2034 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை சவூதி அரேபியா நடத்தும் என்று பீபா நிர்வாகக் குழு புதன்கிழமை உறுதிப்படுத்தியது.
2034 ஆண்டு போட்டியை நடத்தும் ஒரே ஒரு நாடாக சவூதி மட்டும்
விண்ணப்பித்திருந்தது. உலகக்கிண்ணப் போட்டியை
கண்டங்களுக்கு இடையே சுழற்றுவதற்கான கொள்கையை பீபா செயல்படுத்தியது. இது ஆசியா அல்லது ஓசியானியாவிலிருந்து
ஏலங்களை மட்டுமே வரவேற்றது.
கடந்த
ஆண்டு வேட்புமனுவைச் சமர்பிக்க ஏலதாரர்களுக்கு ஒரு மாதம் மட்டுமே அனுமதி வழங்கியது. போட்டியில் இருந்த அவுஸ்ரேலியாவும்
இந்தோனேசியாவும் பின்வாங்கின.
சவூதி அரேபியா ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் - ஜெட்டா, ஹெவிவெயிட் குத்துச்சண்டை போட்டிகள் ,மற்றும் WTA இறுதிப் போட்டிகள் உட்பட பல உயர்மட்ட விளையாட்டுப் போட்டிகளை நடத்த சவூதி தயாராக உள்ளது.
உலகக்கிண்ண நூற்றாண்டு
விழா
மொராக்கோ, ஸ்பெய்ன், போத்துகல் ஆகியன 2030 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை கூட்டாக நடத்தும் என்றும்
உறுதிப்படுத்தப்பட்டது. நூறு ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் ஆர்ஜென்ரீனா , உருகுவே, பரகுவே ஆகிய நாடுகளில் முதல் மூன்று போட்டிகள் நடைபெறும்
எனவும் தீர்மானிக்கப்பட்டது.
உருகுவேயில் முதலாவது உலகக்கிண்ணப் போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் ஆர்ஜென்ரீனாவும், உருகுவேயும் விளையாடின. உலகக்கிண்ணப் போட்டியின் நூற்றாண்டைக் குறிக்கும் இந்த மூன்று நாடுகளும் போட்டிகளை நடத்த ஆர்வம் காட்டின.
No comments:
Post a Comment