உலக டெஸ்ட் சம்பியனைத்தீர்மானிக்கும் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளன. இறுதிப் போட்டியில் விளையாடுவதற்கு புள்ளிப் பட்டியலில் இருக்கும் முதல் ஐந்து நாடுகளான. இந்தியா,தென் ஆபிரிக்கா,அவுஸ்திரேலியா,இலங்கை,நியூஸிலாந்து ஆகிய ஐந்து நாடுகள் முட்டி மோதுகின்றன.
2023 - 25 உலக
டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி தனது கடைசி தொடரில் விளையாடி வருகிறது. அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இன்னும் நான்கு போட்டிகள் மீதம் உள்ளன. இரண்டாவது போட்டி அடிலெய்டு மைதானத்தில் நடைபெறுகிறது.
அதே நேரத்தில் மேலும் இரண்டு டெஸ்ட் போட்டிகளும் நடைபெறுகின்றன.
தென்னாபிரிக்கா
-இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியும், நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியும் இதே நாட்களில் நடைபெறுகின்றன.
இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, தென்னாப்பிரிக்கா,நியூசிலாந்து ஆகிய அணிகள் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கான பந்தயத்தில் உள்ளன. இதில் நியூசிலாந்து அணிக்கான வாய்ப்பு மிகவும் குறுகியதாக உள்ளது. எனினும், அந்த அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற்றால், பிற அணிகளின் வெற்றி தோல்விகளை வைத்து இறுதிப் போட்டிக்கு முன்னேற சிறிய வாய்ப்பு கிடைக்கக்கூடும்.
இலங்கை , தென்னாப்பிரிக்காஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டியில் இலங்கைக்கு வெற்றி அவசியமாகிறது. ஒருவேளை இலங்கை அணி இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான பந்தயத்தில் இருந்து விலக நேரிடும்.
மறுபுறம்
இந்தியாவுக்கு எதிராக விளையாடும் ஆஸ்திரேலியாவும்
அதே நிலையில் உள்ளது. அவுஸ்திரேலியா இந்த தொடரில் குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் 90 சதவீதம் இறுதிப் போட்டிக்கான இடத்தை உறுதி செய்யலாம். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ள நிலையில் மீதமுள்ள நான்கு போட்டிகளில் மூன்று வெற்றிகளை பெற்றால் 100 சதவீதம் இந்திய அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு முன்னேறிவிடும்.
இந்த வாரம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் முக்கியமான வாரமாக மாறி உள்ளது. மேலும், இந்த மூன்று போட்டிகளில் தற்போதைய உலகின் நான்கு முன்னணி டெஸ்ட் விரர்களான விராட்
கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட் ,ஸ்டீவ்
ஸ்மித் ஆகியோர் விளையாட உள்ளனர்.
எதிர்கால
டெஸ்ட் நட்சத்திரங்களாக சுட்டிக் காட்டப்படும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா), ஹாரி ப்ரூக் (இங்கிலாந்து), கமிந்து மென்டிஸ் (இலங்கை), ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து), ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் (தென்னாப்பிரிக்கா) ஆகிய இளம் வீரர்களும் விளையாட உள்ளனர். எனவே, இந்த வாரம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைய உள்ளது.
ரமணி
8/12/24
No comments:
Post a Comment