கிறிக்கெற் உலகில் தனக்கென ஒரு தனி இராஜ்ஜித்தை உருவாக்கி ஆட்சி செய்த இந்திய சுழற்பந்து வீரர் கடந்த புதன்கிழமை சர்வதேச கிரிக்கெற்றில் இருந்து ஓய்வுபெற்றார்.
பிரிஸ்பேனில்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட் முடிவடைந்ததைத்
தொடர்ந்து, இந்திய ஆஃப் ஸ்பின்னர் அஷ்வின்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கேரம் போல் ஸ்பெஷலிஸ்ட். சுழற்பந்து வீச்சில் இவருக்கென
ஒரு தனி இடம் உண்டு. விக்கெட்டை எடுக்க இவர் சுழற்பந்தில் செய்யும் மாயாஜாலம் அனைத்தும்
இவர் சொல் பேச்சை கேட்கும். இடதுகை துடுப்பாட்ட விரார்களுக்கு சிம்ம சொப்பனமாக்த் திகழ்ந்தவர்.
106 போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி, அனில்
கும்ப்ளேவுக்கு (619 விக்கெட்டுகள்) பின்தங்கிய நிலையில், டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுக்காக
அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அஸ்வின் பெற்றுள்ளார்.
ஒரு
நாள் கிரிக்கெட்டில் அஸ்வின் 181 ஆ போட்டிகளில்
விளையாடி 228 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சிறந்த பந்துவீச்சில் 4/25 வீழ்த்தியுள்ளார். அவர் 63 இன்னிங்ஸ்களில் ஒரு அரைசதம்,
65 ஓட்டங்களுடன் 16.44 சராசரியில் 707 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய அணிக்காக ஒருநாள்
போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் 13வது இடம் பிடித்தார்.
65 ரி20 போட்டிகளில் 23.22 சராசரியில் 72 விக்கெட்டுகளை
வீழ்த்தினார். ரி20யில் இந்தியாவுக்காக அதிக
விக்கெட் எடுத்த ஆறாவது வீரர் ஆவார் அனைத்து
வடிவங்களிலும் இந்தியாவின் இரண்டாவது அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர். இந்தியாவுடன்
2011-ன் 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் வென்ற அணியில்
இருந்துள்ளார்.
அஸ்வின்
2009 இல் அறிமுகமானதிலிருந்து ஐந்து ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதில் சென்னை
சூப்பர் கிங்ஸ் அஸ்வினின் முதல் ஐபிஎல் அணி ஆகும். 2008 முதல் 2015 வரை ரைசிங் புனே
சூப்பர்ஜெயன்ட் சிஎஸ்கேக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பிறகு 2016 இல் ஒரு
சீசனில் விளையாடினார். அடுத்ததாக, பஞ்சாப் கிங்ஸில் அஸ்வின் 2018 முதல் கேப்டனாக இருந்தார்.
அடுத்து டெல்லி கேபிடல்ஸ் 2020 முதல் 2022 வரை இரண்டு சீசன்களில் விளையாடினார். மீண்டும்
ராஜஸ்தான் ராயல்ஸ் 2022 இல் விளையாடினார். பின்னர் 2025 ஏலத்திற்கு வந்தார். ஐபிஎல்
2024 தொடங்குவதற்கு முன்பு 171 விக்கெட்டுகளுடன் ஐபிஎல் வரலாற்றில் முதல் ஐந்து விக்கெட்டுகள்
எடுத்தவர்களில் அஸ்வின் ஒருவராக இருந்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் (போட்டிகளின் அடிப்படையில்) 250, 300 மற்றும் 350 விக்கெட்டுகளை வேகமாக எட்டியவர் அஸ்வின். 50, 100, 150, 200, 250, 300, 350, 400, 450 மற்றும் 500 டெஸ்ட் விக்கெட்டுகளை (போட்டிகளின் அடிப்படையில்) எட்டிய அதிவேக இந்தியர். ஒரே டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த மற்றும் ஐந்து விக்கெட்டுகளை நான்கு முறை எடுத்த ஒரே இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். 50 ரி20 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர். டெஸ்ட்களில் அதிக நாயகன் விருதுகள் (11) பெற்றவர். டெஸ்டில் இரண்டாவது அதிக ஐந்து விக்கெட்டுகள் (37), வேகமாக 25 ஐந்து விக்கெட்டுகள் எடுத்தவர் அஸ்வின். இந்தியாவுக்காக டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவது அதிக விக்கெட் எடுத்தவர் (522). ஒரு காலண்டர் ஆண்டில் (2016) 500 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகள் எடுத்த இரண்டாவது இந்தியர் (199) ஒரு சீசனில் அதிக விக்கெட் எடுத்தவர் (82) ஆவார்.
தமிழ்நாட்டில் இருந்து 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய
முதல் வீரர் அஸ்வின் தான். அஸ்வினின் மோசமான செயல்பாடும் ஒரு காரணம். அதேபோல் அஸ்வினின்
இடத்தை எளிதாக வாஷிங்டன் சுந்தரால் நிரப்ப முடியும் என்று புரிந்த சில போட்டிகளிலேயே
ஓய்வை அறிவித்து சென்றுள்ளார்.
அவுஸ்திரேலியாவில்
முதல் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பு பெற்றார். இரண்டாவது
போட்டியில் அவர் நீக்கப்பட்டு ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
அஸ்வினால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற நிலையில் மூன்றாவது போட்டியில்
ரவீந்திர ஜடேஜா அணியில் வாய்ப்பு பெற்றார்.
அஸ்வினுக்கு
இந்த தொடரில் ஆட வாய்ப்பே வழங்காமல்.. அதிலும் முறையாக ஃபேர்வெல் கூட தராமல் போனது
கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
"
அஸ்வினுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அளிக்கப்பட்ட வாய்ப்பும் அவர் ஓய்வு பெறப்
போகிறார் என்பதை அறிந்த பின்னரே அளிக்கப்பட்டது என தற்போது தெரிய வந்துள்ளது. அந்த
வகையில் ஆஸ்திரேலியாவில் அஸ்வினை பிளேயிங் லெவனில் தேர்வு செய்யப் போவதில்லை என தெரிந்தே
தான் இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்து இருக்கிறது. தான் புறக்கணிக்கப்படுகிறோம்
என்பதை உணர்ந்தே அஸ்வின் இரண்டாவது போட்டிக்கு முன்பே ஓய்வு பெறும் முடிவை .எடுத்து
இருக்கிறார். பின்னர் அவருக்கு ஒரு போட்டியில் மட்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தது.
பின்னர் மீண்டும் அவர் நீக்கப்பட்டார்.
அஸ்வினுக்கு
பெரிய ஃபேர்வெல் வழங்கப்படவில்லை. ஒரு காலத்தில் நெஹ்ராவிற்கு தோனி சிறப்பாக ஃபேர்வெல்
கொடுத்தார். பார்ம் இழந்தவரை சிஎஸ்கேவில் எடுத்து பார்மிற்கு கொண்டு வந்து.. அவரை இந்திய
அணியில் எடுத்து நல்ல சிறப்பான கடைசி மேட்ச் ஃபேர்வெல் கொடுத்தார். ஆனால் பார்மில்
இருக்கும்.. அணியில் இருக்கும் ஒருவருக்கு.. அஸ்வின் போன்ற தலைசிறந்த வீரருக்கு ரோஹித்
- கம்பீர் அணியால் ஃபேர்வெல் தர முடியவில்லை.
சிலம்பு
21/12/24
No comments:
Post a Comment