஜ்க் (லிவர்பூல், நெதர்லாந்து), அன்டோனியோ ரூடிகர் (ரியல் மாட்ரிட், ஜெர்மனி)

மிட்ஃபீல்டர்கள்: ஜூட் பெல்லிங்ஹாம் (ரியல் மாட்ரிட், இங்கிலாந்து), கெவின் டி புரூய்ன் (மான்செஸ்டர் சிட்டி, பெல்ஜியம்), டோனி குரூஸ் (ரியல் மாட்ரிட், ஜெர்மனி), ரோட்ரி (மான்செஸ்டர் சிட்டி, ஸ்பெயின்)

முன்கள வீரர்கள்: எர்லிங் ஹாலண்ட் (மான்செஸ்டர் சிட்டி, நார்வே), கைலியன் எம்பாப்பே (பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்/ரியல் மாட்ரிட், பிரான்ஸ்), வினிசியஸ் ஜூனியர் (ரியல் மாட்ரிட், பிரேசில்)

சவூதியில் உல‌கக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி


 2034  ஆம் ஆண்டு உலகக்  கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை சவூதி அரேபியா நடத்தும் என்று  பீபா  நிர்வாகக் குழு புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

2034  ஆண்டு போட்டியை நடத்தும் ஒரே ஒரு நாடாக சவூதி மட்டும் விண்ணப்பித்திருந்தது.   உலகக்கிண்ணப் போட்டியை கண்டங்களுக்கு இடையே சுழற்றுவதற்கான கொள்கையை பீபா  செயல்படுத்தியது. இது ஆசியா அல்லது ஓசியானியாவிலிருந்து ஏலங்களை மட்டுமே வரவேற்றது.

கடந்த ஆண்டு வேட்புமனுவைச் சமர்பிக்க ஏலதாரர்களுக்கு ஒரு மாதம் மட்டுமே  அனுமதி வழங்கியது. போட்டியில் இருந்த அவுஸ்ரேலியாவும் இந்தோனேசியாவும்  பின்வாங்கின.

சவூதி அரேபியா   ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் - ஜெட்டா, ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டிகள் ,மற்றும் WTA இறுதிப் போட்டிகள் உட்பட பல உயர்மட்ட  விளையாட்டுப் போட்டிகளை நடத்த சவூதி தயாராக  உள்ளது.


 உலகக்கிண்ண நூற்றாண்டு விழா 

  மொராக்கோ, ஸ்பெய்ன்,  போத்துகல் ஆகியன 2030 ஆம் ஆண்டு உலகக்கிண்ண  உதைபந்தாட்டப் போட்டியை கூட்டாக நடத்தும் என்றும் உறுதிப்படுத்தப்பட்டது. நூறு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில்    ஆர்ஜென்ரீனா ,  உருகுவே, பரகுவே   ஆகிய நாடுகளில் முதல் மூன்று போட்டிகள் நடைபெறும் எனவும்  தீர்மானிக்கப்பட்டது.

  உருகுவேயில் முதலாவது உலகக்கிண்ணப் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஆர்ஜென்ரீனாவும், உருகுவேயும் விளையாடின.  உலகக்கிண்ணப் போட்டியின்   நூற்றாண்டைக் குறிக்கும்  இந்த மூன்று நாடுகளும்   போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டின.