ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கப்டன் யார் என்கிற கேள்வி எழுந்த நிலையில் அஜிங்கிய ரகானே நியுமிக்கப்படலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.
ஜெட்டாவில்
நடந்த ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அஜிங்கிய ரகானேவை அவருடைய அடிப்படை
விலையான 1.5 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காததால்
ரகானே உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த இரண்டு சீசன்களாக சென்னை
சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அவரை தற்போது கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
நடப்பு
சம்பியனான கொல்கத்தா அணியின் புதிய கேப்டன் யார் என்கிற கேள்வி ஏழத்தின் போதே எழுந்தது.
சென்ற வருடம் கொல்கத்தா அணியின் வெற்றிக் கப்டனான ஸ்ரேயஸ் ஐயரை இந்த நடந்த மெகா ஏலத்தில்
பஞ்சாப் கிங்ஸ் அவரை 26.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால் கொல்கத்தா அணிக்கு ஒரு
புது கப்டன் தேவை என்கிற நிலை உள்ளது.
இதற்கிடையில்
கொல்கத்தா அணி ஆல் ரவுண்டரான வெங்கடேஷ் ஐயரை 23.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. இதனால்
அவர் தான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கப்டனாக நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டு
வந்தது.
ஆனால்
கொல்கத்தா வேறு ஒரு திட்டம் வைத்திருந்தாக கூறப்படுகிறது. அனுபவம் வாய்ந்த அஜிங்கியா
ரகானேவை கப்டன் ஆக்குவதற்காக தான் கொல்கத்தா அணி அவரை ஏலத்தில் எடுத்ததாக கூறப்படுகிறது.
36 வயதான ரகானேவை ஐபிஎல் மற்றும் இந்திய அணிக்காக கப்டனாக செயல்ப்பட்ட அனுபவம் உள்ளதால்
புதிய வீரரை கப்டனாக நியமிப்பதைவிட அனுபவம் வாய்ந்த ரகானேவை கப்டனாக நியமிக்க கொல்கத்தா
அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
தற்போது நடந்து சையத் முஷ்டாக் அலி கோப்பையில் மும்பை அணிக்கு ஸ்ரேயஸ் ஐயர் கப்டனாக இருந்தாலும், ரகானேவின் தனது அதிரடி ஆட்டம் மூலம் இந்த தொடரில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்தி வருகிறார். இதன் காரணமாகவே கொல்கத்தா அணி அவரை கப்டனாக நியமிக்க வேண்டும் என்கிற முடிவில் இருப்பதாக தெரிகிறது.
No comments:
Post a Comment