நியூசிலாந்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. ஆனால் அந்த போட்டியில் இரண்டு அணிகளும் தலா 3 ஓவர்கள் குறைவாக நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசின. அதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் அபோட்டியின் சம்பளத்திலிருந்து தலா 15% அபராதத்தை ஐசிசி அறிவித்துள்ளது. 2025 உலக டெஸ்ட் சம்பியன்ஸ் புள்ளிப்பட்டியலில் ஏற்கனவே அந்த அணிகள் பெற்றிருந்த புள்ளிகளில் இருந்து தலா 3 புள்ளிகளையும் ஐசிசி அதிரடியாக கழித்துள்ளது. அதன் காரணமாக 2025 டெஸ்ட் சம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை நியூசிலாந்து இழந்துள்ளது.
இந்நிலையில்
ஐசிசியின் இந்த முடிவுக்கு இங்கிலாந்து கப்டன் பென் ஸ்டோக்ஸ் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் அதிகமாக சுழல் பந்துகள்
வீசப்படுவதால் நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடித்து விடுவதாக அவர் கூறியுள்ளார். ஆனால்
இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற வெளிநாடுகளில் அதிகமாக வேகப்பந்து வீச்சாளர்கள் பந்து
வீசுவதால் தாமதம் ஏற்படுவதாக பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
2022 ஆஷஸ் தொடரின் லார்ட்ஸ் போட்டியில் இது போன்ற
தண்டனை கொடுக்கப்பட்ட போது ஐசிசியிடம் கேள்வி எழுப்பியதாக அவர் கூறியுள்ளார். அதற்கு
இன்னும் பதில் வராததால் தற்போதைய அபராதத்தை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட முடியாது என்றும்
அவர் அறிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஆஷஸ் தொடரின் போது முதல் முறையாக இது பற்றிய கேள்வியை நான் போட்டி நடுவர்களிடம் எடுத்துச் சென்றேன். கடந்த வருடம் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஓவர் ரேட் சம்பந்தமான தாளில் நான் கையெழுத்திடவில்லை. அதற்காக ஐசிசியிடம் இருந்து இன்னும் பதில் கிடைக்கவில்லை. அது கிடைக்கும் வரை நான் கையெழுத்திட போவதில்லை என்று சொல்லிவிட்டேன்” என்றார்.
No comments:
Post a Comment