அமித்ஷவுக்கு
எதிரான போராட்டங்கள் நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் பரந்தளவில் நடைபெறுகின்றன.
ஆளும்
கட்சி எம்பிக்கள் அமித்ஷாவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர். கடந்த
வியாழக்கிழமை இந்திய நாடாளுமன்றம் போர்க்களமாக மாறியது.
நாடாளுமன்ற
வளாகத்தில் இந்திய கூட்டணி எம்பிக்களுக்கும் பாஜக எம்பிக்களும் இடையே வியாழக்கிழமை கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாஜக எம்பி
பிரதாப் சாரங்கியின் மண்டை உடைந்து இரத்தம் வழிந்தோடிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு
செல்லப்பட்டார். இம்மோதலில் படுகாயமடைந்த மற்றொரு பாஜக எம்பி முகேஷ் ராஜ்புத், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்றத்துக்குள்
நுழைய முயன்ற தம்மை பாஜக எம்பிக்கள் தடுத்து தள்ளிவிட்டதாக லோக்சபா எதிர்க்கட்சித்
தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். ஆனால் ராகுல் காந்திதான் தம்மை தடுத்து
தள்ளிவிட்டதாக பாஜக எம்பி பிரதாப் சந்திர சாரங்கி புகார் கூறினார்.
நாடாளுமன்றம்
கூடுவதற்கு முன்பாக பாஜக எம்பிக்கள் ஒன்று திரண்டு, அம்பேத்கரை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது;
அவமானப்படுத்துகிறது என குற்றம்சாட்டி போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ராகுல் காந்தி,
பிரியங்கா காந்தி தலைமையில் இந்திய கூட்டணி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் பேரணியாக
சென்று போராட்டம் நடத்தினர். அப்போது ராகுல் காந்தி, பிரியங்கா இருவரும் நீல நிற உடை
அணிந்திருந்தனர். அம்பேத்காரின் ஆதரவாளர்கள்
நில நிற உடை அணிவது வழமையானது.
ராகுல் காந்திதான் தம்மை கீழே தள்ளிவிட்டதாக குற்றம்
சாட்டினார். ஆனால் நாடாளுமன்றத்துக்குள் நுழைய
இருப்பது ஒரு வழிதான்.. அந்த வழியே செல்லவிடாமல் பாஜக எம்பிக்கள் தடுத்து தள்ளிவிட்டனர்
என ராகுல் காந்தி தெரிவித்தார். அரசியல் சாசனத்தையே தாக்குகிறவர்கள் எங்களை தாக்குகின்றனர்;
இது எங்களுக்கு பிரச்சனை அல்ல. அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும்
என்பதுதான் எங்களுக்கு முக்கியம் என்றார்.
நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு தின சிறப்பு விவாதம்
இரண்டு நாட்களாக நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த எதிர்க்கட்சி எம்பிக்கள்
மத்திய அரசு மீது சரமாரியான விமர்சனங்களை அடுக்கியிருந்தனர்.
இந்த
விமர்சனங்களுக்கு பதில் அளித்து பேசிய அமித்ஷா "அம்பேத்கரை காங்கிரஸ் புறக்கணித்தது எப்படி?
பாஜக பெருமைப்படுத்தியது எப்படி? எனப் பட்டியலிட்டு "அம்பேத்கர், அம்பேத்கர் என்று முழக்கமிடுவது
இப்போது ஃபேஷனாகிவிட்டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால்,
சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் எடுத்துக்கொள்வதில்
பாரதிய ஜனதா கட்சி மகிழ்ச்சியடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்வுகள் குறித்தும்
காங்கிரஸ் பேச வேண்டும்" என்றார்.
அமித்ஷாவின்
இந்தப் பேச்சி எரியும் நெருப்பில் எண்ணெயை விட்டது போல் மாறிவிட்டது.
நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்களவையில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவதூறாக பேசியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
அமித்ஷாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, அவர்
பதவி விலக வலியுறுத்தி நாடு முழுவதும் காங்கிரஸ்
கட்சி போராட்டத்தை நடத்தி யது. தமிழ்நாட்டில் திமுக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
சென்னை மாநில கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அமித்ஷாவுக்கு எதிராக போராட்டம்
நடந்தது.
நாடாளுமன்ற
குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை மத்திய அரசு
செவி கொடுத்து கேட்காமல் இருந்து வருகிறது. குறிப்பாக அதானி விஷயத்தில் உரிய விவாதம்
நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தல்கள் எழுந்த போது, அவையை ஒத்திவைத்து அதற்கு மத்திய
அரசு தனது பாணியில் பதிலளித்ததாக காங்கிரஸ் எம்பிக்கள் விமர்சித்துள்ளனர்.
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக்
கவலைப்பட வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
அம்பேத்கர் குறித்த விவாதங்கள் முன்னேற்றத்தை நோக்கியதாக
இருக்க வேண்டுமே தவிர, எங்களைப் போல அம்பேத்கரைப் பெருமிதத்துடன் பின்பற்றுகிறவர்களைப்
புண்படுத்துவதாக இருக்கக்கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹசான் தெரிவித்துள்ளார்.
டாக்டர்
அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை
ஏற்படுத்தும். நிச்சயமாக மக்கள் அவர்களை நிராகரிப்பார்கள் என்று முன்னாள் அதிமுக அமைச்சர்
டி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அம்பேத்காரைப்
பற்றிய அமித்ஷாவின் பேச்சு தமிழகத்தைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.
நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை காங்கிரஸ் - பாஜக எம்பிக்கள்
போராட்டம் நடத்தியதால் திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பாஜகவின் இரண்டு எம்பிக்களின்
மண்டை உடைந்தது. ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்றக் கலவரத்துக்கு ராகுல்தான் காரணம் என்று
குற்றம் சுமத்திய பாரதிய ஜனதா குற்றம் சாட்டியது. ராகுல் காந்தி மீது ஆறு பிரிவுகளில்
வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராகுல் காந்தி மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய
வேண்டும் என்று பாஜக புகார் கொடுத்தது.
அதனை பொலிஸ் நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம்
25ம் திகதி தொடங்கியது. இந்த குளிர்கால கூட்டத்தொடர் வெள்ளிக்கிழமையுடன் முடிவ்டைந்தது.
மத்திய
உள்துறை அமைச்சர் அமித்ஷா ராஜ்யசபாவில் அம்பேத்கர் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி
உள்ளது. இதனால் அமித்ஷா மன்னிப்பு கோரி தனது மத்திய அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய
வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது
அமித்ஷாவுக்கு எதிரான போராட்டம் இப்போதைக்கு ஓய்வு பெறாது போல் தெரிகிறது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கும்போது அமித்ஷாவுக்கு எதிரான போராட்டம் மீண்டும் உயிர் பெறும்.
No comments:
Post a Comment